உண்மை இப்படி வெளியே வருது.. ரம்யாவும் பாலாவும் இப்படி கலாய்ச்சிக்கிறாங்களே.. என்ன ஆச்சு?
சென்னை: இன்றைய பிக் பாஸ் அன்சீனில் வெளியாகும் காட்சியென தற்போது வெளியாகி உள்ள புரமோவில் ரம்யாவும் பாலாவும் ஒருவரை ஒருவர் கலாய்த்து கழுவி ஊற்றிக் கொள்கின்றனர்.
இதை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள், என்ன இருவரும் இப்படி உண்மையை ஓப்பனா சொல்றாங்களே என கிண்டல் செய்து வருகின்றனர்.
பாலாவும் ரம்யாவும் ரகிட ரகிட பாடலுக்கு ஏன் இப்படி ஆடுகின்றனர் நிகழ்ச்சியில் என்ன ஆச்சு? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

மிஸ்டர் இந்தியா இவர் தானே
தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் வரும் ரகிட ரகிட பாடலை பாலாவும் ரம்யாவும் சேர்ந்து பாடி நடனமாடும் இந்த அன்சீன் புரமோவில் இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி கலாய்த்து வருகின்றனர். மிஸ்டர் இந்தியா இவர் தானே, கமல் சார் நிறைய சொன்னாரு, இவருக்கு கலாய்க்க தெரியல என பாலாஜியை பங்கம் படுத்தி உள்ளார்.

டைட்டில் வின்னர் இவங்க தானே
அதே சமயம் பாலாஜி முருகதாஸும் சும்மா இல்லை இவங்க சேஃப் கேம் ஆடுறாங்க என்பதில் தொடங்கி இவங்களுக்கு கலாய்ச்சா பிடிக்காது, டைட்டில் வின்னர் இவங்க தானே வரைக்கும் ரம்யா பாண்டியனை ஒட்டுமொத்தமாக ட்ரோல் செய்து பாடி ஆடி உள்ளார் பாலாஜி முருகதாஸ்.

அன்சீன் புரமோ
நல்லவேளை இந்த சீனை எல்லாம் அன்சீனிலேயே வைத்து விடுங்கள், ஷோவுக்கு கொண்டு வராதீங்க என வழக்கம் போல நெட்டிசன்கள் அன்சீனை பார்த்து ட்ரோல் செய்து கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர். மேலும், சிலர், எப்படியோ இதுவும் நிகழ்ச்சியில் இடம்பெறும் அப்புறம் எதுக்கு அன்சீன் என வசமாக வச்சு செய்து வருகின்றனர்.

என்ன ஆச்சு
ஏன் இப்படி திடீரென பாலாவும் ரம்யாவும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி கலாய்த்துக் கொண்டு பாடி ஆடுகின்றனர் என்கிற ஆர்வத்தில் இன்றைய நிகழ்ச்சியில் என்ன ஆகியிருக்கும் என பார்க்கும் ஆர்வத்தில் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். பாலா, ரம்யா ஆடுவதை ஆரி, அனிதா, ஆஜீத் உள்ளிட்டோர் பார்த்து சிரிப்பது புரமோவில் இடம்பெற்றுள்ளது.

ஷிவானி எங்கே
வழக்கமாக பாலா ஷிவானி கூடத்தானே ஆடுவாரு, இப்போ என்ன திடீர்னு ரம்யா கூட இப்படி டான்ஸ் ஆடுறாரு, ஷிவானி செல்லம் எங்க போயிட்டாங்க, அவங்களோட ரியாக்ஷனை கூட காட்டலையே என ஷிவானி ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். ரியோவின் மொத்த மதிப்பெண்ணையும் காலி பண்ணிட்டு எப்படி ஆடுறாங்க ரம்யா என்றும் அன்பு கேங் ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











