தப்பை ஒப்புக் கொண்ட பாலா.. தலைவி ஆவாரா ரம்யா? குருட்டுத்தனமாக சப்போர்ட் பண்ணும் ஹவுஸ்மேட்ஸ்!
சென்னை: அடுத்த வாரத்துக்கான கேப்டன் டாஸ்க்கில் பாலாஜி முருகதாஸ் வின்னர் என ஹவுஸ்மேட்கள் தெரிவிக்க, தனது ஆட்டத்தில் நடந்த தப்பை பாலா கண்ணியமாக ஒப்புக் கொள்ளும் மூன்றாவது புரமோ ஆச்சர்யப்படுத்தி உள்ளது.
அடுத்த வாரத்திற்கான தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டியில், நிஷா, ரம்யா பாண்டியன் மற்றும் பாலாஜி முருகதாஸ் போட்டியிட்டனர்.
பாலா தான் வின்னர் என பலரும் கூறிய நிலையில், குறும்படம் எஃபெக்ட் காரணமாக பாலா தனது தவறை ஒப்புக் கொண்டுள்ளார்.

ஏமாத்தி விளையாடுறது
கேப்டன் டாஸ்க் மட்டும் இல்லை, பிக் பாஸ் வீட்டில் எந்தவொரு டாஸ்க்ன்னு வந்தாலே பாலாஜி முருகதாஸ் ஏமாத்தி விளையாடுவதையும், அதில் பிரச்சனை பண்ணுவதையுமே இதுவரை இந்த பிக் பாஸ் வீட்டில் செய்துள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் கமல் கொடுத்த ஷாக் ட்ரீட்மென்ட் காரணமாக இந்த வாரம் டோட்டலாக ஆளே மாறி விட்டார்.

கேப்டன் டாஸ்க்
முதல் இரு புரமோக்களிலும் அனிதா சம்பத், ரியோவையும் அர்ச்சனாவையும் கேள்வி கேட்டு ஆஃப் பண்ணும் காட்சிகள் இடம்பெற்ற நிலையில், மூன்றாவது புரமோவில் தலைவர் டாஸ்க்குக்கான போட்டியை காட்டி உள்ளனர். கொடுக்கப்பட்ட பிளாக்குகளை வைத்து தங்கள் உருவத்தை ரம்யா, நிஷா மற்றும் பாலா வைக்க போராடுகின்றனர்.

கமான் பாலா
ரியோ மற்றும் அர்ச்சனா கேங் பாலாவை தங்களது குரூப்புக்குள் வளைக்க ரொம்பவே பாடுபட்டு வருகின்றனர். பைனலுக்கு போக வேண்டும் என்றால், இனிமே கெட்டவனாக இருக்க முடியாது, நல்லவனாக மாறினால் தான் டைட்டில் கிடைக்கும் என பாலாவும் விளையாடி வருகிறார். ரியோ, கமான் பாலா, சூப்பர் பாலா என கொடுக்கும் உற்சாக குரல் சற்றே எரிச்சலூட்டுகிறது.

பாலா தான் வின்னர்
ஹவுஸ்மேட்ஸ் அனைவரும், யார் வெற்றி பெற்றாங்க, யார் ஒழுங்கா விளையாடுனாங்கன்னு பார்க்காமல், குருட்டுத்தனமாக பாலாஜியை கேப்டன் ஆக்கி விடுகின்றனர் என்பது புரமோவை பார்த்தாலே நன்றாக தெரிகிறது. போன வாரமே ஆரி, பாலாவின் விளையாட்டை தப்புன்னு சொல்லி பஞ்சாயத்து வந்ததால், அவரும் வாய் திறக்காமல் விட்டு விட்டார் என்றே தெரிகிறது.

உண்மையை சொன்ன பாலா
வழக்கம் போல இந்த முறையும் கேப்டன் டாஸ்க்கை பாலாவால் கம்ப்ளீட் பண்ண முடியாமல், போங்காட்டம் ஆடி விட்டார். ஆனால், அதை ஹவுஸ்மேட்கள் யாருமே சுட்டிக் காட்டாத நிலையில், எப்படியோ கமல் சார் நாளைக்கு குறும்படம் போட்டுக் காட்டி மீண்டும் அசிங்கப்படுத்தி விடுவார் என்பதை தெரிந்து கொண்டு, நான் அடுக்கியதில் தப்பு பண்ணிட்டேன் என உண்மையை சொல்லி பாராட்டுக்களை அள்ளி வருகிறார் பாலா.

ரியல் வின்னர் ரம்யா
மேலும், ரியல் வின்னர் ரம்யா பாண்டியன் தான் என்றும் அவர் தான் பிளாக்குகளை சரியாக அடுக்கினார் என்றும் உண்மையை உரக்கச் சொல்லி டோட்டலாக நல்லவனாக மாறிவிட்டார். பாலாவுக்கு கொடுக்கப்பட்ட கேப்டன் பட்டம் தொடருமா? இல்லை ரியல் வின்னர் ரம்யா பாண்டியன் கேப்டன் ஆக்கப்படுவாரா? என்பதை காண ரசிகர்கள் ஆர்வம்.

வேலைக்கு ஆகாத நிஷா
ஏகப்பட்ட தடவை அர்ச்சனா கேங் நிஷாவுக்கு பெஸ்ட் பர்ஃபார்மர் அவார்டு கொடுத்து கேப்டனாக மாற்ற முயற்சி செய்தது. ஆனால், ஒரு முறை கூட அவர் கேப்டனுக்கான போட்டியில் வெற்றி பெறவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்புறம் எப்படி அவர் பெஸ்ட் பர்ஃபார்மர் ஆகிறார் என்கிற கேள்வியையும் அனிதாவை போலவே பிக் பாஸ் ரசிகர்களும் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











