அவங்கள நோண்டுறதுதான் எனக்கு வேலையா? ஆஜித்திடம் அனிதா குறித்து புலம்பிய பாலாஜி!
சென்னை: அனிதாவால் காண்டான பாலாஜி, ஆஜித்திடம் புலம்பி தீர்த்தார்.
பிக்பாஸ் வீட்டில் பாசிப் பருப்பு பிரச்சனையை தொடர்ந்து நேற்று கடலை பருப்பு பிரச்சனை உருவானது.
ஞாயிற்றுக்கிழமை துவரம் பருப்புக்கு பதில் கடலை பருப்பை ஊற வைத்தார் அனிதா. ஆனால் அதை ஃபிட்ஜில் எடுத்து வைக்காமல் மூன்று நாட்களாக அப்படியே வைத்துள்ளார்.

ரம்யா விதண்டாவாதம்
இதுகுறித்து ஆரி வீட்டின் கேப்டனான பாலாஜியிடம் கூறினார். இதனை பாலாஜி ரம்யாவிடம் கேட்டதும், ஆரி சாப்பாட்டை ஏன் வேஸ்ட் பண்ணினார் என்று விதண்டாவாதம் பேசினார். தொடர்ந்து அனிதாவிடமும், அவர் வேஸ்ட் பண்றதெல்லாம் குப்பையில் போட மாட்டார் என ஆரியை மட்டுமே டார்கெட் பண்ணி பேசினார்.

நான் ஏதாவது செய்தால்தான்
இதனால் கடுப்பான அனிதா இதற்குதான் கிட்சன் டீம்முக்கே வரக்கூடாது என்று கூறினார். தான் ஏதாவது செய்தால்தான் அதனை பாலாஜி பிரச்சனையாக்குவதாக கூறி பாலாஜியிடம் வாக்குவாதம் செய்தார்.

பாலாஜி கடுப்பு
மேலும் பாலாஜி குறித்து ரம்யாவிடமும் புகார் கூறிக் கொண்டிருந்தார். ஏற்கனவே அனிதா மீது செம காண்டில் உள்ளார் அனிதா. கிட்சன் டீம் கேப்டனான அனிதா, எந்த பொறுப்பையும் எடுத்துக்கொள்வதில்லை என்று. ஷிவானியுடனான பால் சண்டையின் போதே அவரை கிட்சன் டீமில் இருந்து மாற்ற முடிவு செய்தார்.

பொறுப்பு எடுத்துக்கொள்வதில்லை
நேற்றும் அனிதா அடாவடி செய்ததால் கடுப்பான பாலாஜி, இதுகுறித்து ஆஜித்திடம் கொட்டித் தீர்த்தார். அதாவது கிட்சன் டீம்மில் எந்த பொறுப்பையும் அனிதா எடுத்துக் கொள்வதில்லை. பாத்திரித்தை தீச்சினால் கூட அதை எடுத்துக்க மாட்றாங்க. நான் எதையுமே கேட்பதில்லை.

அதான் என் வேலையா?
இவ்ளோ தப்பு பண்ணியிருக்காங்க, நான் எதுவுமே கேட்காத போது இன்வெஸ்ட்டிகேட் பண்றேன் சொன்னா என்ன அர்த்தம்? இவங்கள நோண்டுறதுதான் என் வேலையா என்று புலம்பி தீர்த்தார்.


Click it and Unblock the Notifications











