ஷிவானியை அலேக்காய் தூக்கிச்சென்ற பாலா.. ரம்யாவை தூக்கிச் சென்ற சோம்.. நல்லா பிரிச்சுக்கிட்டாங்கப்பா!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ரோப் டாஸ்க்கை முடித்து கீழே விழுந்த ஷிவானி மற்றும் ரம்யாவை பாலாஜியும் சோமும் அலேக்காய் தூக்கிச் சென்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வரும் வாரம் ஃபினாலே வாரமாக இருக்கவுள்ளது.
இதனை முன்னிட்டு நேரடியாக ஃபினாலேவுக்குள் செல்லும் ஒரு வாய்ப்பு ஒரு போட்டியாளருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஃபினாலே டிக்கெட்
இதற்கான டிக்கெட்டை பெற 9 டாஸ்க்குகள் நடத்தப்பட்டன. இதில் அதிக மதிப்பெண்களை பெறும் போட்டியாளரே ஃபினாலேவுக்கான டிக்கெட்டை பெற முடியும் என அறிவிக்கப்பட்டது.

ரம்யாவும் ஷிவானியும்
இந்நிலையில் இதற்கான இறுதி டாஸ்க்காக ரோப் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் ஆண் போட்டியாளர்களே தாக்குப் பிடிக்க முடியாமல் விட்டுச் சென்ற நிலையில், ஷிவானியும் ரம்யாவும் கடைசி வரை தாக்குப்பிடித்தனர்.

கயிரை விட்ட ரம்யா
இதற்காக சிங்கப் பெண்ணே பாடலை போட்டு பெருமை படுத்தினார் பிக்பாஸ். இதனைக் கேட்டு எமோஷனலாகி கண்ணீர்விட்டனர் இருவரும். இந்நிலையில் இந்த டாஸ்க்கில் 4 மணிநேரம் 46 நிமிஷம் கடந்த நிலையில் ரம்யா கயிரை விட்டு கீழே விழுந்தார்.

பதறிய ஹவுஸ்மேட்ஸ்
அவரை தொடர்ந்து 4 மணிநேரம், 48 நிமிஷம் நின்ற ஷிவானியும் கயிரை விட்டு பொத்தென கீழே விழுந்தார். இதனை பார்த்து பதறிய ஹவுஸ்மேட்ஸ் அவர்களை ஆசுவாசப்படுத்தினர்.

ஷிவானியை தூக்கிய பாலாஜி
பின்னர் பாலாஜி, ஷிவானியையும் சோம் ரம்யாவையும் தூக்கிச் சென்று படுக்கையில் படுக்க வைத்தனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் நல்லா பிரிச்சுக்கிட்டீங்கய்யா என்ற கிண்லடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











