Don't Miss!
- News செம ட்விஸ்ட்.. கடைசி நேரத்தில் சென்னையில் ஓட்டு போட குவிந்த மக்கள்.. வாக்கு சதவீதம் எகிறியது
- Technology Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- Sports LSG vs CSK : தோனி மாதிரி இல்லப்பா.. ரசிகர்கள் பேச்சை கேட்ட ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள்!
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
பிக் பாஸ் குறித்து நான் எந்தக் கணிப்பும் வெளியிடவில்லை.. பாலாஜி ஹாசன்
Recommended Video
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. என்னை முடித்து கட்ட வேண்டும் என்று சிலர் போட்டி பொறாமையுடன் வதந்திகளை பரப்புகிறார்கள் என்று ஜோதிடர் பாலாஜி ஹாசன் கூறியுள்ளார்.
சமீப காலமாக பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி பல் வேறு செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. யார் என்ன செய்தார்கள், என்ன சொன்னார்கள் என்ற மனித உறவின் போராட்டமாகவே இது கருதப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க, சேலம் ஜோசியர் பாலாஜி ஹாசன் பிக் பாஸ் வெற்றியாளர் யார் என்பதை கணித்து கூறியதாக பல ஊடங்களிலும், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற இணையதளங்களிலும் பரவலாக செய்தி வந்தது.
ஆனால் அவருடைய தரப்பிலிருந்து வந்த செய்தியோ, என்னை ஒரு வழியாக முடித்து கட்ட வேண்டும் என்று சிலர், குறிப்பாக என்னுடைய துறை சார்ந்தவர்களே சின்ன பையன் வளர கூடாது என்று கடுமையான போட்டி பொறாமையுடனும் வதந்திகளை பரப்புகிறார்கள் என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவு:
விஜய் டிவி நடத்தி வரும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் யார் வெற்றி பெறுவார் என நான் எந்த கணிப்பும் வெளியிடவில்லை. நான் சொன்னதாக ஊடகங்களில் வெளியாவது அனைத்தும் அந்தந்த ஊடகங்களின் கற்பனையே. நான் எந்த செய்தி வெளியிட்டாலும் வீடியோவுடன் மட்டுமே வெளியிடுவேன். எனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் ஜெயிப்பார் அவர் ஜெயிப்பார் என நான் சொன்னதாக வரும் அனைத்து செய்திகளையும் மக்கள் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
விஜய் தொலைக்காட்சியில் நடந்து கொண்டிருக்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி பற்றி நான் அறிந்ததில்லை. அப்படி இருக்கையில் அந்த போட்டியில் பங்கு பெற்றிருக்கும் போட்டியாளர்கள் பற்றியோ அவர்களின் ஜாதகமோ என்னிடம் இல்லாத போது அந்த நிகழ்ச்சியில் இவர் வெற்றி பெறுவார், அவர் வெற்றி பெறுவார் என்று நான் எப்படி கணிக்கமுடியும்.
எந்த ஒரு கணிப்பாக இருந்தாலும் அதை வீடியோ மூலமாகவே பதிவு செய்வேன். எழுத்து வடிவமாகவோ அல்லது வேறு வடிவிலோ என்னுடைய கணிப்பு என்று வெளியிடப்பட்டால் அது நிச்சயமாக அது தவறான தகவலே ஆகும். முகநூல் அல்லது யூடியுப்பில் பதிவு செய்யப்படும் வீடியோக்களை தாராளமாக யார் வேண்டுமானாலும் உபயோகித்து கொள்ளலாம் அதனால் எனக்கு எந்த ஒரு பிரச்னையும் இல்லை என்று கூறியுள்ளார்.