குடியும் கும்மாளமுமாய் இருந்த பாலாஜி.. இன்ஸ்டாவில் போட்டோக்கள் வீடியோக்கள் அதிரடியாய் நீக்கம்!

சென்னை: குடியும் கும்மாளமுமாய் இருந்த பாலாஜியின் போட்டோக்கள் மற்றும் சில வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாய் தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களுக்கு கடந்த வாரம் கடந்து வந்த பாதை டாஸ்க் கொடுக்கப்பட்டது.

இதில் போட்டியாளர்கள் தங்களின் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

குடிக்காரர்கள்

குடிக்காரர்கள்

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தான் கடந்து வந்த பாதையை பகிர்ந்துக் கொண்டார் பாலாஜி முருகதாஸ். அப்போது சிறு வயதில் ஒரு நாள் கூட தனது அம்மா தனக்கு பள்ளிக்கூடம் செல்ல சமைத்துக் கொடுத்ததில்லை என்றும் அப்பாவும் அம்மாவும் சேர்ந்து குடித்துவிட்டு தன்னை கவனிக்க வில்லை என்றும் கூறி கலங்கினார்.

எதுவும் கிடைக்கல

எதுவும் கிடைக்கல

மேலும் இரவில் எந்த காரணமுமே இல்லாமல் தூங்கிக் கொண்டிருக்கும் தன்னை கேஸ் பைப்பால் அடிப்பார் என்றும் படு உருக்கமாக பேசினார். நல்ல சாப்பாடு பெற்றோர் பாசம் என எதுவும் கிடைக்கவில்லை என்ற அவர், குழந்தைகளை நல்லா வளர்க்க முடியாத நீங்களெல்லாம் எதற்கு பிள்ளை பெற்றுக் கொள்கிறீர்கள் என்றார்.

View this post on Instagram

😂✌🏼

A post shared by Balaji Murugadoss (@officialbalakrish) on

பாலாஜிக்கு எதிர்ப்பு

அவரது பேச்சு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரது பேச்சைக் கேட்ட ஹவுஸ்மேட்ஸ் மட்டுமின்றி பார்வையாளர்களும் கண் கலங்கினர். தேநேரத்தில் பெற்றோரை பற்றி பாலாஜி முருகதாஸ் அப்படி பேசியிருக்க கூடாது என்றும், அப்பாவை அடித்தாக பெருமையாக கூறுகிறாரே என்றும் எதிர்ப்புகள் எழுந்தன.

பேசியதெல்லாம் பொய்

பேசியதெல்லாம் பொய்

இந்நிலையில் பாலாஜி முருகதாஸ் பேசியதெல்லாம் பொய் என பலரும் சமூக வலைதளங்களில் ஆதாரங்களை நீட்டினர். அவரது அப்பா சென்னையை சேர்ந்த பிஸ்னஸ் மேன் என்றும் அம்மா ஹவுஸ் வொய்ஃப் என்றும் அவரை பற்றி தெரிந்தவர்கள் கூறினர். சென்னையில் உள்ள சிறந்த பள்ளிக்கூடம் மற்றும் சிறந்த கல்லூரியில் பாலாஜி படித்ததாகவும் அது தொடர்பான தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.

இது சரியா?

இது சரியா?

இதனிடையே பாலாஜி முருகதாஸ் பீரில் குளிக்கும் போட்டோக்களை வெளியிட்ட நெட்டிசன்கள், அப்பா அம்மா குடிப்பார்கள் என்றீர்கள். ஆனால் நீங்கள் இப்படி சரக்கிலேயே குளிக்கிறீர்களே என்று கேட்டனர். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது.

குடியும் கும்மாளமுமாய்

குடியும் கும்மாளமுமாய்

இந்நிலையில் பாலாஜி முருகதாஸின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த சில போட்டோக்களும் வீடியோக்களும் தற்போது அதிரடியாய் நீக்கப்பட்டுள்ளது. அந்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்களில் பாலாஜி முருகதாஸ் கையில் சரக்குடன் குடியும் கும்மாளமுமாய் இருந்ததாகவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

அனைத்தும் நீக்கம்

அனைத்தும் நீக்கம்

பிக்பாஸ் ஷோவில் பெற்றோரை பற்றி அப்படி பேசிவிட்டு அதற்கு முரணாய் பாலாஜி முருகதாஸே குடிப்பது போன்ற போட்டோக்களும் வீடியோக்களும் இருந்தால் நிச்சயம் எதிர் வினை ஆற்றிவிடும் என்பதால் அவரது அட்மின் அந்த போட்டோக்களையும் சரக்குடன் பார்ட்டி பண்ணும் வீடியோக்களையும் நீக்கியதாகவும் சமூக வலைதளங்களில் கருத்து பகிரப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X