கமல் சொன்ன ஒத்த வார்த்தை.. தரையில் விழுந்து கதறியழுத பாலாஜி.. பதறி வந்த ஆரி.. அதிரடி ப்ரோமோ !

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் பாலாஜி கதறி அழுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோவில் பேசிய கமல், வெளியே போனதும் என்ன செய்வீங்க என்று ஹவுஸ்மேட்ஸ்களிடம் கேட்டார்.

அதற்கு ஒவ்வொரு ஹவுஸ்மேட்டும் தங்களின் திட்டங்களை கூறினர். இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

மக்களால் காப்பாற்றப்பட்டவர்?

மக்களால் காப்பாற்றப்பட்டவர்?

இதில் பேசும் கமல், அடுத்தது மக்களால் காப்பாற்றப்பட்டு இறுதிக்கட்டத்துக்கு முன்னேற போகும் போட்டியாளர் யார் என்று கேட்கும் கமல் இடைவேளை என்று சொல்வது ரொம்ப பழையது என்கிறார்.

ஜருக்கான பாலாஜி

ஜருக்கான பாலாஜி

அப்போது குறுக்கிடும் ரம்யா பிரேக்குன்னு சொல்லப்போறீங்களா என்று கேட்டு காமெடி செய்கிறார். அதற்கு பதில் சொல்லும் கமல், இடைவேளையும் வேண்டாம் பிரேக்கும் வேண்டாம்.. சொல்லிடலாம்.. என்ன பாலாஜி என்கிறார் கமல். தன்னுடைய பெயரை கேட்டதுமே பாலாஜி ஒரு ஜருக் கொடுக்கிறார்.

நினைச்சது சரிதான்

நினைச்சது சரிதான்

அவரது ரியாக்ஷனை பார்த்த கமல், அப்படின்னா என்ன.. பெயரைக் கேட்டதுமே நானா இருக்குமோன்னு நினைச்சுட்டீங்களா பாலாஜி என்கிறார். அதற்கு பாலாஜி ஆமாம் என தலையை ஆட்ட.. நினைச்சது சரிதான் என்கிறார் கமல்.

கதறி அழுத பாலாஜி

கதறி அழுத பாலாஜி

இதனால் நெகிழ்ச்சியாகும் பாலாஜி, அழுதப்படியே கீழே விழுந்து ஆரியை போல் தரையை தட்டுகிறார். இதனை பார்த்தும் ஆரி அவரை ஆசுவாசப்படுத்திகிறார். எழுந்து நின்றும் கைகளை கூப்பி கமலுக்கு நன்றி கூறியப்படியே கண்ணீர் விட்டு கதறுகிறார் பாலாஜி. இப்படியாக உள்ளது இன்றைய இரண்டாவது ப்ரோமோ.

இருவரும் சமாதானம்

இருவரும் சமாதானம்

நேற்றைய எபிசோடில் ஆரி, பாலாஜியிடம் கண்ணீர் விட்டு அழுதார். இந்நிலையில் இன்று பாலாஜி அழுததும் ஆரி வந்து வந்து சமாதானப்படுத்தியுள்ளார். ஆயிரம் சண்டைகள் இருந்த போதும், இருவரும் தற்போது சமாதானமாகி ஒருவரை ஒருவர் அரவணைத்து வருகின்றனர்.

ஷிவானி வெளியேற்றம்

ஷிவானி வெளியேற்றம்

இன்றைய எபிசோடுக்கான காட்சிகள் நேற்றே காட்சியாக்கப்பட்ட நிலையில் ஷிவானி தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் என்ற தகவல் ஏற்கனவே கசிந்து விட்டது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளை முதல் ஃபினாலே வாரம் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X