நித்யா அவ்வளவு சொல்லியும் இந்த பாலாஜி செய்த வேலையை பார்த்தீங்களா?

By Siva

Recommended Video

ஜனனி அம்மா மறைமுகமாக சொன்னதை செய்து காட்டிய பாலாஜி | today promo

சென்னை: நித்யா அவ்வளவு சொல்லியும் தாடி பாலாஜி திருந்தவில்லை.

பிக் பாஸ் 2 வீட்டில் உள்ள தாடி பாலாஜிக்கு அவரின் மனைவி நித்யா கடிதம் எழுதியிருந்தார். அதில் மற்றவர்களை முன்னால் விட்டு பின்னால் புறம் பேசாதே என்று பாலாஜிக்கு அறிவுரை வழங்கியிருந்தார்.

பாலாஜி மற்றவர்களுக்கு பின்னால் புறம் பேசுகிறார் என்று பார்வையாளர்கள் கூறி வந்த நிலையில் நித்யா அறிவுரை செய்தார்.

தாடி பாலாஜி

பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களில் ஜனனி மீது அதிகம் பாசம் வைத்திருக்கிறார் பாலாஜி. அவரை தங்கம், கண்ணு என்று செல்லமாக அழைப்பார். இந்நிலையில் ஜனனியை பற்றி அவர் புறம் பேசியுள்ளார். அதாவது பிக் பாஸ் வீட்டிற்கு வரும் சக போட்டியாளர்களின் பெற்றோரை பார்த்து ஜனனிக்கு அட்டாச்மென்ட் வரவில்லையாம். அவருக்கு எதுக்கு வரணும் பாலாஜி?

நீலிக் கண்ணீர்

நீலிக் கண்ணீர்

பிக் பாஸ் வீட்டில் நீலிக் கண்ணீர் வடிக்காதவர் ஜனனி என்பது பார்வையாளர்களுக்கு நன்கு தெரியும். அப்படி இருக்கும் போது போலிக் கண்ணீருக்கும், நீலிக் கண்ணீருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு என்று பாலாஜி ஜனனியை பற்றி கூறுவதை ஏற்க முடியாது. இன்னொன்று ப்ரொமோவில் கூறுவதை பார்த்து அவர் ஜனனியை பற்றி தான் பேசுகிறார் என்ற முடிவுக்கும் வந்துவிட முடியாது.

சென்றாயன்

சென்றாயன் மும்தாஜிடம் போஜ்புரி பற்றி எல்லாம் பேசுகிறார். ஐஸ்வர்யா பேசும் மொழி எது என்று கேட்ட சென்றாயன் பெங்காளியில் ஆர்டிஸ்ட் எல்லாம் இருக்கிறார்களா என்று கேட்டு அதிர வைத்துவிட்டார். நல்லா கேட்டீங்க போங்க சென்டு.

கடிதம்

நித்யா கடிதம் எழுதியும் பாலாஜி திருந்தவில்லை என்பதை பார்த்த நெட்டிசன்கள் அவரை விளாசிக் கொண்டிருக்கிறார்கள். பல நாள் பழக்கத்தை ஒரே நாளில் மாற்றிவிட முடியுமா என்ன?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X