தர்பார் குறித்து துல்லியமாக கணித்த ஜோதிடர் ரஜினியின் அரசியல் பற்றி இப்படி சொல்லிட்டாரே

By Siva

சென்னை:ரஜினி அரசியலுக்கு எப்பொழுது வருவார் என்று அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ள நிலையில் பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் அவர்கள் தலையில் குண்டை தூக்கிப் போட்டுள்ளார்.

சேலத்தை சேர்ந்த மெக்கானிக்கல் என்ஜினியரான பாலாஜி ஹாசன் ஜோதிடத்தில் அசத்திக் கொண்டிருக்கிறார். அரசியல், மழை, விளையாட்டு, சினிமா என்று பல துறைகளிலும் அவர் கணித்துக் கூறியது அப்படியே நடந்துள்ளது.

இந்நிலையில் அவர் அண்மையில் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சினிமா பற்றி பேசியுள்ளார்.

தர்பார்

தர்பார்

ரஜினிகாந்த், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸுடன் படம் பண்ணுவார் என்றார் பாலாஜி ஹாசன். அவர் தெரிவித்தது போன்றே தர்பார் படத்தில் ரஜினியும், முருகதாஸும் சேர்ந்து பணியாற்றி வருகிறார்கள். இந்த படம் பெரிய அளவில் ஹிட்டாகும் என்றும் பாலாஜி தெரிவித்துள்ளார்.

பிகில்

பிகில்

நயன்தாரா ஒரு பேய் படம் ஹிட் கொடுத்தது போன்று, 2-3 படங்கள் ஹிட் கொடுப்பார். ஆர்யா ஒரு ஹிட் படம் கூட கொடுக்காமல் உள்ளார். இந்த ஆண்டு இறுதியில் அவர் ஹிட் படம் கொடுக்கும் வாய்ப்பு உண்டு. மும்பை நடிகை ஒருவரும் ஹிட் கொடுப்பார். அனுஷ்காவும் இந்த ஆண்டு ஒரு நல்ல படத்தை கொடுப்பார். விஜய் பிகில் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு வெற்றி, தோல்வியாக இருந்தது. துப்பாக்கி படத்தை அடுத்து அவருக்கு பெரிய ஹிட் கிடைக்கவில்லை. இந்த பிகில் அவருக்கு ஒரு அளவுக்கு ஓடக் கூடிய ஹிட்டாகும். அஜித்தின் படமும் ஹிட்டாகும்.

அஜித்

அஜித்

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தாலும் அவருக்கு மவுசு இருக்காது. விஜய்யும் சரி, அஜித்தும் சரி அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார் பாலாஜி. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திரா முதல்வர் ஆவார், மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என்று துல்லியமாக கணித்த பாலாஜி ரஜினி பற்றி இப்படி சொல்லிவிட்டாரே.

ரஜினி

ரஜினி

தமிழக சட்டசபை தேர்தலை மனதில் வைத்து கட்சி துவங்கும் எண்ணத்தில் உள்ளார் ரஜினி. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் நேரம் இருப்பதால் அடுத்தடுத்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் கட்சி துவங்கிய உடனேயே முதல்வர் ஆவார் என்று அவரின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் நிலையில் பாலாஜி வேறுவிதமாக கணித்துள்ளார். ரஜினி, முருகதாஸ் கூட்டணி குறித்த பாலாஜியின் கணிப்பு போன்று அவரின் அரசியல் குறித்த கணிப்பும் பலித்துவிடுமோ?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X