Fire public Review: ரொம்ப ஃபயரா இருந்துச்சு.. ஃபயர் படத்தின் ஆடியன்ஸ் விமர்சனம்!

சென்னை: தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான ஜே.எஸ்.கே இயக்குனராக அவதாரம் எடுத்து இயக்கிய படம் ஃபயர். இப்படத்தில் பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், சாந்தினி தமிழரசன் என பலர் நடித்துள்ளனர். திரில்லர் படமான 'ஃபயர்' படத்தின் பொதுமக்கள் விமர்சனத்தை பார்க்கலாம்,

ஃபயர் படம் பார்த்த ரசிகர் ஒருவர், ஃப்யர் திரைப்படம் பெண்களுக்கு ஒரு தேவையான படம் அதுவும் இந்த காலத்தில் பெண்களுக்கு முக்கியமான திரைப்படம் அதை சரியான நேரத்தில் இயக்குனர் தற்போது வெளியிட்டு இருக்கிறார். இயக்குனர், பாலா, இசையமைப்பாளர் என அனைவரும் படத்திற்காக நன்றாக சிரமப்பட்டு இருக்கிறார்கள் என்பது படம் பார்க்கும்போது தெரிகிறது. இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அனைவரும் எவ்வளவு பாதுகாப்பாக இருக்க வேண்டும். எப்படியெல்லாம் ஆண்கள் இருக்கிறார்களா என்று விழிப்புணர்வோடு வேண்டும் என்று படத்தில் சொல்லப்பட்டுள்ளது. இது பாலாவிற்கு முதல் படம் போல தெரியவில்லை நன்றாக நடித்து இருக்கிறார் என்றார்.

public Review Balaji rachitha

கருத்துள்ள படம்: படம் பார்த்த மற்றொரு பெண், படம் நன்றாக இருக்கிறது, இது பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கும் படம். இந்த படத்தில் கொஞ்சம் ஆபாசமான காட்சிகள் வருவதால், குடும்பத்தோடு படத்தை முடியாது. நண்பர்களோடு படத்தை பார்க்கலாம். ஆனால், இந்த படத்தை குடும்பத்தோடு தான் பார்க்க வேண்டும். ஏனென்றால் இந்த படத்தில் நல்ல கருத்தை சொல்லி இருக்கிறார்கள். என்ன தப்பு செய்தாலும் குழந்தைகள் மீதுதான் தப்பு சொல்கிறார்கள். ஒவ்வொரு பெற்றோரும் எப்படி குழந்தைகளை கண்ணும் கருத்துமாக வளர்க்க வேண்டும் என்பதை இந்த படத்தை பார்த்தால் புரியம். படம் எந்த இடத்திலும் போர் அடிக்கவில்லை ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை விறுவிறுப்பாக செல்கிறது என்றார்.

பாலாஜி நடிப்பு சூப்பர்: நல்ல கருத்துள்ள திரைப்படம் இன்றைய சமுதாயத்தில், பெண்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் நடக்கிறதோ, பெண்களுக்கு எந்த மாதிரியான சிரமங்களை சந்திக்கிறார்களோ அதை சொல்லி இயக்குநர் அழுத்தமாக சொல்லி இருக்கிறார். இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும் அவங்களது கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். குறிப்பாக பாலா வில்லன் ரோலில் அசாத்தியமாக நடித்திருக்கிறார் அவருக்கு பாராட்டுக்கள், அது அவரின் முதல் படம் போலவே தெரியவில்லை என்றார்.

ஆபாச படம் இல்லை: ஒரு பையனை காதலித்து அவனை நம்பி பெண்கள் போகிறார்கள், ஆனால், அந்த பையன் அந்த பெண்னை ஏமாற்றி விடுகிறான். இது காதலித்து ஏமாந்து போகும் பெண்களின் உண்மைக் கதை தான் இது. நல்ல ஒரு படத்தை இயக்குனர் அவர்கள் கொடுத்து இருக்கிறார். இந்த படத்தை அனைவரும் பார்க்க வேண்டிய படம். நல்ல ஒரு சோசியல் மெசேஜை இந்த படத்தில் சொல்லி இருக்கிறார்கள். படத்தில் ஆபாசம் இல்லை மெசேஜ் தான் இருக்கிறது. படம் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக அடுத்து என்ன நடக்கும் என்று செல்கிறது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X