மீண்டும் முட்டிக்கிச்சு.. புரவோக் ஆகாத பாலா.. இப்படி சண்டைப் போட்டு போய்ட்டாங்களே.. அன்சீன் புரமோ!
சென்னை: பாலாவுக்கும் ஆரிக்கும் தான் இந்த சீசனில் ரொம்பவே முட்டிக் கொள்கிறது.
கயிறு விடாமல் பிடித்து நிற்கும் டாஸ்க்கில் ஷிவானி, ரம்யா கடைசி வரைக்கும் போராடியதை 3வது புரமோவில் காட்டியிருந்தனர்.
இந்நிலையில், ஆரியும், பாலாவும் எப்படி விட்டு சென்றார்கள் என்பதை அன்சீன் புரமோவில் காட்டி உள்ளனர்.

நோண்டிய பாலா
எல்லோரும் கயிறு பிடித்துக் கொண்டிருக்கும் போது, முதல் ஆளாக ஆரி மீது குறை சொல்லி பாலா நோண்டுவதாக அன்சீன் புரமோ காட்டுகிறது. அதை தொடர்ந்து ஆரியும் சும்மா விடவில்லை. பாலாவின் குறைகளை வழக்கம் போல அடுக்க ஆரம்பித்தார். நீயும் தான் ரூல்ஸ் மீறி விளையாடினாய் என்றார்.

புரவோக் ஆகாத பாலா
ஆரி அப்படி சொன்னதும் கடுப்பான பாலா, உடனே தனது கயிற்றை விட்டு அவுட் ஆகி வெளியேறினார். ரம்யா பாண்டியன், ரியோ, ஷிவானி உள்ளிட்டோர் பாலா ஏன் கயிற்றை விட்ட என கேட்டனர். ஷிவானி புரவோக் ஆகாத பாலா என பாலாவுக்கு சப்போர்ட் செய்தார். ஹவுஸ்மேட்கள் மொத்தமும் ஆரிக்கு எதிராக மீண்டும் திரும்பினர்.

ஆரியும் அவுட்டு
பாலா விட்டுப் போனா அடுத்த நொடியே ஆரியும் தனது கயிற்றை விட்டு அவுட்டாகி வெளியேறினார். இந்த இருவரும் இப்படி அடித்துக் கொள்வது தான் மற்ற ஹவுஸ்மேட்கள் ஈஸியாக இறுதிச்சிற்றுக்கு முன்னேற காரணமாக இருக்கிறது. இருவரும் தங்களின் கோபத்தையும், ஈகோவையும் விட்டு விளையாடி இருந்தால், வேற லெவலில் இருந்திருக்கும்.

மற்றவர்கள் எப்படி
ஷிவானியும், ரம்யா பாண்டியனும் இந்த சுற்றில் கடைசி வரைக்கும் தாக்குப்பிடித்து இருப்பதை மூன்றாவது புரமோவிலேயே பார்த்து விட்டோம். அன்சீன் புரமோவில் பாலாவும் ஆரியும் அவுட்டாகி விட்டதையும் பார்த்தாச்சு, மெயின் நிகழ்ச்சியில் ரியோ, கேபி, சோம் எப்படி அவுட்டானர்கள் என்பதையும், இந்த சுற்றை வெற்றிபெற்றது யார் என்பதையும் பார்க்க ரசிகர்கள் ஆர்வம்.


Click it and Unblock the Notifications











