உன் பாயிண்ட் நல்லால்ல.. எடுத்துக்க முடியாது.. மோசமான பாடி லாங்குவேஜில் சனமை வெறுப்பேற்றிய பாலாஜி!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கால் டாஸ்க்கின் ரேங்குக்காக சனம் சொன்ன பாயிண்டை ஏற்க மறுத்த பாலாஜி அவரை மோசமான பாடி லாங்குவேஜால் வெறுப்பேற்றினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் தொடங்கிய லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கான கால் செண்டர் டாஸ்க்கை வைத்தே இந்த வாரத்தையும் ஓட்டி விட்டார் பிக்பாஸ்.
இரண்டு வாரங்களாக நடைபெற்ற இந்த டாஸ்க் நேற்று முடிவுக்கு வந்தது.

ரேங்க் டாஸ்க்
இதனை தொடர்ந்து டாஸ்க்கில் யார் பெஸ்ட் என்பதற்கான ரேங்க் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதையும் இரண்டு நாட்களாக இழுத்தனர். யார் பெஸ்ட் என்பது குறித்து கணக்கிட ஹவுஸ்மேட்ஸ் குரூப்பாக அமர்ந்து ஆலோசனை நடத்தினர்.

பாலாஜி பாயிண்ட்
இதில் நேற்றே சனம் ஷெட்டிக்கு ஜித்தன் ரமேஷுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் பாலாஜிக்கும் சனம் ஷெட்டிக்கும் பற்றிக் கொண்டது. பாலாஜியை எஃபோர்ட் அடிப்படையிலான கால்களைதான் எடுக்க வேண்டும் என தனது பாயிண்ட்டை கூறினார்.

பஸர் டூ பஸர்
அதற்கான விளக்கத்தையும் கொடுத்தார். தொடர்ந்து பேசிய சனம் ஷெட்டி, இன்டென்ஷன் என்ற அடிப்படையில் எடுப்பதை தவிர்த்து பஸர் டூ பஸர் என்ற அடிப்படையில் காலை எடுத்தவர்கள் யார் என்பது குறித்து பார்க்கலாம் என்றார்.

எடுத்துக்க முடியாது
இதனை ஏற்காத பாலாஜி, உன்னுடைய பாயிண்ட் வேண்டாம் என்றார். அதற்கு ஏன் என சனம் ஷெட்டி கேட்க அது நல்லாயில்ல எடுத்துக்க முடியாது என்றார் பாலாஜி. அதற்கு உன் பாயிண்டுக்கே வரலையேப்பா நான் என்று கூறி விளக்கம் கொடுத்தார் சனம் ஷெட்டி.

இடுப்பை ஆட்டி
ஆனால அதனை ஏற்காத பாலாஜி, சனம் ஷெட்டியை கேலி செய்வது போல் இடுப்பை ஆட்டியும் கைகளை வளைத்தும் மோசமான பாடி லாங்குவேஜ்ஜில் வெளிப்படுத்தினார். அவர் பேசியதை பார்த்த ரசிகர்கள் பாலாஜி சனமாக மாறிய தருணம் என கிண்டலடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











