கமல் முன்னாடியே ரூல்ஸ் பிரேக் பண்ண பாலா.. பிக் பாஸ்லாம் எம்மாத்திரம்.. ஷிவானி பற்றிய ரகசியம் வேற!
சென்னை: மணிக்கூண்டு டாஸ்க்கில் குக்கூ என கூவுவதற்கு குயில் டிரெஸ் கொடுக்காமல் பச்சைக் கிளி தொப்பியை கொடுத்து குழப்பி இருந்தனர்.
நேற்றைய எபிசோடிலும் அதே தொப்பியை கொடுத்து கமல் தங்களுக்கு தெரிந்த ரகசியங்களை கூவ சொன்னார்.
மற்ற எல்லா போட்டியாளர்களும் குல்லாவை மாட்டிக் கொண்டு பேசிய நிலையில், கமல் முன்னாடியே பாலா வேண்டுமென்றே ரூல்ஸ் பிரேக் பண்ணார்.

சேஃப் கேம்
குக்கு குல்லாவை மாட்டிக் கொண்டு நிற்கும் நபருக்கு யாருடைய போட்டோ வருகிறதோ, அவரை பற்றிய ரகசியத்தை சொல்ல வேண்டும் என கமல் நூல் விட்டுப் பார்த்தார். ஆனால், யாருமே ரகசியத்தை சொல்லாமல், சேஃப் கேம் ஆடிக் கொண்டு தான் இருந்தனர். அது கமலுக்கும் ரசிகர்களுக்கும் ரொம்பவே போர் அடித்தது.

ரகசியமா ஒப்பினியனா
குல்லாவை மாட்டிக் கொண்டு பேச ஆரம்பித்த நிஷாவுக்கு அனிதாவின் போட்டோ வந்தது. அவளுக்கு ஒரு பிரச்சனைன்னா தனியா போய் உட்கார்ந்து கொண்டு அட்டென்ஷன் கிடைக்க பார்ப்பா சார் என சொல்லிவிட்டு எஸ்கேப் ஆன நிஷாவிடம் இது ரகசியமா? ஒப்பினியனா எனக் கேட்டு அனிதாவிடம் வசமாக கோர்த்து விட்டுள்ளார் கமல்.

அர்ச்சனாவுக்கு அர்ச்சனாவே
அதில், அர்ச்சனாவுக்கு வித்தியாசமாக அர்ச்சனாவின் புகைப்படமே வந்தது. உங்களை பற்றி நீங்களாவது ரகசியத்தை சொல்லுங்கள் என கமல் சொல்ல, எனக்கு பாலாவை ரொம்ப புடிக்கும் சார். அவனுக்கு அது தெரியலைன்னாலும் நான் தான் சார் அவனுக்கு அம்மா என்கிற ரேஞ்சுக்கு சம்மந்தமே இல்லாமல் பேசி கடுப்பேற்றினார்.

பெட்டுக்குள்ள ரகசியம்
குக்கூன்னு கூவறதையே வித்தியாசமா கூவி அனைவரையும் பயப்பட வைத்த ஆரிக்கு நிஷா போட்டோ வந்தது. பெட்டுக்குள்ள தூங்கும் போது ஏகப்பட்ட ரகசியங்களை நிஷா பண்ணுவார் என்று அவர் சொன்னதும், ரசிகர்கள் கொஞ்சம் ஜர்க் ஆனார்கள், ஆனால், பிரேக் விடாமல், அவங்க அத்தானுக்கு ஏகப்பட்ட கடிதங்கள் எழுதுவாங்க, காதலை அனுப்புவாங்க, பாவம் பெட்மேட் அர்ச்சனா என்று சொல்லி தப்பித்துக் கொண்டார்.

திருட்டு முழி
அடுத்து ரம்யாவுக்கு ஆரியின் போட்டோ வர, என்ன சொல்றது என யோசித்த ரம்யாவுக்கு, அர்ச்சனா ஓரக்கண்ணால பார்க்கிறதுன்னு எடுத்துக் கொடுக்கும் போதே, அது ரகசியம் இல்லை என்றாகி விட்டது. மேலும், கேபி நெஞ்சில் முட்டுக் கொடுத்து கேப்டன் டாஸ்க்கில் விளையாடும் போதும், ஆரி ஓரக்கண்ணால பார்த்ததை எல்லாருமே பார்த்து விட்டனர். கேப்டன் லுக்காக இருக்காமல் திருட்டு முழியா இருக்கும் என ரம்யா கடைசியா ஆரியை பங்கம் பண்ணிட்டார்.

டைம் எல்லாம் சொல்லும் கேபி
சுசித்ராவுக்கு சம்யுக்தா போட்டோவும், சம்யுக்தாவுக்கு சுசித்ராவும் வந்தது. ஆனால், இருவரும் ரகசியம் சொல்றேன் என்கிற பெயரில் மொக்கைப் போட்டுவிட்டு சென்றனர். இதற்கும் பரிசு கொடுத்தால் தான் உண்மையான ரகசியம் வெளிவருமோ என்று கமல் கலாய்த்தார். அடுத்ததாக வந்த கேபிக்கு சோம் போட்டோ வர, இரவு 11 மணிக்கு மேல, அவனோட காமெடி வேற லெவல்ல இருக்கும் என டைமோட சொல்லி கேபி மாட்டிக்கிச்சு. கடைசியா சோம்க்கு கோபம் வரும் அது இங்கேயே யாருக்கும் தெரியாது என்றார்.

பிக்பாஸ்லாம் எம்மாத்திரம்
எல்லா போட்டியாளர்களும் தொப்பியை தலையில் மாட்டி பேசிய நிலையில், பாலாஜி முருகதாஸ், தலையை நல்லா செட் பண்ணியிருக்கேன். கையில குல்லா மாட்டி பேசுறேன் என கமல் முன்னாடியே ரூல்ஸை பிரேக் பண்ணார். அதை வட்டம் போட்டு சொன்ன கமல், அப்புறம் பாலாவின் ரெக்வஸ்ட்டுக்கு அக்சப்ட்டும் பண்ணிட்டார். கமலையே ஏமாத்தியாச்சு பிக் பாஸ்லாம் எம்மாத்திரம் பாலாவுக்கு!

ஷிவானி பற்றிய சீக்ரெட்
பாலாஜி முருகதாஸுக்கு சொல்லி வைத்ததை போலவே ஷிவானியின் போட்டோ வந்தது. ஷிவானி பற்றி சீக்ரெட் சொல்றேன் என்கிற பெயரில், பிக் பாஸ் வீட்டில் ஷிவானி ரொம்ப நல்லா பேசுவா இது யாருக்குமே தெரியாது என்றார். உன் கூட மட்டும் தான் அவ நல்லா பேசுறாங்கிறது ஊருக்கே தெரியுமே என ஹவுஸ்மேட்கள் கலாய்த்தனர். இதெல்லாம் ஒரு ரகசியமா ரொம்ப சோதிக்கிறாய்ங்களே!


Click it and Unblock the Notifications











