Just In
- 14 min ago
மனிதாபிமான செயல்பாடுகள்.. நடிகர் அன்பு பாலாவுக்கு அமெரிக்க பல்கலை கவுரவ டாக்டர் பட்டம்!
- 45 min ago
கவர்ச்சி பாதைக்கு ரூட்டை மாற்றும் பிரபல இளம் நடிகை!
- 1 hr ago
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.. அப்பா நன்றாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை
- 1 hr ago
இசை புயல் ஏஆர் ரஹ்மானின் வெவ்வேறு கதைகளத்தில் வெளியாகும் திரைப்படங்கள்.. ரசிகர்கள் குஷி!
Don't Miss!
- Sports
1000 ரன்களை விரைவாக அடிச்ச விக்கெட் கீப்பர்... டெஸ்ட் போட்டிகளில் பந்த் புதிய சாதனை
- News
சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணம் தொடர்பான வழக்கில் ரிபப்ளிக், டைம்ஸ் நவ் டிவி
- Finance
சாலை விதிகளை மீறினால், அதிக இன்சூரன்ஸ் கட்டணம்.. புதிய விதிமுறை அமல்படுத்த பரிந்துரை..!
- Automobiles
போச்சு... மாருதி கார்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டன!! புதிய விலைகளை பார்த்துவிட்டு கார்களை வாங்குங்கள்!
- Lifestyle
இனப்பெருக்க சக்தியை அதிகரிக்க தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எவிக்ஷனில் இருந்து காப்பாற்றப்பட்டதும் கீழே விழுந்து கதறிய பாலாஜி.. காரணம் என்ன தெரியுமா?
சென்னை: எவிக்ஷனில் இருந்து காப்பாற்றப்பட்டதும் கதறியழுதார் பாலாஜி.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த திங்கள் கிழமை கடைசி நாமினேஷன் நடைபெற்றது. ஹவுஸ்மேட்ஸ் சக போட்டியாளர்களை ஓபன் நாமினேஷன் செய்தனர்.
ஆனால் இதில் ஒரு சிலர் தப்பித்தனர். இதனை தொடர்ந்து பேசிய பிக்பாஸ் இது கடைசி வாரம் என்பதால் எல்லோருமே நாமினேஷனில் இடம் பெறுவதாக கூறினார்.

நேரடியாக ஃபினாலே
இதனால் அனைத்து போட்டியாளர்களுமே நாமினேஷனுக்கு வந்தனர். இதனிடையே 9 ரவுண்டுகளாக நடைபெற்ற டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் அதிக பாயிண்ட்ஸ்களை எடுத்த சோம் நேரடியாக ஃபினாலேவுக்குள் நுழைந்தார்.

முதல் ஃபைனலிஸ்ட் ஆரி
இதனை நேற்றைய எபிசோடில் அறிவித்த கமல் சோம சேகருக்கு வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து மக்களால் காப்பாற்றப்பட்ட முதல் ஃபைனலிஸ்ட்டாக ஆரியின் பெயரை அறிவித்தார் கமல்.

யாரு இறுதிக்கட்டத்துக்கு?
இந்நிலையில் இன்றைய எபிசோடில் இரண்டாவதாக மக்களால் காப்பாற்றப்பட்ட போட்டியாளர் யார் என்பதை பல டிவிஸ்ட்டுகளுடன் அறிவித்தார் கமல். அதாவது, அடுத்தது மக்களால் காப்பாற்றப்பட்டு இறுதிக்கட்டத்துக்கு முன்னேற போகும் போட்டியாளர் யார் என்று கேட்டார் கமல்.

ரம்யா காமெடி
தொடர்ந்து பேசிய கமல், இடைவேளைக்கு பிறகு என்று சொல்வது ரொம்ப பழையது என்றார். அப்போது குறுக்கிட்ட ரம்யா பிரேக்குன்னு சொல்லப்போறீங்களா என்று கேட்டு காமெடி செய்தார்.

பாலாஜி கொடுத்த ஜருக்கு
அதற்கு பதில் கூறிய கமல், இடைவேளையும் வேண்டாம் பிரேக்கும் வேண்டாம்.. சொல்லிடலாம்.. என்ன பாலாஜி என்றார் கமல். தன்னுடைய பெயரை கேட்டதுமே பாலாஜி ஒரு ஜருக் கொடுத்தார்.

நினைச்சது சரிதான்
அவரது ரியாக்ஷனை பார்த்த கமல், அப்படின்னா என்ன.. பெயரைக் கேட்டதுமே நானா இருக்குமோன்னு நினைச்சுட்டீங்களா பாலாஜி என்றார். அதற்கு பாலாஜி ஆமாம் என தலையை ஆட்ட.. நினைச்சது சரிதான் என்ற கமல், நீங்கள் காப்பாற்றப்பட்டீர்கள் என்றார்.

கதறி அழுத பாலாஜி
இதனைக் கேட்ட பாலாஜி, அழுதப்படியே கீழே விழுந்து ஆரியை போல் தரையை தட்டினார். அவரை தூக்கி கட்டியணைத்தார் ஆரி. பின்னர் எழுந்து நின்றும் கைகளை கூப்பி கமலுக்கு அழுதப்படியே நன்றி கூறினார் கமல்.

அதற்காகதான் அழுதேன்
தொடர்ந்து ஹவுஸ்மேட்ஸிடம் பேசிய பாலாஜி, டைட்டில் வின் பண்ணனும்னு நான் வரல. என்னை கெட்டவன்னு நினைச்சுடுவாங்களோ தப்பானவன்னு நினைச்சுடுவாங்களோன்னு பயந்துட்டேன் என்றார். இந்த வாரம் என்னை அனுப்பி விடுவார்கள் என்று தோன்றியது என்று தான் அழுததுக்கான காரணத்தை கூறினார் கமல்.