Just In
- 8 hrs ago
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்... பழிவாங்குதல்..அன்பின் காவியம்.. ‘நாகினி 5’
- 8 hrs ago
ரெட்ரோ லுக்கில் அசத்தும் ரன்வீர் சிங்.. அசந்து போன ரசிகர்கள்!
- 9 hrs ago
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
- 10 hrs ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
Don't Miss!
- Automobiles
ஏன் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும்? சமூக வலை தளங்களில் வைரலாகும் தமிழக அதிகாரியின் வீடியோ!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 22.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாம்…
- News
இன்றைய தேதியில் இந்தியாவில் தேர்தல் நடந்தால்.. என்டிஏ கூட்டணி 321 இடங்களை வெல்லும்.. அதிரடி சர்வே..!
- Sports
அண்ணனுக்கு ஒரு ராபின் உத்தப்பா.. "யூத்" வீரரை விலைக்கு வாங்கிய சிஎஸ்கே.. இதுதான் அந்த ஸ்பார்க்கா தல?
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அட கடவுளே.. உங்க வெயிட்டுக்கு முட்டை மேல உட்காரலாமா பயில்வான்.. நொறுங்கிய முட்டை.. ஆட்டம் க்ளோஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் முட்டை டாஸ்க்கில் தனக்கு கொடுக்கப்பட்ட முட்டை மீது அமர்ந்து முதலுக்கே மோசம் செய்தார் பாலாஜி.
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக கோழிப்பண்ணை கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் ஒவ்வொரு சுற்றிலும் இரண்டு பேர் கோழிகளாகவும் மற்ற ஹவுஸ்மேட்ஸ் நரிகளாகவும் உள்ளனர்.

முட்டையை தொட்டால்
நரிகளான ஹவுஸ்மேட்ஸ் கோழிகள் வைத்திருக்கும் முட்டையை தொட வேண்டும். நரிகள் முட்டையை தொட்டுவிட்டால் கோழிகளும் நரிகளாகிவிடும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆரியும் பாலாஜியும்..
நேற்றைய டாஸ்க்கின் முதல் சுற்றில் ஆரியும் பாலாஜியும் கோழிகளாக இருந்தனர். இதில் ஆரியின் முட்டையை அனிதா தொட்டதால் ஆரியும் நரியானார். ஆனால் நரிகளுடன் முதல் சுற்றில் பேரம் பேசி முட்டையை பாதுகாத்தார் பாலாஜி.

முட்டை மீது உட்கார்ந்து..
அடுத்த ரவுண்டில் நரியாக இருந்த ஆஜித்திடம், நீ முதலில் என் முட்டையை தொட்டு விடு கரன்சியில் ஷேர் பண்ணிக்கலாம் என டீலிங் வைத்தார். ஆனால் அடுத்த ரவுண்டு ஆட்டம் தொடங்கிய வேகத்தில் தனது முட்டையை பாதுகாப்பதாக நினைத்த அதன் மீது அமர்ந்தார் பாலாஜி.

நொறுங்கிய முட்டை
அவருடைய வெயிட்டுக்கு அதனை தாங்க முடியாமல் நொறுங்கிப்போனது முட்டை. இதனால் அதிர்ச்சியடைந்த பாலாஜி, பிக்பாஸிடம் நடந்ததை கூறினார். அதனைக் கேட்ட பிக்பாஸ் முட்டையை உடைத்ததால் பாலாஜி அடுத்த ரவுண்டு தொடர முடியாது என்றார்.

ஆஜித்துக்கும் முட்டை
மேலும் நல்லா விளையாடுனீங்க பாலாஜி, ஆனால் முட்டையை உடைத்ததால் நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டீங்க என்றும் கூறினார் பிக்பாஸ். உடைந்த முட்டையை தொட்ட ஆஜித்தையும் அழைத்த பிக்பாஸ், அது கணக்கில் இல்லை என்றார்.