ஆரோக்கியம் முக்கியம் பிகிலு.. 4வது போட்டியாளராக கலந்து கொண்டார் பாலாஜி முருகதாஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் 4வது போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார் பாலாஜி முருகதாஸ்.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்ப நிகழ்ச்சி இன்று அசத்தலாக தொடங்கி உள்ளது. கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த உடன் பிக்பாஸ் வீட்டை சுற்றிக் காண்பித்தார்.
ஏகப்பட்ட புது மாடல் டிசைன்களுடன் பிக்பாஸ் வீடு உருவாகி உள்ளது.

பிக்பாஸ் போட்டியாளர்கள்
நடிகர் ரியோ ராஜ் முதல் போட்டியாளராக கலந்து கொண்டார். அடுத்ததாக நடிகை சனம் ஷெட்டியும், மூன்றாவது போட்டியாளராக நடிகை ரேகாவும் கலந்து கொண்டனர். இந்நிலையில், 4வது போட்டியாளராக பாலாஜி முருகதாஸ் கலந்து கொண்டுள்ளார்.

யார் இந்த பாலாஜி முருகதாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் செம ஃபிட்டாக ஆறடி அர்னால்டு போல கலந்து கொண்டு இருக்கும் இந்த பாலாஜி முருகதாஸ் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து உள்ளது. 2018ம் ஆண்டு மிஸ்டர் இன்டர்நேஷனல் பட்டத்தை தட்டிச் சென்றவர் தான் இந்த பாலாஜி முருகதாஸ்.

ஆரோக்கியம் முக்கியம்
உலக நாயகன் கமல்ஹாசன் இவர் குறித்து அறிமுகம் செய்யும் போதே, ஆரோக்கிய விசயத்தில் மற்றவர்களை விட இவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட் என்பவர் என்பது போலவே பில்டப் கொடுத்தார். கடற்கரையில் ரன்னிங் போகும் அறிமுக வீடியோவுடன் இவரை இண்ட்ரோ செய்தனர்.

மிஸ்டர் இன்டர்நேஷனல்
பாடி பில்டிங் மற்றும் மாடலிங்கில் அதிக ஆர்வம் கொண்டவர் பாலாஜி முருகதாஸ். பிக்பாஸ் வீட்டில் ஆடல் பாடல் என எதுவுமின்றி செம சிம்பிளாக ஸ்மார்ட் அண்ட் ஹேண்ட்ஸம் ஆக என்ட்ரியானார் பாலாஜி முருகதாஸ்.

வில்லனாக
தமிழ் சினிமாவில் ஆர்கே சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டைசன்' என்ற படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் பாலாஜி முருகதாஸ். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது கலந்து கொண்டுள்ளது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. வில்லனாக நடித்துள்ள இவர், அடுத்ததாக ஹீரோவாக மாறுவாரா? பிக்பாஸ் வீடு அவரை அந்த ஏணியில் ஏற்றி விடுமா என்பதை பார்க்கலாம்!


Click it and Unblock the Notifications











