Fire Box office collection: தியேட்டரில் பத்திக்கிச்சு ஃபயர்.. படத்தின் முதல் நாள் வசூல்!
சென்னை: ஜே.எஸ்.கே.சதீஷ், பாலாஜி முருகதாஸ்,சாந்தினி தமிழரசன், ரச்சிதா மகாலட்சுமி ஆகியோர் நடித்த திரைப்படம் தான் ஃபயர். நாகர்கோவிலில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்தில் பாலாஜி முருகதாஸ் வில்லன் ரோலில் நடித்துள்ளார். 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்தின் முதல் வசூல் குறித்து பார்க்கலாம்.
தயாரிப்பாளரான ஜே.எஸ்.கே.சதீஷ் இத்திரைப்படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தில் கதை அடுத்தடுத்த திருப்பங்களுடன் ஆரம்பிக்கிறது. பிசியோதெரபிஸ்டான காசியாக பாலாஜி முருகதாஸ் நடித்துள்ளார். அவரை காணவில்லை என அவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றனர். காசி மாயமானது குறித்து விசாரணை நடத்துகிறார் இன்ஸ்பெக்டர் ஜெ. சதீஷ் குமார் நடித்துள்ளார். அவர் நடத்திய விசாரணையில் அவர் இளம் பெண்களுடன் உல்லாசமாக இருந்து, வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்தது தெரிய வருகிறது.

ஃபயர் படத்தின் கதை: ஆனால், காசிக்கு என்ன ஆனது என்று தெரியாததால், அவனை கண்டுபிடிக்குமாறு அமைச்சர் அளவில் இருந்து அழுத்தம் கொடுக்கப்படுகிறது. பாவப்பட்ட பெண்களை நாசம் செய்யும் காசியை கண்டுபிடிப்பதில் அமைச்சருக்கு ஏன் ஆர்வம்?. காசி எங்கே போனார்? காசிக்கு என்ன ஆனது? காசி உயிரோடு இருக்கிறாரா இல்லை இறந்துவிட்டாரா என அடுத்தடுத்த கேள்விகளுடன் ஃபயர் திரைப்படத்தின் கதை நகர்கிறது. நேற்று தியேட்டரில் வெளியான இத்திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக படம் பார்த்த பெண்கள், இந்த படம் பெண்களுக்கு தேவையான படம். அதுவும் இந்த காலத்தில் பெண்களுக்கு முக்கியமான படம்.
விழிப்புணர்வு படம்: இன்றைய சூழ்நிலையில் ஆண்கள் எப்படி இருக்கிறார்கள் என்று பெண்களுக்கு நன்றாக தெரிந்தாலும், சில நேரம் அதை மறந்துவிடுகிறார்கள். இப்படிப்பட்ட பெண்கள் பார்க்க வேண்டிய படம் இது, அப்போது தான் இப்படியெல்லாம் ஆண்கள் இருக்கிறார்களா என்ற விழிப்புணர்வு வரும். இயக்குநர் சரியான நேரத்தில் இப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். மருத்துவராக நடித்து இருக்கும் பாலாஜி முருகதாஸ் முதல் படத்திலேயே புகுந்து விளையாடி இருக்கிறார். நல்லவன் போல நடித்து, பெண்களை ஏமாற்றி அத்தனை மதன்மத ராசாவாக மாறி அசத்தி உள்ளார். அதே போல ஜே.எஸ்.கே.சதீஷ், ரச்சித்தா, சாந்தினி, சாக்ஷி என அனைவரின் நடிப்பையும் பாராட்டி வருகின்றனர்.
முதல் நாள் வசூல்: ஐந்து கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம், நேற்று தியேட்டரில் வெளியாகி ரூ20 லட்சத்தை வசூலித்துள்ளது. இத்திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் இருந்த தொடர்ந்து நல்ல விமர்சனம் வந்து கொண்டு இருப்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் இருந்து வெளியான அந்த பாடல் காட்சி ஆபாசமாக இருந்ததால், இந்த திரைப்படத்திற்கு பெண்கள் வருவார்களான என கூறப்பட்ட நிலையில், இது பெண்களுக்கான விழிப்புணர்வு படம் என்பதால், இனிவரும் நாட்களில் பெண்களும் படத்தை பார்க்க தியேட்டருக்கு வருவார்கள் என நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications











