பத்த வச்ச பிக்பாஸ்.. பற்றிக்கொண்ட பாலா.. அசிங்கமாய் பேசியதால் ஆவேசமான ரியோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் இன்று நாமினேஷன் புராசஸ் நடைபெற்றது. அப்போது ஹவுஸ்மெட்ஸ் சொன்ன காரணத்தை பப்ளிக்காக சொல்லி பற்ற வைத்தார் பிக்பாஸ்.
இதில் காதல் கண்ண மறைக்குது என்ற காரணத்தை கேட்ட பாலாஜி, தன்னையும் ஷிவானியையும்தான் சொல்கிறார்கள் என்று எண்ணி மொத்தமாய் எல்லோரையும் விளாசி வருகிறார்.

ரொம்ப தவறானது
அந்த வகையில் ஏதோ தவறான வார்த்தையை பாலாஜி பேசியதாக தெரிகிறது. இதுதொடர்பாக கிட்சனில் கேபியிடம் பேசும் ரியோ, பாலாஜி சொன்னது ரொம்ப தவறானது என்கிறார்.

அசிங்கமா பேசினா வலிக்காதா?
தொடர்ந்து சனம் ஷெட்டியிடம் பேசும் ரியோ, 2 பேர்தான் நாமினேட் பண்ணியிருக்காங்க, அப்படி இருக்கும் போது 15 பேர் இருக்கும் இடத்தில் அப்படி சொல்லலாமா என்கிறார். மேலும் ஆஜித்திடம் பேசும் ரியோ, என் ஃபேமிலிலயும் பாப்பாங்க, உன் ஃபேமிலிலயும் பாப்பாங்க, இப்படி அசிங்கமா ஒருத்தன் பேசினா வலிக்காதா என கேட்கிறார்.

காதல் பண்ணிக்கிட்டு சுத்துறாங்க?
ஷிவானியிடம் பேசும் பாலாஜி காதல் கண்ண மறைக்குதுன்னா என்ன அர்த்தம் என கேட்கிறார். தொடர்ந்து கிட்சனுக்கு வரும் பாலாஜி, கண்ண மறைக்குற அளவுக்கா காதல் பண்ணிக்கிட்டு சுத்துறாங்க என கேட்கிறார்.

பத்த வச்சுட்டியே பரட்ட
மேலும் நான் ஒன்றும் இங்கு லவ் பண்ண வரலை எனக்கும் ஹர்ட்டாகுது என்கிறார் பாலாஜி. இப்படியாக உள்ளது பிக்பாஸின் மூன்றாவது புரமோ. இதனை பார்த்த நெட்டிசன்கள், பரட்ட பத்தவச்சுட்டியே பரட்ட என பிக்பாஸை கிண்டலடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











