சனத்துடன் கடும் வாக்குவாதம்.. செருப்பை கழட்டிய பாலா.. எச்சரித்த ஹவுஸ்மேட்ஸ்.. மண்ணாகிப்போன கண்ணியம்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனம் ஷெட்டியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாலாஜி தன்னைத்தானே செருப்பால் அடித்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனம் ஷெட்டிக்கும் பாலாஜிக்கும் சண்டை வராத நாட்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு ஆரம்பம் முதலே இருவரும் எலியும் பூனையுமாக உள்ளனர்.

அந்த வகையில் நேற்றைய ரேங்க் டாஸ்க்கின் போதும் இருவருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

சனத்துடன் வாக்குவாதம்

சனத்துடன் வாக்குவாதம்

தொடர்ந்து சனம் ஷெட்டியிடம் பேசிய பாலாஜி, நம்பர் 2க்காக ஐடியாலஜிய மாத்தி, மாத்தி மாத்தி பேசுன ஆள் தான நீ என்றார். அதனை இல்லை என்று சனம் மறுக்க டிசர்விங் நாமினேட் ஆகக்கூடாது என்றாய், இப்போது மாற்றி பேசுகிறாயே என கையை நீட்டி ஆவேசமாக பேசினார்.

கையை நீட்டாதீங்க

கையை நீட்டாதீங்க

இதனால் கடுப்பான சனம் ஷெட்டி, கையை நீட்டி பேசாதீங்க.. கையை பாக்கெட்ல போட்டு பேசுங்க என்றார். அதற்கு நான் கையை நீட்டிதான் பேசுவேன் என்றார் பாலாஜி. அப்படின்னா என்கிட்ட பேசாதீங்க என்றார் சனம்.

செருப்பால் அடித்துக் கொண்ட பாலா

செருப்பால் அடித்துக் கொண்ட பாலா

இதனால் பொறுமையிழந்த பாலாஜி, உன்கிட்ட பேசினதுக்கு எனக்கு தேவைதான் என்று கூறியப்படி, திரும்பி செருப்பை கழட்டி தன் தலையில் அடித்துக்கொண்டார். மேலும் உன்கிட்ட பேசுனதும் ஒன்னுதான் என்னை நானே செருப்பால அடிச்சுக்கிறதும் ஒன்னுதான் என்றார்.

மன்னிப்பு கேள்

மன்னிப்பு கேள்

இதனை பார்த்த சனம் ஷெட்டி, நீங்க இப்போது செஞ்சது பெரிய தப்பு. இதுக்காக என்கிட்ட மன்னிப்பு கேளுங்க என்றார். அதை காதில் வாங்காமல் உள்ளே சென்ற பாலாஜி, பின்னர் மீண்டும் வந்து எதுக்கு மன்னிப்பு கேட்கணும் என்றார்.

திமிராய் பேசுகிறாய்

திமிராய் பேசுகிறாய்

என்னிடம் திமிராய் பேசுகிறாய் நான் உன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமா என்றார். அதற்கு சனம் கையை நீட்டி பேச கையை நீட்டி பேசாதே என பதிலுக்கு சண்டை போட்டார் பாலாஜி. நான் அப்படிதான் பேசுவேன் என்று பதிலடி கொடுத்தார் சனம் ஷெட்டி.

உன் டிராமாவ பார்க்குறாங்க

உன் டிராமாவ பார்க்குறாங்க

தொடர்ந்து பேசிய சனம் ஷெட்டி, என்னை செருப்பை காட்டி அடிச்சுக்கிறீங்களா என கேட்டார். அதற்கு உன்னை செருப்பை காட்டினேனா என்று கேட்ட சனம், உன் டிராமாவையெல்லாம் இங்கு எல்லோரும் பார்த்துக்கிட்டுதான் இருக்கிறார்கள் என்றார்.

அட்ஜெஸ்ட்மென்ட்

அட்ஜெஸ்ட்மென்ட்

பாலாஜி இப்படி நடந்துகொள்வது இது முதல் முறையல்ல. சனம் ஷெட்டியை அட்ஜெஸ்ட்மென்ட் செய்துதான் அழகிப்பட்டம் வென்றார் என்றார். அவரை தறுதலை என்று அத்தனை முறை அழைத்தார். அவளே இவளே என்றும் பேசினார்.

கண்ணியம் மண்ணாகிவிட்டது

கண்ணியம் மண்ணாகிவிட்டது

இந்நிலையில் நேற்றைய எபிசோடில் நடந்த சம்பவங்களை பார்த்த ரசிகர்கள், இந்த சீசனில் கண்ணியம் மண்ணாகிவிட்டதாக தெரிவித்து வருகின்றனர். குழந்தைகளும் பார்க்கும் நிகழ்ச்சியில் தகாத வார்த்தைகளை பேசுவது, கட்டிப்பிடிப்பது முத்தம் கொடுப்பது என போன்ற எல்லை மீறிய செயல்கள் முகம் சுளிக்க வைப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X