கேபி பின்னாடி பேசுகிறார்.. ஆஜித்திடம் பஞ்சாயத்து பண்ணும் பாலாஜி..இன்னைக்கு சம்பவம் இருக்கும் போலயே!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோவில் ஷிவானியும் ரம்யாவும் ஆரி குறித்து பின்னால் பேசினர்.
இதற்காக ரம்யாவை சமூக வலைதளங்களில் வச்சு செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.

ஓபன் அப் ஆகலன்னு
இதில் பாத்ரூமுக்குள் இருக்கும் ரியோவிடம் பாலாஜி குறித்து பேசுகிறார் கேபி. அதாவது, நான் எங்கும் ஓபன் அப் பண்ணி பேசுறதில்லையாம். அப்படி இருந்துதான் நான் கமல் சார்க்கிட்ட சொன்னேனா, ஸ்ட்ரேட்டர்ஜின்னு.

காமெடி..
நான் ஓப்பன் அப் பண்ணி பேசியதால் தான் இப்போ என்னை குத்தியிருக்கிறார் என்றும் கூறுகிறார். மேலும் அமைதியா இருந்தாலும் பிரச்சனை பேசினாலும் பிரச்சனை என்று கூறுகிறார் கேபி. அதற்கு காமெடி என்று பதிலளிக்கிறார் ரியோ.

உண்மையா ஃபேக்கான்னு
அதேநேரத்தில் பாலாஜி, ஆஜித்திடம் கேபி குறித்து ஒரு பஞ்சாயத்தை கூறுகிறார். அதாவது, கேபிக்கிட்ட நான் ஒரு விஷயத்த சொல்லியிருக்கேன். அர்ச்சனாக்கா பண்றது எனக்கு உண்மையா ஃபேக்கான்னு தெரியல டவுட்டா இருக்குன்னு.

கேபியா நானா?
இது ரெண்டு பேருக்குள்ள நடந்த மேட்டர். நம்பி சொன்னதை அர்ச்சனா அக்காக்கிட்ட சொல்லியிருக்கு. யாரு பின்னாடி பேசினது கேபியா நானா? என்று கேட்கிறார். இப்படியாக உள்ளது இன்றைய மூன்றாவது புரமோ.


Click it and Unblock the Notifications











