Don't Miss!
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற 6 அற்புதமான டிப்ஸ்..
- News முஸ்லீம்களுக்கு மட்டும்தான் நிறைய குழந்தைகள் இருக்காங்களா? மோடி வீட்டில் எத்தனை பேர் தெரியுமா? ஓவைசி
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஷிவானியை பின்னால் சுற்ற விட்ட பாலாஜி.. பார்வையும் சரியில்ல.. பாட்டும் சரியில்ல.. ஜிலு ஜிலு புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மிஸ்டர் இந்தியா பாலாஜிக்கும் கவர்ச்சி நாயகி ஷிவானிக்கும் இடையே சம்திங் சம்திங் இருப்பதாக லைட்டாக காட்டப் படுகிறது.
ஷிவானியின் ஆட்டத்தை பாலாஜி ரசிப்பதும், பாலாஜியை பாட சொல்லி ஷிவானி ரசிப்பதும் நவராத்திரி கொண்டாட்டத்தில் காட்டப்பட்டது.
ஆறுதல் சொன்ன ஷிவானி
அதனை தொடர்ந்து தங்கத்தை சேகரிக்கும் டாஸ்க்கின் போது இருவரும் கையை பிடித்து விளையாடும் அளவுக்கு போனது அவர்களின் கெமிஸ்ட்ரி. நேற்று பாலாஜி அழுதது குறித்து விசாரித்த ஷிவானி, அவருக்கு ஆறுதல் கூறினார்.
இரண்டாவது புரமோ
மேலும் நேற்றைய எபிசோடில் தங்கம் சேகரிக்கும் டாஸ்க்கில் வென்ற குழுவில் உள்ள பாலாஜி ஷிவானியை ஊட்டி விட சொன்னார். இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.
பணிப்பெண்ணான ஷிவானி
இந்த புரமோ முழுக்க முழுக்க ஷிவானியையும் பாலாஜியையும் மட்டுமே சுற்றி வருகிறது. இதில் இன்று ஷிவானியை பணிப்பெண்ணாக வைத்துள்ளார் பாலாஜி. தனக்கு ஷிவானியை குடைப் பிடிக்க சொல்லி வீடு முழுக்க சுற்றி வருகிறார் பாலாஜி.
பின்னால் சுற்றவிட்ட பாலாஜி
இதனால் பாலாஜி பின்னாலேயே பூனைக்குட்டி போல சுற்றி வருகிறார் ஷிவானி. கார்டன் ஏரியா, லிவிங் ஏரியா, பெட்ரூம் என அங்கும் இங்கும் சுற்றி வரும் பாலாஜி ஷிவானியையும் பின்னால் சுற்றவிட்டுள்ளார்.
டூயட் பாடி லவ் பண்ண
மேலும் வேலையில்லா பட்டதாரி படத்தில் இடம்பெற்ற ஊதுங்கடா சங்கு என்ற பாடலையும் பாட சொல்லி, கேட்டு ரசிக்கிறார் பாலாஜி. இதில் டைமிங்காக எருமைக்கு கூட புளுக்ராஸ் இருக்கு.. எனக்காக யோசிக்க உயிரா இருக்கு
மரத்த சுத்தி டூயட் பாடி லவ் பண்ண எனக்கும் தான் ஆச இருக்கு.. என்ற வரிகளை பாடுகிறார் ஷிவானி.
கண்களாலேயே பேசி
அப்போது லவ் என்று வரும் வரியை அண்டர்லைன் பண்ணுமாறு சோமிடம் கூறி கலாய்க்கிறார் ரியோ.
இதில் இருவரின் பார்வையுமே ஏதோ கண்களால் பேசிக் கொள்வதை போல் உள்ளது.
ரியோவும் கலாய்
நேற்று சம்யுக்தா ஷிவானி ஓகே ஆயிடுச்சா என்று பாலாஜியை டபுள் மீனிங்கில் கலாய்த்தார். இந்நிலையில் ரியோவும் அவர்களை கலாய்ப்பது.. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.