ரியோவுக்கு கிரீடத்தை கொடுத்து.. ஊமை குத்து குத்திய பாலாஜி.. செம்ம்ம்ம தெளிவு தம்பியார்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் ரியோவுக்கு கிரீடத்தை கொடுத்த பாலாஜி, அவர்களின் குரூப்பிசத்தை படு பச்சையாக தோலுரித்து காட்டினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் ஹவஸ்மேட்டுகளுக்கு கொம்பு மற்றும் கிரீடம் டாஸ்க் கொடுத்தார் கமல்.
இதில் பங்கேற்ற ஹவுஸ்மேட்ஸ் அனைவருமே தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களுக்கு கிரீடத்தையும் பிடிக்காதவர்களுக்கு கொம்பும் கொடுத்தனர்.

பாலாஜி விளக்கம்
அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பாலாஜி, ரியோவுக்கு கிரீடத்தை கொடுத்தார். ஆனால் அதற்கு அவர் கொடுத்த விளக்கம் வேற லெவலில் இருந்தது. குறிப்பாக பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம் உள்ளது என்பதையும் ரியோவும் அவருடைய குரூப்பையும் சாடி கிரீடத்தை கொடுத்தார்.

5 பேரை சம்பாதித்துள்ளார்
பாலாஜி பேசியதாவது, இந்த கிரீடத்தை நான் ஏன் ரியோவுக்கு கொடுக்கிறேன் என்றால், அவர் இந்த வீட்டில் ஒரு நாலைந்து பேரை சம்பாதித்து வைத்துள்ளார். என்னால் அப்படி நான்கு அல்லது ஐந்து பேரை சம்பாதிக்க முடியவில்லை.

இதுதான் காரணம்
அந்த ஐந்து பேரும் எப்படிப்பட்டவர்கள் என்றால், எங்கள் ஆள் மீதா கை வைத்தாய் உன்னை என்ன செய்கிறேன் பார் என்ற ரீதியில் நடந்து கொள்வார்கள். இப்படிப்பட்ட ஆட்களை சம்பாதித்து வைத்துள்ள ரியோவுக்கு இந்த கிரீடத்தை கொடுக்கிறேன் என்றார்.

முள் கிரீடம்
பாலாஜி கொடுத்த விளக்கத்தை கேட்ட கமல், சிரித்தப்படியே இது முள் கிரீடம் போல் இருக்கிறதே என்றார். அவரை தொடர்ந்து ஜித்தன் ரமேஷுக்கு கொம்பை கொடுத்தார் பாலாஜி. பாலாஜியின் விளக்கத்தை பார்த்த ரசிகர்கள், தலைவா நீ வேற லெவல் என பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











