நரித்தனம் பண்ணிய ரம்யா.. வெல்குரோ காயின் டாஸ்க்கில் வெற்றி பெற்றது இவர்தான்.. வேற மாதிரி தெரியுதே!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெல்குரோ காயின் டாஸ்க்கில் நரித்தனம் செய்து சோமை வீழ்த்தினார் ரம்யா.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
நேற்று முன்தினம் தண்ணீர் நிரப்பப்பட்ட பலூன் மற்றும் மரத்துண்டு டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றைய எபிசோடில் வெல்குரோ காயின் டாஸ்க் கொடுக்கப்பட்டது.

காப்பாற்றிக் கொண்ட ரம்யா
இதில் முதலில் ரியோவின் காயினை எடுத்தார் பாலாஜி. இதனைத் தொடர்ந்து சோம சேகர், ரம்யாவின் காயினை எடுக்க சென்றார். ஆனால் ரம்யா, தனது முதுகில் உள்ள காயினை தொட விடாமல் காப்பாற்றிக் கொண்டார்.

அடித்துத்தூக்கிய ரம்யா
அதனை தொடர்ந்து கேபி மற்றும் ரியோ எதையோ பேச, அப்போது அவர்கள் பக்கம் திரும்பினார் சோம். அந்த நேரத்தில் பின்னால பூனை போல் வந்து சோமின் காயினை பிடுங்கினார் ரம்யா.

வின்னர் பாலாஜி
இந்த டாஸ்க்கில் கடைசி வரை ஷிவானியை காப்பாற்றிய பாலாஜி, ரம்யாவின் காயினை எடுத்தார். பின்னர் கடைசியாக ஷிவானியின் காயினை எடுத்து அவருக்கு 6 பாயிண்ட்டுகளை எடுத்துக்கொடுத்தார்.

முதல் இரண்டு இடங்கள்
இதில் முதல் இடத்தை பாலாஜியும் 2வது இடத்தை ஷிவானியும், மூன்றாவது இடத்தை ஷிவானியும் பெற்றனர். நேற்றைய இரண்டு டாஸ்க்குகளில் ரியோ முதல் இடத்திலும் ரம்யா இரண்டாவது இடத்திலும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











