டேஞ்சர் பாலை தொட்டு மொத்தமாய் முட்டையாக்கிய பாலாஜி.. வேற லெவல் பர்ஃபாமன்ஸ்!
சென்னை: பால் கேட்ச் டாஸ்க்கில் சிவப்பு பாலை தொட்டு மொத்த மதிப்பெண்களையும் இழந்து முட்டை வாங்கினார் பாலாஜி.
பிக்பாஸ் வீட்டில் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக பால் கேட்ச் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஹவுஸ்மேட்ஸ் இரு அணிகளாக பிரிந்து போடப்படும் பாலை பிடிக்க வேண்டும்.
நீல நிற பந்துகள் மூன்று சைஸ்களாக, 20, 10, 5 மதிப்பெண்களுடன் போட்டப்பட்டது. இதில் 20 மிதிப்பெண்கள் பால் மொத்தத்தையும் சோம் அணியினரே பிடித்தனர்.

டேஞ்சர் பால்
இதனை தொடர்ந்து இரவு நேரத்தில் விதிகளை மாற்றினார் பிக்பாஸ். அதன்படி கீழே விழும் பால்களை கூட எடுக்கலாம் என்றார். மேலும் சிவப்பு நிற பந்துகளும் வரும் என்று அறிவித்த பிக்பாஸ் அவை டேஞ்சர் பால் என்றார்.

ரம்யா பிளான்
மேலும் அந்த பந்துகளை தொட்டால் பெற்றுள்ள மொத்த மதிப்பெண்களும் முட்டையாகிவிடும் என்றும் அறிவித்தார் பிக்பாஸ். இதனைக் கேட்ட ரம்யா தனது அணியினரிடம் இதற்கு மேல் மதிப்பெண்கள் பெறாவிட்டால் கூட பரவாயில்லை.

மொத்தத்தையும் இழந்து முட்டை
பெற்ற மதிப்பெண்களை இழந்துவிடக்கூடாது என்றார். ஆனால்
வேக வேகமாக வந்த பாலாஜியோ, முதலில் வந்த சிவப்பு பாலை அப்படியே பிடித்து, பெற்றிருந்த 50 மதிப்பெண்களையும் இழந்து முட்டையாக்கி விட்டார்.

விடிய விடிய டாஸ்க்
தொடர்ந்து வந்த நீல நிற பந்துகளையும் பிடிக்காமல் திணறியது பாலாவின் டீம். விடிய விடிய நடந்த இந்த டாஸ்க்கில் பாலாஜி டீம் பெற்ற மதிப்பெண்களையும் இழந்ததுதான் மிச்சம்.

பின் தங்கியுள்ள பாலா டீம்
ஏற்கனவே பாலாஜியால் பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க், கடிகார டாஸ்க் என பல லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்குகளில் முட்டை வாங்கியது. இந்த டாஸ்க்கிலும் பாலாஜியின் டீம் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











