இந்த முறையாவது கேப்டன் ஆவாரா பாலா? அர்ச்சனாவை காப்பாற்ற முயற்சிகள் நடக்குமா? ரம்யாவும் கலக்குவாரே!
சென்னை: பெஸ்ட் பர்ஃபாமர்கள் மற்றும் வொர்ஸ்ட் பர்ஃபாமர்களை நேற்றைய நிகழ்ச்சியில் ஹவுஸ்மேட்கள் தேர்வு செய்தனர்.
அதில், பெஸ்ட் பர்ஃபாமர்களாக பாலா மற்றும் அர்ச்சனா தேர்வானார்கள்.
இந்த வாரம் முழுக்க சிறந்த பங்களிப்பு அளித்த ரம்யா பாண்டியனும் கேப்டன் பதவிக்கான போட்டியில் இருக்கிறார்.

பாலா தான் பெஸ்ட்
இந்த வாரம் நடந்த கோழிப்பண்ணை டாஸ்க்கில் 400 ரூபாய்க்கு மேல் சம்பாதித்து சூப்பர் பவரை பெற்றுள்ள பாலாஜி முருகதாஸை சிறந்த போட்டியாளர் என அதிகளவில் ஹவுஸ்மேட்கள் மனதார தேர்வு செய்தனர். ஆரியும் பாலாவுக்குத் தான் ஓட்டுப் போட்டார். கேப்டன் டாஸ்க்கில் போட்டியிட தேர்வாகி உள்ளார் பாலா.

அர்ச்சனா சேவ் ஆவாரா
கோழிப் பண்ணை டாஸ்க் கொடுத்ததே அர்ச்சனாவை சேவ் பண்ண பிக் பாஸ் போட்ட நரித் தந்திரம் தான் என ஏற்கனவே நெட்டிசன்கள் விமர்சித்து வரும் நிலையில், பாலாவை தொடர்ந்து பலரும் அர்ச்சனாவை பெஸ்ட் பர்ஃபாமர் ஆக்கினர். அடுத்த வாரம் கேப்டனாக தேர்வாகி விட்டால் அர்ச்சனாவை அடுத்த வாரமும் வெளியேற்ற முடியாது.

ஹாட்ரிக் அடிப்பாரா ரம்யா
பிக் பாஸ் தமிழ் 4 சீசனின் முதல் வாரத்திலேயே கேப்டனாக தேர்வான ரம்யா பாண்டியன். இந்த வாரமும் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பாலாவிடம் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், இந்த முறையும் பாலா மற்றும் அர்ச்சனாவுடன் போட்டி போட்டு மூன்றாவது முறையாக கேப்டன் பதவியை தட்டிச் செல்வாரா ரம்யா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம். ஆனால், இம்முறை ரம்யா கேப்டனாக வாய்ப்புகள் குறைவு என்றே கணிக்கப்படுகிறது.

நிஷாவுக்கு பதில் அர்ச்சனா
கடந்த வாரம் கேப்டன் டாஸ்க்கில் பாலா, ரம்யாவை அடுத்து நிஷாவை அன்பு கேங் தேர்வு செய்தது. ஆனால், கடைசியில் நிஷா பிக் பாஸ் வீட்டை விட்டே வெளியேற்றப்பட்டார். அதே போல இந்த வாரமும் அன்பு கேங்கால் அர்ச்சனா கேப்டன்சி போட்டிக்கு தேர்வாகி உள்ளார். ஒரு வேளை அர்ச்சனா தோற்று நிஷாவை போலவே இந்த வாரமே அதிரடியாக வெளியே அனுப்பப்படுவாரா? என்கிற ஐயமும் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளன.

கேப்டன் பாலா
ஒவ்வொரு வாரமும் ஷிவானி நாராயணன் உள்ளிட்ட போட்டியாளர்கள் தொடர்ந்து பாலாவுக்கு ஓட்டுப் போட்டு அவரை ஒரு முறையாவது கேப்டன் ஆக்கி பார்க்க வேண்டும் என முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், கேப்டன் போட்டியில் பாலா இதுவரை ஜெயித்ததே கிடையாது. இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், இந்த வாரமாவது பாலா கேப்டன் டாஸ்க்கில் ஜெயித்து, அடுத்த வாரம் பிக் பாஸ் வீட்டின் கேப்டன் ஆவார் என ஏகப்பட்ட ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











