ஷிவானி பாத்தா என்னாகும்.. நீச்சல் குளத்தில்.. பெண்ணை தலைக்குமேல் தூக்கி..தம்பெல்ஸ் எடுக்கும் பாலா!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பாலாஜி, பெண் ஒருவரை நீச்சல் குளத்தில் தனது தலைக்கு மேல் தூக்கி ஆட்டம் போடும் பழைய வீடியோ வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் பாலாஜி முருகதாஸ் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்தில் கடந்து வந்தப் பாதை டாஸ்க்கில் பேசிய பாலாஜி, தனது அப்பாவும் அம்மாவும் குடிகாரர்கள் என கூறி குண்டை தூக்கி போட்டார்.

அன்பே கிடைக்கவில்லை
தனக்கு அன்பே கிடைக்கவில்லை, ஒரு நாள் கூட தனக்கு சமைத்து கொடுக்கவில்லை என்றும் உருக்கமாக பேசினார். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே அவர் பேசியதெல்லாம் பொய் என ஆதாரத்துடன் சமூக வலைதளங்களில் வரிந்துக் கட்டினர் நெட்டிசன்கள்.

அம்மா குடிகாரி
அதனை தொடர்ந்து பாலாஜி சரக்கிலேயே குளிக்கும் போட்டோக்களையும் ஷேர் செய்து கழுவி கழுவி ஊற்றினர். கடந்து வந்த பாதை டாஸ்க்கில் தனது அம்மாவை குடிகாரி என்று கூறிய பாலாஜி, நீங்கா நினைவுகள் டாஸ்க்கில் தனது அம்மாவை பற்றி பெருமையாக பேசினார்.

குடியும் கும்மாளமுமாய்
பிக்பாஸ் வீட்டுக்குள்ளேயே இரு வேறு டாஸ்க்குகளில் இருவேறு மாதிரி பாலாஜி பேசிய வீடியோவும் வைரலானது. மேலும் பாலாஜி, சரக்கும் கையுமாய் குடியும் கும்மாளமுமாய் இருந்த போட்டோக்கள் அவரது சமூக வலைதள பக்கங்களில் இருந்து திடீரென நீக்கப்பட்டன.

பெண்களுடன் நெருக்கம்
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் காதல் மன்னனாக சுற்றி வருகிறார் பாலாஜி. கேபி, சனம் ஷெட்டி, சம்யுக்தா. ஷிவானி, சுச்சி என அனைவருடனும் நெருங்கி பழகி வருகிறார். ஷிவானியின் மடியில் படுப்பது, அவரை மசாஜ் செய்துவிட சொல்வது, அவர் ஊட்டிவிட சாப்பிடுவது என இருந்து வருகிறார்.

தீவிரமாக காதலிக்கும் ஷிவானி
பெரும்பாலான நேரம் ஷிவானியுடனே கழித்து வருகிறார். ஆனால் ஹவுஸ்மெட்ஸ் யாராவது கேட்கும்போது, ஷிவானியை தான் காதலிக்கவில்லை என அடித்து பேசி வருகிறார். ஆனால் ஷிவானி பாலாஜியை தீவிரமாக காதலித்து வருகிறார்.

பாலாஜி மேல் பைத்தியம்
பாலாஜியுடன், ஹவுஸ்மெட்ஸ் யாரும் பேசுவதை கூட அவரால் தாங்க முடியவில்லை. சனம் ஷெட்டி, அனிதா, ரம்யா, சம்யுக்தா, சுச்சி என யார் பேசினாலும் உடனே மடை போட்டு விடுகிறார் ஷிவானி. அந்தளவுக்கு பாலாஜி மேல் பைத்தியமாக உள்ளார்.
நீச்சல் குளத்தில் பெண் ஒருவருடன்
இந்நிலையில் பாலாஜியின் பழைய பகீர் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது, இரவு நேரத்தில் கேர்ள் ஃபிரண்ட் ஒருவரை நீச்சல் குளத்தில் வைத்து தலைக்கு மேல் தூக்கி தம்பெல்ஸ் எடுக்கிறார் பாலாஜி.

தண்ணீர் இருந்தால்
ஆடாத ஆடாத என்று சொல்லி அந்த பெண்ணை பாலாஜி தூக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களை திணறடித்து வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் தண்ணீர் இருந்திருந்தால் பாலாஜி ஷிவானியையும் இப்படிதான் தூக்குவார் என்று கலாய்த்துள்ளனர்.

ஷிவானி பார்த்தால்..
இன்னும் சில நெட்டிசன்கள், மத்த பொண்ணுங்க பாலாஜி கூட பேசுறதையே ஷிவானியால தாங்கிக்க முடியல, இப்படி பாலாஜி அரை நிர்வாணமா ஒரு பெண்ணை தலைக்கு மேல் தூக்கி தம்பெல்ஸ் எடுப்பதை பார்த்தால் என்னாகுவார் என கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











