ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. அர்ச்சனாவை கமலிடம் போட்டுக் கொடுத்த பாலாஜி.. தரமான சம்பவம்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் நடிகர் கமலிடம் அர்ச்சனா குறித்து பாயிண்ட் பாயிண்ட்டாக போட்டுக் கொடுத்துள்ளார் பாலாஜி.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஹவுஸ்மேட்ஸ்களை சந்திக்கிறார் கமல். இதற்கான புரமோக்கள் தாமதமானாலும் வரிசையாய் வெளியானது.

முதல் புரமோவில் காடா நாடா டாஸ்க்கில் செங்கோலால் ஏற்பட்ட பிரச்சனை குறித்து அலசினார் கமல். இரண்டாவது புரமோவில் இங்கிதம் இல்லையா என சனம் ஷெட்டியை வெளுத்தார்.

பளபள சட்டை பரட்டை தலை

பளபள சட்டை பரட்டை தலை

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் பாலாஜி, அர்ச்சனா குறித்து கமலிடம் போட்டுக் கொடுக்கிறார். அதாவது, பளபள சட்டை, பரட்டை தலை, கண்ணாடி என ஒரு மார்க்கமாக உள்ள பாலாஜியை பார்த்து என்ன பாலாஜி என்று கேட்கிறார் கமல்.

ஒளியவும் முடியாது

ஒளியவும் முடியாது

அதற்கு சார் இந்த வீட்டை பொறுத்தவரை கேமராக்கள் மட்டுமல்ல கன்டெஸ்டன்ட்கிட்டேயும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. அமைதியா இருந்துட்டா, இவரு அமைதியா இருக்காருன்னு சொல்லி குறை சொல்வாங்க. அதையும் தாண்டி நம்மளோட ஒப்பினியன சொன்ன சின்ன குழந்தைன்னு சொல்றாங்க.

இப்போதான் புரியுது

இப்போதான் புரியுது

நேரடியா ஒரு விஷயத்தை சொல்லாமா மறைமுகமா சொல்றாங்கன்னு புரிஞ்சுக்க முடியுது. உண்மையிலேயே பிக்பாஸ்னா என்னன்னு எனக்கு இப்போதான் புரியுது என கூறுகிறார்.

வேற லெவல் ரியாக்ஷன்

வேற லெவல் ரியாக்ஷன்

பாலாஜி பேச பேச அர்ச்சனாவின் முகம் அப்படியே மாறுகிறது. ஃபைனல் டச்சாக அர்ச்சனா கொடுக்கும் ஒரு ரியாக்ஷன் வேற லெவலில் உள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள், அப்பா சாமி நீயாவது அர்ச்சனாவுக்கு எதிராய் குரல் கொடுத்தீயே என பாலாஜியை பாராட்டியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X