வெளியே வந்த பிறகும் பிரச்சனை.. டுபாக்கூர் விவகாரத்தில் பாலாஜியை கட்டம் கட்டும் ஜோ மைக்கேல்!

சென்னை: பாலாஜி முருகதாஸ் தன்னை பார்த்து பயப்படுவதாக ஜோ மைக்கேல் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களிலேயே அதிக சர்ச்சைகளில் சிக்கியவர் என்றால் அது பாலாஜி முருகதாஸ் தான்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தான் பெற்ற பட்டங்கள் குறித்து பேசிய பாலாஜி, சனம் ஷெட்டி பங்கேற்ற அழகிப்போட்டியை டுபாக்கூர் பெஜன்ட் என்றார்.

ஒளிபரப்பவில்லை

ஒளிபரப்பவில்லை

மேலும் காம்ப்ரமைஸ் செய்தும் அட்ஜெஸ்ட்மென்ட் செய்தும் தான் சனம் ஷெட்டி அந்த அழகிப்போட்டியில் வென்றார் என்றும் கூறினார் பாலாஜி. ஆனால் அதனை விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பவில்லை.

விளாசிய கமல்

விளாசிய கமல்

அது பின்னர்தான் தெரியவந்தது. இதனால் கடுப்பான சனம் ஷெட்டி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த விவகாரம் குறித்து விசாரித்த கமல், பொறுப்புடன் பேச வேண்டும், எப்படி டுபாக்கூர் என்று சொல்லலாம் என கேட்டு பாலாஜியை விளாசினார். அதோடு இனிமேல் இப்படி நிகழாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் எச்சரித்தார்.

லீகல் பிரச்சனையை சந்திப்பார்

லீகல் பிரச்சனையை சந்திப்பார்

அப்போதே அந்த அழகிப் போட்டியின் ஏற்பாட்டாளரான ஜோ மைக்கேல், பாலாஜியின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் தங்களின் அழகிப் போட்டியை டுபாக்கூர் அழகிப்போட்டி என்று கூறியது குறித்து அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் அதுக்கான லீகல் பிரச்சனையை அவர் சந்திப்பார் என்றார்.

பாலாஜிக்கு ரெட் கார்டு

பாலாஜிக்கு ரெட் கார்டு

சனம் ஷெட்டியின் அட்ஜெஸ்ட்மென்ட் குறித்து பாலாஜி பேசியது, கோர்ட் டாஸ்க்கின் போது சனம் எழுதிய கடித்தத்தின் மூலமே அது தெரியவந்தது. இதனால் பாலாஜிக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. பிரபலங்கள் பலரும் ஒரு பெண்ணை இழிவாக பேசிய பாலாஜியை வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

தூசு தட்டும் ரசிகர்கள்

தூசு தட்டும் ரசிகர்கள்

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்துள்ள நிலையில் அந்த பிரச்சனையை ரசிகர்கள் மீண்டும் தூசு தட்ட ஆரம்பித்துள்ளனர். இதுதொடர்பாக சனம் பங்கேற்ற அழகிப்போட்டியின் ஏற்பாட்டாளரான ஜோ மைக்கேல் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

பயில்வான் சார் பயப்படாதீங்க

பயில்வான் சார் பயப்படாதீங்க

அதாவது, தம்பிங்களா 2 நாள்ல சிங்கம் வரும்னு சொன்னாங்க.. எங்கேயாவது பார்த்தீங்களா.. இதுல தனுஷ் சார் டயலாக் வேற.. லீகல் நோட்டிஸ் அவருடைய பர்சனல் நம்பருக்கும் அனுப்பப்பட்டுவிட்டது. பயில்வான் சார் பயப்படாம புரூஃப் காட்டுங்க உள்ள சொன்னதுக்கு.. அப்படி இல்லன்னா நீங்கதான் அதுன்னு கன்ஃபார்ம்.. என்று பதிவிட்டுள்ளார்.

கன்டெஸ்டென்ட் பெரியவங்களா?

கன்டெஸ்டென்ட் பெரியவங்களா?

மற்றொரு பதிவில் பிக்பாஸ் பொருத்தவரைக்கும் கமல் சார் பெரியவரா இல்ல கன்டெஸ்ட்டென்ட் பெரியவங்களா.. அடேய் அவர் பதிவு செய்யப்படாத ஒரு பேஜன்ட்டின் டைட்டில் வின்னர்.. நான் இந்த நாட்டில் பதிவு செய்யப்பட்ட பேஜன்ட்டின்
ஏற்பாட்டாளர்.. இந்த சின்ன வித்தியாசம் கூட புரியாவிட்டால் ஓலா மாதிரி ஓட்ஸ் சாப்பிடுங்க.. இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Recommended Video

Bigg Boss Rio Raj First exclusive video | உங்க அன்புக்கு நன்றி - Filmibeat Tamil
பாலாஜி பயப்படுகிறார்

பாலாஜி பயப்படுகிறார்

மற்றொரு டிவிட்டில் பாலாஜி முருகதாஸ் லீடிங் யூட்யூப் சேனலில் லைவில் ஒன் ஆன் ஒன் பேச பயப்படுகிறார். நான் அவரை முழுமையாக எக்ஸ்போஸ் பண்ணிவிடுவேன் அவரால் உண்மையை ஃபேஸ் பண்ண முடியாது என்று அவருக்கு தெரியும். ஆகையால் அவர் கோர்ட்டில் சட்டப்படி எதிர் கொள்ளட்டும். சொம்புஸ் அவருடைய லீகல் செலவுகளை பார்த்துக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X