நான் சொன்ன பேக்கு, அடிமுட்டாள்ளாம் விட்டுடலாம், சோம்பேறி, டர்ட்டி கேம் எடுத்துக்கலாம்.. பலே பாலா!
சென்னை: குறை சொல்லும் டாஸ்க்கிற்காக காத்துக் கொண்டிருந்த பாலாஜி முருகதாஸ், ஆரியை முதல் நபராக குறை சொல்ல ஆரம்பித்தார்.
மேலும், தனக்கு பிடிக்காத போட்டியாளர்களான கேபி, ரியோ, சோம் பற்றியெல்லாம் பேசிவிட்டு, கடைசியாக ஷிவானி பற்றியும் ரம்யா பற்றியும் குறை சொன்னார்.
ஆரியை பற்றி பேசும் போது மீண்டும் சோம்பேறி, டர்ட்டி கேம், காலி பண்ணி விளையாடுற என்கிற வார்த்தைகளை எடுத்து பாலா முன் வைத்தார்.

சோம்பேறி, டர்ட்டி கேம்
குறை சொல்லும் டாஸ்க்கில் மற்றவர்கள் செய்த செயல்களை முன் வைத்து அனைவரும் பேசிய நிலையில், பாலாஜி முருகதாஸ் ஆரிக்கு எதிராக அவர் பேசிய சில வார்த்தைகளை முன் வைத்து குறை சொன்னார். சோம்பேறி, டர்ட்டி கேம், காலி பண்ணி விளையாடுறன்னு சொல்லி அடுத்தவங்கள காலி பண்ணிடுறாரு என்றார்.

பேக்கு, அடிமுட்டாள் எங்கே?
ஆம்பள பையன் வார்த்தையை விட்டுட்டீங்க பாலா என அவருக்கு எடுத்துக் கொடுக்கும் ஆரி ரசிகர்கள், நீங்க இந்த சீசன் ஆரம்பத்தில் இருந்தே பயன்படுத்திய டுபாக்கூர், அட்ஜெஸ்ட்மென்ட், பப்பட், வேர்க்கடலை சாப்பிடுறவன் மற்றும் சமீபத்தில் ஆரிக்கு எதிராக பயன்படுத்திய பேக்கு, அடிமுட்டாள் போன்ற வார்த்தைகளையும் சேர்த்து சொல்லியிருக்கலாமே, ஆரி பேசும் போது, நீங்க இப்படி பேசுனீங்கன்னு அவர் உங்க மேல குறை சொல்லலையே என்று விளாசி வருகின்றனர்.

அழுத மாதிரி
மேலும், பாலாஜி ஆரம்பிக்கும் போதே ஆரியை இந்த டாஸ்க்கில் காலி செய்ய வேண்டும் என்பதற்காக அழுத மாதிரியே தனது குறைகளை எடுத்து வைத்து பேசினார். இந்த வீட்டில் தான் கெட்டவனாக இருந்தாலும், நல்லவனாக மாறிவிடுவேன், ஆனால், ஆரி நல்லவன் போர்வையில் ஒளிந்து கொண்டிருக்கிறார் என பேசி ஹவுஸ்மேட்கள் மத்தியில் பாலா ரொம்ப நல்லவன்னு பெயர் எடுக்கலாம் என நினைத்தார்.

அடுத்த அட்டாக் கேபி
பாலாவுக்கு ஆரம்பத்தில் இருந்தே கேபி தான் சரியான ஆப்பு வைத்து வருகிறார். அதனால், ஆரிக்கு எதிராக இந்த வீட்டில் கேபியை தான் தனது எதிரியாக பார்க்கிறார். கேபி பேசுவது தான் சரி என நினைத்து சரியாக பேசுவதில்லை என கேபிக்கு எதிராக குறை சொன்னார் பாலா.

கன்ஃபியூசிங் என்டர்டெயினர்
ரியோவின் உதவி தேவைப்படுவதால், அவரை கொஞ்சம் சாஃப்ட் ஹர்ட் தான் செய்தார் பாலா. ரியோவை மட்டுமல்ல, சோம், ரம்யா மற்றும் ஷிவானிக்கும் சின்ன மிஸ்டேக் பெயருக்கு மட்டும் சொல்லி தனது குறை சொல்லும் போர்ஷனை முடித்துக் கொண்டார். ரியோ என்டர்டெயின் பண்ணும்போது நல்லா தெளிவா இருக்காரு, பேசும் போது குழப்பவாதியாக மாறிடுறாரு என பாலா ரியோவுக்கு கன்ஃபியூசிங் என்டர்டெயினர் என புதுப் பெயரை கொடுத்தார்.

ரம்யா பொய் சொல்றாங்க
ரம்யா தனக்கு நல்ல பிரெண்டு, ஆனால், அப்படியெல்லாம் இல்லை என அவர் பொய் சொல்லி நடிப்பது போல தெரிகிறது என கூட்டத்தில் ரம்யாவை வசமாக போட்டுக் கொடுத்து விட்டார் பாலா. எப்படி ஐஸ் வைத்தாலும், ஆரிக்கு அடுத்தபடி பாலாவை வெளியேற்றவே ரியோ, சோம், கேபி மற்றும் ரம்யா நினைப்பது அவருக்கு புரியவில்லை. அவருக்கு 2 பாயின்ட் தான் கிடைத்தது.


Click it and Unblock the Notifications











