அந்த டாஸ்க்ல அம்மாவ பத்தி அப்டி சொன்னாரு.. இந்ந டாஸ்க்ல இப்டி சொல்லியிருக்கார்.. வசமாக சிக்கிய பாலா!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பாலா பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2 எபிசோடுகளில் அவரது அம்மா குறித்து இருவேறு மாதிரியாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது முதலே அதிகம் செய்திகளில் அடிப்பட்டு வருபவர் பாலாஜி முருகதாஸ்.

மிஸ்டர் இந்தியா உள்ளிட்ட பல பட்டங்களை பெற்றுள்ள பாலாஜி முருகதாஸ் ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ளார்.

அம்மா குடிப்பார்

அம்மா குடிப்பார்

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் வாரத்தில் கடந்து வந்த பாதை டாஸ்க்கில் தனது அம்மாவும் அப்பாவும் குடிகாரர்கள். தனது அம்மாவும் குடித்துவிட்டு காலையில் எழுந்து சமைத்து கொடுக்கமாட்டார்.

எதுக்கு பெத்துக்குறீங்க?

எதுக்கு பெத்துக்குறீங்க?

பலநாட்கள் பட்டினியாகவும் சில நாட்கள் மிஸ் வாங்கி கொடுத்த சாப்பாட்டையும் தான் சாப்பிட்டிருக்கிறேன். ஒரு குழந்தையை வளர்க்க முடியா விட்டால் எதற்கு வளர்க்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார். தான் என்ன செய்கிறேன் என்பது கூட என் பெற்றோருக்கு தெரியாது.

யாருமே வரவில்லை

யாருமே வரவில்லை

நான் மிஸ்டர் இந்தியா பட்டம் வென்றுவிட்டு நாடு திரும்பிய போது கூட தன்னை வரவேற்க யாரும் இல்லை என்றார். தனக்கு எல்லாமே தனது நண்பர்கள்தான் என்றார். அவரது பேச்சு பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் மீது பரிதாபத்தையும் ஏற்படுத்தியது.

அம்மா இல்லத்தரசி

அம்மா இல்லத்தரசி

ஆனால் அடுத்த சில நாட்களிலேயே பாலாஜி சொன்னதெல்லாம் பொய் என்றும் அவரது அப்பா ஒரு தொழில் அதிபர் அம்மா ஒரு இல்லத்தரசி என்றும் தெரியவந்தது. மேலும் பாலாஜி நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் தகவல் வெளியானது.

ஆரத்தி எடுத்து வரவேற்றார்

ஆரத்தி எடுத்து வரவேற்றார்

இந்நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற நீங்கா நினைவுகள் டாஸ்க்கில் தனது அம்மா ஒரு இன்னொசன்ட் என்று, தான் மிஸ்டர் இந்தியா பட்டம் வென்றுவிட்டு வீட்டிற்கு சென்ற போது மேலதாளத்துடன் வரவேற்றார் என்றும் ஆர்த்தி எடுத்தார் என்றும் கூறியுள்ளார்.

அந்த வாயா இது?

அந்த வாயா இது?

பாலாஜி பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே தனது அம்மா குறித்து இரண்டு மாதிரியாக பேசியுள்ளார். அவரது பேச்சை கேட்ட நெட்டிசன்கள் இரண்டு வீடியோக்களையும் ஒன்றாக ஷேர் செய்து வருகின்றனர். முதல் வாரம் அப்படி பேசிய வாயா இந்த வாரம் இப்படி பேசுகிறது என்றும் கூறி வருகின்றனர்.

ரெட் கார்டு கொடுக்கப்படும்

ரெட் கார்டு கொடுக்கப்படும்

இதனிடையே சனம் ஷெட்டியை தரக்குறைவாக பேசியதற்காகவும் அவர் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்துதான் அழகிப்பட்டத்தை பெற்றார் என்று கூறியதற்காகவும் அவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்படும் என்றும் நம்பதகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X