நயனுக்கு திருமணம் எப்பொழுது?: சொல்கிறார் உலகக் கோப்பை வெற்றியை சரியாக கணித்த ஜோதிடர்

By Siva

Recommended Video

நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலிக்க இதுதான் காரணம்

சென்னை: நயன்தாராவின் திருமணம் பற்றி பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணித்துள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகள் தான் முதல் 4 இடங்களுக்கு வரும் என்று கணித்தார் சேலத்தை சேர்ந்த ஜோதிடர் பாலாஜி ஹாசன். மேலும் அரையிறுதிப் போட்டியில் இந்தியா இங்கிலாந்து அல்லது நியூசிலாந்துடன் மோதும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதுவரை உலகக் கோப்பையை வெல்லாத அணி தான் இம்முறை வெற்றி பெறும் என்று பாலாஜி ஹாசன் கணித்தது போன்றே நடந்துவிட்டது. இந்நிலையில் அவர் நயன்தாராவின் திருமணம் பற்றியும் கணித்துள்ளார்.

நயன்தாரா

நயன்தாரா

டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாலாஜி ஹாசன் தன்னிடம் நயன்தாராவின் ஜாதகம் இருப்பதாகவும் அதை வைத்து அவரின் திருமணத்தை கணித்துள்ளதாகவும் தெரிவித்தார். அவரின் கணிப்புப்படி நயன்தாராவுக்கு இந்த ஆண்டே திருமணம் நடக்குமாம். அரசியல், விளையாட்டு துறைகளில் பாலாஜி கணித்தவை அப்படியே நடந்துள்ளது. நயன்தாரா விஷயத்திலும் நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கணிப்பு

கணிப்பு

என்னிடம் இருப்பது நயன்தாராவின் உண்மையான ஜாதகம் என்று நினைக்கிறேன். அப்படி அது உண்மையான ஜாதகமாக இருந்தால் அவருக்கு இந்த ஆண்டே திருமணம் என்கிறார் பாலாஜி ஹாசன். இதை கேட்ட நயன்தாராவின் ரசிகர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். சீக்கிரமாக நயன்தாராவை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று ரசிகர்கள் இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் பாலாஜி இப்படி ஒரு நல்ல செய்தி தெரிவித்துள்ளார்.

விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன்

நயன்தாராவுக்கு இந்த ஆண்டு திருமணம் என்று தானே பாலாஜி ஹாசன் தெரிவித்துள்ளார். அது விக்னேஷ் சிவனுடன் தான் நடக்கும் என்று கூறவில்லையே என நெட்டிசன்கள் கொளுத்திப் போட்டுள்ளனர். நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்வார்கள் என்று கோலிவுட்டிலும் பேச்சு அடிபடுகிறது.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

நயன்தாராவின் வாழ்வில் வந்துள்ள இந்த காதலாவது திருமணத்தில் முடிய வேண்டும் என்று அவரின் தீவிர ரசிகர்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள். பாலாஜி ஹாசன் சொன்னது மட்டும் நடந்துவிட்டால் அவர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X