பிக்பாஸ் வீட்டில் கடைசி வரை இருந்த பாலாஜிக்கு இவ்வளவுதான் சம்பளமா? தீயாய் பரவும் பட்டியல்!

சென்னை: பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற பாலாஜியின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது.

ஆரி, பாலாஜி, ரியோ, சோம சேகர், ஷிவானி, கேபி, நிஷா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஜித்தன் ரமேஷ், வேல்முருகன், ரேகா, சம்யுக்தா, ஆஜித், அனிதா, சனம் ஷெட்டி, ரம்யா என 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

மொத்தம் 18 பேர்

மொத்தம் 18 பேர்

பின்னர் அர்ச்சனா, சுச்சி என அடுத்தடுத்து 2 போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்தனர். மொத்தம் 18 போட்டியாளர்களுடன் சண்டை சச்சரவுகளுடன் சென்றது பிக்பாஸ் சீசன் 4.

5 பேர் ஃபைனலில்..

5 பேர் ஃபைனலில்..

இதில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேறினர். இறுதியில் ஃபைனலிஸ்ட்டுகளாக ஆரி, பாலா, ரியோ, ரம்யா, சோம் என 5 பேர் பிக்பாஸ் ஃபினாலேவுக்குள் நுழைந்தனர்.

நேற்று உச்சக்கட்டம்

நேற்று உச்சக்கட்டம்

இதனை தொடர்ந்து யார் வெற்றியாளர் என்பதை அறிவிக்கும் கிராண்ட் ஃபினாலே நேற்று நடைபெற்றது. இதில் ஆரி வின்னராகவும் பாலாஜி ரன்னர் அப் என்றும் அறிவிக்கப்பட்டனர்.

யாருக்கு எவ்வளவு சம்பளம்?

யாருக்கு எவ்வளவு சம்பளம்?

வின்னரான ஆரிக்கு பிக்பாஸ் ட்ராஃபியும் 50 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு? அவர்கள் இருந்த நாள் வரைக்கும் பெற்ற சம்பளம் எவ்வளவு என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது.

சனம் ஷெட்டியின் சம்பளம்

சனம் ஷெட்டியின் சம்பளம்

அதன்படி, ரேகாவுக்கு ஒரு நாளைக்கு சம்பளம் ஒரு லட்சம் ரூபாய் என்றும் அவர் 14 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்ததால் அவருக்கு 14 லட்சம் ரூபாய் மொத்த சம்பளம் என்றும் கூறப்படுகிறது. இதேபோல் சனம் ஷெட்டிக்கும் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் என்றும் அவர் 63 நாட்கள் இருந்ததால் 63 லட்சம் ரூபாய் சம்பளம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆரிக்கு ஒரு கோடிக்கு மேல்

ஆரிக்கு ஒரு கோடிக்கு மேல்

ஆரிக்கு ஒரு நாளைக்கு 85 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்றும் அவர் 105 நாட்கள் இருந்ததால் அவருக்கு 89 லட்சத்து 25000 ரூபாய் சம்பளம் என்றும் வெற்றியாளரான அவருக்கு 50 லட்சம் ரூபாய் ரொக்கம் என மொத்தம் 1 கோடியே 35 லட்சம் 25 ஆயிரம் ரூபாய் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சுச்சிக்கு ஒரு நாளைக்கு 80,000 ரூபாய் என்றும் அவர் 49 நாட்கள் இருந்ததால் அவருடைய சம்பளம் 39.20 லட்சம் ரூபாய் என்றும் கூறப்படுகிறது.

ரம்யாவுக்கு 70 லட்சத்துக்கு மேல்

ரம்யாவுக்கு 70 லட்சத்துக்கு மேல்

அடுத்து அர்ச்சனாவுக்கு ஒரு நாளைக்கு 75,000 ரூபாய் சம்பளம் என்றும் அவர் 77 நாட்கள் இருந்ததால் மொத்தம் 57.75 லட்சம் ரூபாய் சம்பளம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் ரம்யா பாண்டியனுக்கும் ஒரு நாளைக்கு 75,000 சம்பளம் என்றும் 105 நாட்கள் இருந்ததால் அவருக்கு 78.75 லட்சம் ரூபாய் சம்பளம் என்றும் தெரிய வந்துள்ளது.

ஷிவானிக்கு 58 லட்சம்

ஷிவானிக்கு 58 லட்சம்

அடுத்து கேப்ரில்லாவுக்கு ஒரு நாளைக்கு 70,000 ரூபாய் சம்பளம் என்றும் அவர் 102 நாட்கள் இருந்தது மற்றும் 5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை என மொத்தம் 76.40 லட்சம் வருமானம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்து ஷிவானிக்கு ஒரு நாளைக்கு 60,000 ரூபாய் சம்பளம் என்றும் அவர் 98 நாட்கள் இருந்ததால் அவருக்கு 58.80 லட்சம் ரூபாய் சம்பளம் என்றும் கூறப்படுகிறது.

வேல் முருகன் சம்பளம்

வேல் முருகன் சம்பளம்

இதேபோல் ஜித்தன் ரமேஷுக்கு ஒரு நாளைக்கு 60,000 ரூபாய் சம்பளம் என்றும் அவர் 69 நாட்கள் இருந்ததால் மொத்தம் 41.40 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வேல் முருகனுக்கு ஒரு நாளைக்கு 50,000 ரூபாய் சம்பளம் என்றும் 28 நாட்கள் இருந்ததால் அவருக்கு 14 லட்சம் ரூபாய் சம்பளம் என்றும் கூறப்படுகிறது.

சம்யுக்தாவின் சம்பளம்

சம்யுக்தாவின் சம்பளம்

இதேபோல் நிஷாவுக்கு ஒரு நாளைக்கு 40,000 ரூபாய் சம்பளம் என்றும் அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் 70 நாட்கள் இருந்ததால் 28 லட்சம் ரூபாய் சம்பளம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சம்யுக்தாவுக்கும் ஒரு நாளைக்கு 40,000 ரூபாய் சம்பளம் என்றும் அவர் 56 நாட்கள் இருந்ததால் அவருக்கு 22.40 லட்சம் ரூபாய் வருமானம் என்றும் கூறப்படுகிறது.

ரியோவுக்கு 36 லட்சம்

ரியோவுக்கு 36 லட்சம்

அனிதா சம்பத்துக்கு ஒரு நாளைக்கு சம்பளம் 40,000 ரூபாய் என்றும் அவர் 84 நாட்கள் இருந்தால் 33.60 லட்சம் ரூபாய் அவருக்கு பிக்பாஸ் மூலம் வருமானம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் ரியோவுக்கு ஒரு நாளைக்கு 35,000 ரூபாய் சம்பளம் என்றும் அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் 105 நாட்கள் இருந்ததால் அவருக்கு 36.75 லட்சம் ரூபாய் சம்பளம் என்றும் கூறப்படுகிறது.

பாலாஜிக்கு ஒரு நாளைக்கு..

பாலாஜிக்கு ஒரு நாளைக்கு..

ஆஜித்துக்கு ஒரு நாளைக்கு 15,000 ரூபாய் சம்பளம் என்றும் 91 நாட்கள் இருந்ததால் அவருக்கு 13.65 லட்சம் ரூபாய் பிக்பாஸ் மூலம் வருமானம் கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சுரேஷ், சோம், பாலாஜி ஆகிய மூன்று பேருக்கும் நாள் ஒன்றுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்றும் கூறுப்படுகிறது.

பாலாஜிக்கு இவ்ளோதானா?

பாலாஜிக்கு இவ்ளோதானா?

சுரேஷ் மொத்தம் 35 நாட்கள் இருந்ததால் அவருக்கு 3.50 லட்சம் ரூபாய் வருமானம் என்றும், சோம சேகர் மற்றும் பாலாஜி 105 நாட்கள் இருந்ததால் அவர்களுக்கு 10.50 லட்சம் ரூபாய் சம்பளம் என்றும் கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இருப்பினும் இந்த பட்டியலை பார்த்த ரசிகர்கள், பிக்பாஸ் வீட்டில் அதிக டேமேஜ்ஜான போட்டியாளர்களில் ஒருவரான பாலாஜியின் ரொம்பவே குறைந்த சம்பளம் என தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X