twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பழிக்கு பழி வாங்கிய சனம்.. மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட பாலாஜி !

    |

    சென்னை : தாங்கமே உன்னத்தான் தேடி வந்தேன் நானே டாஸ்கில் போட்டியாளர்கள் பலரும் சக்திக்கு ஏற்றாற் போல் தங்கத்தில் சேகரித்து பாதுகாப்பான இடத்தில் பதுக்கி வைத்தனர்.

    போட்டியாளர்களை மூன்று குழுக்களாகப் பிரித்து அவர்களில் அதிக தங்கம் சேர்த்த குழுவிற்கு எந்த வேலையும் செய்ய வேண்டாம் என்ற சிறப்பு சலுகை அளிக்கப்பட்டது.

    சிறப்பு சலுகையின் அடிப்படையில் வெற்றி குழு மற்ற குழுவினரிடம் என்ன வேலைகளை செய்ய வேண்டும் என கட்டளை இடப்பட்டது. அதன் அடிப்படையில் பாலாஜி கடைசியில் சனம் இடம் மன்னிப்பு கேட்டு மண்டியிட்டார்.

    நேற்றைய எபிசொட்டிலும்

    நேற்றைய எபிசொட்டிலும்

    எல்லா விஷயத்திலும் தனக்கு எது சரி என படுகிறதோ அதை மட்டும் ஆரம்பம் முதலே செய்து வரும் பாலாஜி முருகதாஸ் நேற்றைய எபிசொட்டிலும் அதே போல நடந்துகொண்டார்.

    அர்ச்சனாவின் பாசவலை

    அர்ச்சனாவின் பாசவலை

    தூங்கிக்கொண்டிருந்த தன்னை வீட்டு வேலை செய்ய சொன்னதற்காக போட்டியாளர்களில் பலரிடமும் முறைத்துக் கொண்ட பாலாஜி ஒரு வழியாக அர்ச்சனாவின் பாச வலையில் விழுந்து, செல்லப்பிள்ளையாக மாறிவிட்டார்.

    மூன்று குழுக்களாக

    மூன்று குழுக்களாக

    தங்கமே உன்னத்தான் தேடி வந்தேன் நானே டாஸ்க்கில் போட்டியாளர்கள் பலரும் ஆர்வமாக போட்டி போட்டுக் கொண்டு குகைக்குள் தங்கத்தை பொறுக்கி எடுத்து பாதுகாப்பான இடத்தில் பதுக்கி வைத்திருந்த நிலையில், இந்த டாஸ்க்கில் வெற்றி பெற்றால் தனியாக சலுகைகள் கிடைக்கும் என எதிர்பார்த்த போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் மூன்று குழுக்களாக பிரித்து அதிக தங்கம் சேர்த்த குழுவிற்கு எந்த வேலையும் செய்யவேண்டாம் என்ற புதிய சலுகையை பிக் பாஸ் அறிவித்தார்.

    எதுவாயினும் செய்ய வேண்டும்

    எதுவாயினும் செய்ய வேண்டும்

    அதன்படி அதிக தங்கத்தை சேர்த்து சிறப்பு சலுகை பெற்ற குழுவில் அர்ச்சனா, ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், வேல்முருகன் உள்ளிட்ட பலர் இருக்க, இதர குழுக்கள் வெற்றி பெற்ற குழுவினர் சொல்லும் வேலை எதுவாயினும் செய்ய வேண்டும் என்ற கட்டளை இடப்பட்டது.

    ஜோக்கராக மேக்கப்

    ஜோக்கராக மேக்கப்

    விதி முறைகளின்படி என்றைக்குமே இல்லாத அளவிற்கு நேற்றைய எபிசோட் செம ஜாலியாக போக அதில் சனம் மீது இருந்த கோபத்தை தீர்த்துக் கொள்ளும் விதமாக பாலாஜி முருகதாஸ் லிப்ஸ்டிக்கால் சனமிற்க்கு ஜோக்கர் போன்று மேக்கப் செய்தது மட்டுமல்லாமல் தேவையில்லாமல் " இனி பேச மாட்டேன்", "முந்திரிக்கொட்டை மாதிரி முன்னாடி வரமாட்டேன்" என தலா 10 முறை அனைவரின் முன்னிலையிலும் பாலாஜி சொல்ல வைத்தார்.

    சீரியஸா எடுத்துக்காதீங்க

    சீரியஸா எடுத்துக்காதீங்க

    இந்த டாஸ்க்கை ஜாலியாக எடுத்துக் கொண்ட சனம் பின் நினைத்துப் பார்த்துவிட்டு பாலாஜி தன்னை காமெடி பீஸ் ஆக்கிவிட்டார் என்பதை லேட்டாக புரிந்து கோவித்துக் கொண்டு செல்ல, அதற்கு பாலாஜி நான் விளையாட்டாக தான் சொன்னேன் சீரியஸா எடுத்துக்காதீங்க என்று கூறி சமாதானப்படுத்தினார்.

    கையெடுத்து கும்பிட்டார்

    கையெடுத்து கும்பிட்டார்

    இதுவும் பாலாஜியின் ஸ்டேடர்ஜி இருக்குமோ என சுதாரித்துக்கொண்ட சனம் பாலாஜி தன்னை காமெடி பீஸ் போல நடத்தியதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும் என கூற, பாலாஜி கடைசியில் சனம் இடம் மண்டியிட்டு கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டதையடுத்து சனமிற்க்கு உச்சி குளிர்ந்தது. நினைத்ததை முடித்து விட்டாயே சனம் ககபோ

    English summary
    Balaji Murugadoss apologized to Sanam Shetty
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X