Don't Miss!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே கேப்டன் ருதுராஜுக்கு வந்த சிக்கல்.. ஆறு மேட்ச்சிலும் ஒரே மாதிரியாக நடந்த நிகழ்வு
- News தமிழகத்தின் 11 ஸ்டார் தொகுதிகளில் ஓட்டு சதவீதம் எவ்வளவு தெரியுமா? இதோ லிஸ்ட்
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- Lifestyle நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- Technology Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
கேப்டன்னா கொம்பு முளைச்சுருக்கா.. மொத்த பேரையும் ஒத்தை ஆளாய் வச்சு செய்த பாலாஜி!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தன்னை எழுப்பி ஹவுஸ் கீப்பிங் செய்ய வைத்த அர்ச்சனா அன்ட் கோவை லெப்ட் அன்ட் ரைட்டு வாங்கினார் பாலாஜி.
Recommended Video
பிக்பாஸ் வீட்டின் நேற்றைய எபிசோடில் பாலாஜி பட்டைய கிளப்பினார்.
பாலாஜியின் கேள்விக்கும் பதிலுக்கும் ரியாக்ட் கூட செய்ய முடியாமல் விழி பிதுங்கினர் ஹவுஸ்மேட்ஸ்.
ஆகாத அர்ச்சனா
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் பாலாஜி ஹவுஸ் கீப்பிங் டீமில் உள்ளார். இந்நிலையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார் பாலாஜி. இதனை கவனித்த அர்ச்சனா, ஹவுஸ் கீப்பிங் கேப்டனான வேல்முருகனிடம் எப்போ வீட்டை க்ளீன் பண்ண போறீங்க, இப்போவே பாலா தூங்கிவிட்டார் என்றார்.
என்னால் பண்ண முடியாது
அப்படியா என கேட்டு ஆஜித்தை அனுப்பி பாலாஜியை எழுப்ப சொன்னார் வேல்முருகன். எழுப்பிய ஆஜித்திடம் நேற்று சமைச்சாங்களா? யாருமே வேலை செய்யல இன்னைக்கு என்ன என கேட்டு என்னால் பண்ண முடியாது என்றார்.
இது சரியில்ல
அஜித் அதனை பட்டும் படாமல் கன்வே செய்து விட்டு வேல்முருகனை சென்று எழுப்ப சொன்னார். வேல் முருகன் போய் எழுப்பிய போது, தூங்குறவங்கள எழுப்பி ஹவுஸ் கீப்பிங் செய்ய சொல்வது சரியில்ல என்றார். எல்லோரும் சேர்ந்து செய்தால் சீக்கிரம் முடித்து விடலாம் என கூறி பார்த்தார் வேல்.
எட்டி பார்க்க முடியுமா?
ஆனால் அசரவில்லை பாலாஜி. பின்னர் வீட்டின் கேப்டனான அர்ச்சனா என்னவாம் என்ன சொல்கிறார் என்று பாலாஜி குறித்து வேல்முருகனிடம் கேட்டார். அதற்கு இல்லை அவரால் முடியாதாம் என்றார் வேல்முருகன். இதனைக் கேட்ட அர்ச்சனா க்ளீன் பண்ண முடியாது எட்டி மட்டும் பார்க்க முடியுமா என்றார்.
கொம்பு முளைச்சுருக்கா?
இதனைக் கேட்ட பாலாஜி கேப்டன்னா கொம்பு முளைச்சுருக்கா என்று கேட்டப்படியே எழுந்து வந்தார். வந்த வேகத்தில் வேல் முருகனிடம், தூங்குபவனை எழுப்பி ஹவுஸ் கீப்பிங் செய்ய சொல்வதெல்லாம் சரியில்லை என்றார். மேலும் பாத்ரூம் கிளீனிங் அப்போ இப்படிதான் எல்லாரும் சேர்ந்து செய்தீர்களா என்று கேட்டார்.
அம்மியில அரைக்க வைக்கிறேன்
அடுத்த வாரம் நானும் தலைவராவேன், அப்போது எல்லோரையும் அம்மியில் வைத்து அரைக்க வைக்கிறேன், என்று கூறியப்படியே வீட்டை பெருக்கி தள்ளினார் பாலா. இதனை கவனித்த அர்ச்சனா, அம்மியில் அரைக்க வைப்பேன் என்கிறார் என சக ஹவுஸ் மேட்ஸ்களிடம் கூறினார்.
அப்படி சொல்லவில்லை
அதை முதல் ஆளாய் சுரேஷ் சக்கரவர்த்தி கேட்க, நான் பொம்பளைங்க என்ற வார்த்தையே சொல்லவில்லை என்றார். மேலும் யாரை அம்மியில் வைத்து அரைக்க முடியும் என்றும் கேட்டார். தொடர்ந்து தோன்றியதை பேசினேன் என தான் கூறியதை அப்படியே மீண்டும் சொன்னார் பாலாஜி.
அசர வைத்த பாலாஜி
அதற்கு நீங்கள் தோன்றுவதையெல்லாம் இங்கு உதிர்க்க முடியாது பாலா அது தப்பு என்றார் ரியோ. அதற்கு சரி வச்சுக்கோங்க என பாலா கூற அதைத்தான் கேட்கிறோம் என ரியோ சொல்ல, அதற்கு தான் பதில் சொல்லிட்டேனே என்று ஒத்தை வார்த்தையாலேயே மாஸ் பதில் கொடுத்து வேறலெவலில் அசர வைத்தார் பாலாஜி.
பாலாஜி இன்ட்ரெஸ்டிங்
அர்ச்சனா அன்ட் கோ சேர்ந்து மொத்தமாய் அவரை கட்டம் கட்ட ஒத்தை ஆளாய் நின்று பக்காவாய் பதிலடி கொடுத்தார் பாலாஜி. அவரது செக்மெண்ட் பார்க்கவே படு சுவாரசியமாக இருந்தது. பார்வையாளர்கள் பலரும் பாலாஜின் பிஹேவிங் சுவாரசியமாக இருப்பதாக தெரிவித்தனர்.