மீண்டும் தொடங்கிய கால் டாஸ்க்.. ஆரியை வெறுப்பேற்றும் பாலா.. வேண்டாத பேச்சு.. பீதியை கிளப்பும் புரமோ!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.

Recommended Video

Captaincy task-ல் உண்மையில் யார் Winner தெரியுமா? BALA vs Jithan RAMESH

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கால் சென்டர் டாஸ்க் கடந்த வாரம் தொடங்கியது.

இதில் பாதி ஹவுஸ்மேட்ஸ் கால் சென்டர் ஊழியர்களாகவும் மீதி பாதி ஹவுஸ்மேட்ஸ் வாடிக்கையாளர்களாகவும் இருந்தனர்.

பிரச்சனையை தீர்க்க

பிரச்சனையை தீர்க்க

வாடிக்கையாளராக இருந்த ஹவுஸ்மேட்ஸ், தங்களுக்கு இடையிலான பிரச்சனை குறித்து பேசினர். ஹவுஸ்மேட்ஸ் இடையிலான பிரச்சனையை தீர்க்கும் வகையில் இந்த டாஸ்க் கொடுக்கப்பட்டது.

ரணகளமான வீடு

ரணகளமான வீடு

ஆனால் இந்த டாஸ்க்கால் பிரச்சனைகள் புதிது புதிதாய் முளைத்ததே தவிர பிரச்சனைகள் தீர்ந்த பாடில்லை. இந்த டாஸ்க்கால் கடந்த வாரம் பிக்பாஸ் வீடே ரணகளமாக இருந்தது. இந்த டாஸ்க்கை மையப்படுத்தியே பல்வேறு பிரச்சனைகள் வெடித்தன.

எதிராய் திருப்பினார்

எதிராய் திருப்பினார்

கடந்த வாரம் ஆரிக்கும் பாலாஜிக்கும் நடந்த பிரச்சனைதான் பெரிதாக பார்க்கப்பட்டது. ஆரியை நேர்மையில்லாதவர் என காட்ட பாலாஜி மொத்த ஹவுஸ்மேட்ஸையும் அவருக்கு எதிராய் திருப்பினார்.

தட்டிக் கேட்கவில்லை

தட்டிக் கேட்கவில்லை

போதாகுறைக்கு வேற எதையாவது நீட்டி பேசுவேன் என்ற பாலாஜி, ஆரியை நோக்கி தனது காலை நீட்டி பேசினார். கடந்த வார இறுதியில் ஹவுஸ்மேட்ஸ்களை சந்தித்த கமல், காலை நீட்டி பேசியது குறித்தும் ஆரியை தரக்குறைவாக பேசியது குறித்தும் கொஞ்சம் கூட தட்டிக் கேட்கவில்லை.

தடவி கொடுத்த கமல்

தடவி கொடுத்த கமல்

சனத்தை அட்ஜெஸ்ட்மென்ட் செய்து அழகிப் பட்டத்தை வென்றார் என்று கூறியதற்கும், அதனை தொடர்ந்து தறுதலை என்றும் அவளே இவளே என்றும் கூறியது குறித்துமே கமல் பெரிதாக பாலாஜியை விசாரிக்கவில்லை. சாதாரணமாக தடவிதான் கொடுத்தார்.

நேர்மையில்லாதவர்..

நேர்மையில்லாதவர்..

அதே வேலையையே ஆரி விவகாரத்திலும் செய்தது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. நேற்றைய எபிசோடிலும் கூட ஆரியை நேர்மையில்லாதவர், பொய் பேசுகிறார் என பல இடங்களில் பலரிடம் இழிவாக பேசினார்.

ஆரிக்கு கால் செய்து..

ஆரிக்கு கால் செய்து..

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது. இதன் மூலம் பிக்பாஸ் வீட்டில் மீண்டும் கால் சென்டர் டாஸ்க் தொடங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. இதில் வாடிக்கையாளரான பாலாஜி, கால் சென்டர் ஊழியரான ஆரிக்கு கால் செய்துள்ளார்.

காலிப்பண்ணி விளையாட மாட்டேன்

காலிப்பண்ணி விளையாட மாட்டேன்

அப்போது பேசும் பாலாஜி, ஹாய் பிரதர் நான் உங்களுடைய பெரிய ஃபேன். ஆனா பிக்பாஸ் வீட்டுக்கு வெளியே. நான் யாரையும் காலிப்பண்ணி விளையாட மாட்டேன். எல்லாரும் ஒன்னா வாங்க சேர்ந்து விளையாடலாம். அதுதான் என்னுடைய மெண்டாலிட்டின்னு அடிக்கடி சொல்வீங்க.

கெட்டவன்னு சொல்றவன நம்பலாம்

கெட்டவன்னு சொல்றவன நம்பலாம்

ஆரி யாரையும் காலி பண்ணி விளையாடனும்னு நினைக்கலையா? நான் கெட்டவன்னு சொல்றான்ல அவன நம்பிடலாம், நான் நல்லவன்னு சொல்றான் பாருங்க அவன கூட நம்பிடலாம். ஆனா நான் மட்டும்தான் நல்லவன்னு சொல்றான் பாருங்க அவன நம்பவே முடியாது.. இவ்வாறு பேசுகிறார் பாலாஜி.

முழுக்க முழுக்க பேக்கேஜ்

முழுக்க முழுக்க பேக்கேஜ்

நேற்றைய எபிசோடில் நான் ஆரியுடனான எல்லா பேக்கேஜையும் கழட்டி வைத்துவிட்டேன். ஆனால் அவர்தான் பேக்கேஜ் வைத்திருக்கிறார் என்று கூறினார் பாலாஜி. ஆனால் இன்றைய கால் டாஸ்க்கில் அவர் பேசுவதை பார்க்கும்போது முழுக்க முழுக்க பேக்கேஜ் வைத்துக்கொண்டு வேண்டும் என்றே பேசுவது தெரிகிறது.

எப்படி பதில் சொல்லப் போகிறார்?

எப்படி பதில் சொல்லப் போகிறார்?

பாலாஜியிடம் பேக்கேஜ் இல்லாவிட்டால் இப்படி பேச வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி வருகின்றனர். பாலாஜி பேசும் ஒவ்வொரு வார்த்தையுமே ஆரியை வெறுப்பேற்றும் வகையிலேயே உள்ளது. பாலாஜியின் கேள்விக்கு ஆரி எப்படி பதில் அளிக்கப் போகிறார் என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X