twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தம்பின்னு கூப்பிடுங்க பிக்பாஸ்.. கன்ஃபெஷன் ரூமில் கண்ணீர் விட்ட பாலா.. டோட்டலாக மாறிவிட்டாரே!

    |

    சென்னை: படுத்துக் கொண்டே விட்டத்தை பார்த்து கொண்டிருந்த பாலாவை, பலமா யோசிக்கிறீங்க போல, ஃப்ரீயா இருந்தா கன்ஃபெஷன் ரூமுக்கு வாங்க என்று பிக் பாஸ் அழைத்ததும், கன்ஃபெஷன் ரூம் போன பாலா, கண்ணீர் விட்டு அழுதார்.

    தன்னுடைய வாய்ஸே ஹார்டா தான் இருக்கும் என்றும், அது இங்க தப்பா தெரியுது. எப்பவுமே மத்தவங்கள ஜட்ஜ் பண்ற மாதிரியே கேம் ஆடுறது கஷ்டமாக இருக்கு பிக் பாஸ் என புலம்பினார்.

    கடைசியில், என்ன இனிமே தம்பி பாலான்னு தான் கூப்பிடணும் என்கிற அன்பு கோரிக்கையும் வைத்தார்.

    அன்ஃபிட்னு சொல்லி குத்துறாங்க.. கதறி அழுத கேபி.. 'பிஜி’ என புது டைட்டில் கொடுத்த பிக் பாஸ்!அன்ஃபிட்னு சொல்லி குத்துறாங்க.. கதறி அழுத கேபி.. 'பிஜி’ என புது டைட்டில் கொடுத்த பிக் பாஸ்!

    வாய்ஸே அப்படிதான்

    வாய்ஸே அப்படிதான்

    பிக் பாஸ் அழைத்ததும் கன்ஃபெஷன் ரூம் போன பாலாவிடம், இந்த வீட்டில் இருப்பது எபப்டி இருக்குன்னு கேட்க, சட்டென கண் கலங்கிய பாலா, யாரிடமாவது கை நீட்டி பேசினா, கையை இறக்குன்னு சொல்லிடுவாங்களோன்னு பயமா இருக்கு, என் வாய்ஸ் கொஞ்சம் ஹார்டா இருக்கும், வாய்ஸே அப்படிதான். ஆனால், நான் சண்டை போடுற டோன்ல பேசுறன்னு சொல்லிடுறாங்க என்றார்.

    கலங்கிய பாலா

    கலங்கிய பாலா

    ஆஜீத் மற்றும் ரம்யாவை தவிர கன்ஃபெஷன் ரூமிற்கு போன அனைவருமே கண்கலங்கி விட்டனர். பாலாவும் ரொம்பவே கலங்கி, தான் செய்தது எல்லாம் தப்பா, சரியா என்பதே புரியாமல் இருக்கும் நிலையை பிக் பாஸிடம் பகிர்ந்தார். நீங்க உங்க மனசுக்கு புடிச்சத செய்யுங்க பாலா, தப்பு செஞ்சாதான் திருத்திக்க முடியும், நீங்க மேலும் மேலும் வளர்வீங்க என பிக் பாஸ் ஆறுதல் கொடுத்தார்.

    பழைய ஃபார்முக்கு

    பழைய ஃபார்முக்கு

    பிக் பாஸ் சொன்ன ஆறுதல் வார்த்தைகளை கேட்ட பாலாஜி முருகதாஸ், கண்களை துடைத்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தார். மறுபடியும் பழைய ஃபார்முக்கே போயிடுறேன். மத்தவங்கள ஜட்ஜ் பண்ணிட்டு விளையாடுற கேம் புடிக்கல என ஓப்பனாக பேசிய பாலாவை பிக் பாஸ் பாராட்டினார்.

    தம்பின்னு கூப்பிடுங்க

    தம்பின்னு கூப்பிடுங்க

    பிக் பாஸ் வீட்டில் அர்ச்சனா குழந்தைன்னு கூப்பிட்டது தன்னை மட்டம் தட்டுவது போல இருந்தது என நினைத்து சண்டை எல்லாம் போட்ட பாலா, இப்போ டோட்டலா ஆளே மாறி, பிக் பாஸிடம் தன்னை தம்பின்னு கூப்பிடுங்க என்ற கோரிக்கையை வைக்க, பிக் பாஸும் நல்லா விளையாடுங்க தம்பி என உற்சாகப்படுத்தி வெளியே அனுப்பினார்.

    English summary
    Balaji Murugadoss also cried in the Confession room after speaking with Bigg Boss. He also raised a request to Bigg Boss to call him as a brother.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X