அச்சச்சோ.. இந்த வாரம் அவரு வெளியே போகலையாம்.. புகைச்சலில் அர்ச்சனா அன்ட் கோ!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு பிரபலம் சேவ் ஆகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் சக ஹவுஸ் மேட்ஸ்காளால் நாமினேட் செய்யப்படும் போட்டியாளர்களில் ஒருவர் மக்களின் வாக்களிப்புக்கு ஏற்ப பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில், சுரேஷ் சக்கரவர்த்தி, ஆரி, அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ், ஆஜித் ஆகிய 5 பேர் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்தனர்.

யார் வெளியேற்றம்?
அவர்களில் ஆரியும் சுரேஷ் சக்கரவர்த்தியும் அதிக அளவாக தலா 9 ஓட்டுகளை பெற்று நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்தனர். இவர்களில் யார் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கிழியும் முகத்திரை
சுரேஷ் சக்கரவர்த்தி ஆரம்பம் முதலே ஸ்மார்ட்டாக விளையாடி வருகிறார். கொளுத்தி போட வேண்டும் என்று அவர் சொன்னாலும், இதுவரை எதையும் கொளுத்திப் போடவில்லை. தானாகவே போட்டியாளர்களின் முகத்திரை கிழிந்து வருகிறது.

கன்டென்ட் கொடுப்பவர்கள்
இதனால் சுரேஷின் கிரேஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பெற்றிருக்கும் போட்டியாளர்கள் 5 பேருமே முக்கியமானவர்களாகவும் கன்டென்ட் கொடுப்பவர்களாகவும் பார்க்கப்படுகிறார்கள்.

ஆஜித் சேவ்
இதனால் இந்த வாரம் யார் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஏற்கனவே ஆஜித்திடம் எவிக்ஷன் ஃபிரி பாஸ் உள்ளதால் அவர் சேவ் ஆகிவிடுவார் என்பது தெரிந்த கதைதான்.

எதிர்பார்க்கும் ஹவுஸ்மேட்ஸ்
ஆகையால் பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் அஜித் பாதுகாப்பாக இருப்பார். அதே நேரத்தில் எல்லோரிடமும் முகத்திற்கு நேராய் மூஞ்சில் அடித்தாற் போல் பேசி வரும் பாலாஜி முருகதாஸ் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என ஹவுஸ்மேட்ஸ் சிலர் எதிர்பார்த்து வருகின்றனர்.

ரசிகர்களும் கோபம்
சுரேஷ் சக்கரவர்த்தியிடம் நல்ல படியாக பேசினாலும் அவ்வப்போது தரக்குறைவாக பேசி வருகிறார். அதேபோல் அர்ச்சனாவிடமும் ஆத்திரத்தை காட்டி வருகிறார் பாலாஜி. ரசிகர்கள் மத்தியிலும் அவருக்கு எதிர்ப்பு இருந்து வருகிறது. ஏற்கனவே அப்பா அம்மா குடிகாரர்கள் என பாலா பொய் சொன்னதாக தகவல் வெளியாகி வருகிறது.

தப்பித்த பாலாஜி
இதனால் அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அஜித்துடன் சேர்ந்து அவரும் எவிக்ஷனில் இருந்து தப்பித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் பாலாஜி முருகதாஸ் வெளியேற வாய்ப்பு இல்லை என நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வந்துள்ளது.

அர்ச்சனா அன்ட் கோ
ஏற்கனவே அர்ச்சனா, மற்றும் அவருடைய கூட்டாளிகளான நிஷா, வேல்முருகன் ஆகியோருக்கு பாலாஜியை கண்டால் பிடிக்கவில்லை. பாலாஜிக்கும் அவர்கள் ஒரு தலை பட்சமாக இருப்பதாக தகவல் கருத்துள்ளது. இதனால் அவர்களுக்குள் எப்போதும் நான்சிங்காகவே சென்று கொண்டிருக்கிறது.

கேப்டனாகா விட்டால்
இந்நிலையில் பாலாஜி இந்த வாரம் எவிக்ஷனில் இருந்து காப்பாற்றப்பட்டிருப்பது, அர்ச்சனா மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எரிச்சலையும் புகைச்சலையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் வரும் வாரம் அவர் கேப்டனாகா விட்டால் நிச்சயம் நாமினேஷனில் இடம் பெறுவார் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











