இவ்ளோ கேவலமா யாரும் விளையாட மாட்டாங்க.. ஜெயிலுக்கு போக மாட்டேன்னு அடம்பிடித்த பாலா.. செம சவுக்கடி!
சென்னை: பிக் பாஸ் சொல்லியும் ஜெயிலுக்கு தான் போக மாட்டேன் என பாலா அடம்பிடித்தது ரசிகர்களை ரொம்பவே எரிச்சலடைய செய்துள்ளது.
மணிக்கூண்டு டாஸ்க்கில் சொதப்பலாக ஆடிய பாலா, ரம்யா, சுச்சி ஆகிய மூவரில் இருவரை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என பிக் பாஸ் பணித்தார்.
ஆனால், ஹவுஸ்மேட்கள் தேர்வு செய்து சொல்லியும், பாலா முரண்டு பிடித்தது ரொம்ப ஓவர்.

திருந்தவே இல்லை
மணிக்கூண்டு டாஸ்க்கில் சரியாக விளையாடாத டீமை சேர்ந்த ரம்யா பாண்டியன், சுசித்ரா மற்றும் பாலாஜி முருகதாஸ் ஆகிய மூன்று பேரில் இருவர், கண்ணாடி அறைக்குள் செல்ல வேண்டும் என பிக் பாஸே கார்னர் பண்ணிவிட்டார். அந்த இருவரில் பாலாவின் பெயர் இடம்பெற்ற நிலையில், போக முடியாது, சரியான காரணம் சொல்லுங்கள் என ரொம்பவே அடம் பிடித்தார்.

அசிங்கமா இல்லை
ஏழு கழுதை வயதாகியும் இப்படி குழந்தை மாதிரி அடம் பிடிக்கிறியே பாலா, இதற்கு முன்பு மற்றவர்களை சொல்லும் போதெல்லாம் போனார்களே, உனக்கு என்னப்பா வந்துடுச்சு என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வாய்க்கு வந்தபடி எல்லாம் வகை வகையாக திட்டி வருகின்றனர்.

சனம் ஷெட்டியுடன் சண்டை
மற்ற போட்டியாளர்கள் ஒன்று கூடி, சொல்வதற்கு முன்பே, வா சுச்சி போகலாம் என சொல்லி இருந்தால், பாலாஜி முருகதாஸை எல்லோரும் ஒரு சிறந்த போட்டியாளராக பார்த்திருப்பார்கள். ரம்யா பாண்டியன் போகட்டும், சுச்சி போகட்டும் நான் ஏன் போகணும்னு இருந்த பாலாவிடம் சனம் எடுத்து சொன்னதுக்கு அவரிடம் போய் எகிறி சண்டை போடுகிறார்.

தவிக்கும் ஆஜீத்
தலைவர் ஆனதும் தெரியலை, அதற்குள் வாரம் முடிந்து விட்டது. ஆனால், கடைசியாக போரிங் போட்டியாளரை சிறைக்கு தள்ளுவதற்கு முடியாமல், ஆஜீத், தலையாட்டி பொம்மையாக கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் பாலா முன் கை கட்டி சேவகம் பண்ணுவதெல்லாம் டூமச்சாக தெரிகிறது. இப்போ நீங்க தான் கேப்டன் ஆஜீத்.

காரணம் சொன்னால் தான்
சரியான காரணம் சொன்னால் தான் தன்னால் ஜெயிலுக்குப் போக முடியும் என தனக்கு தானே வக்கீலாகி வாதாட ஆரம்பித்து விட்டார் பாலா. டாஸ்க் செய்யும் போது தூங்கிட்டு நேரத்துக்கு வராதது, ரிவர்ஸ் டாஸ்க் பண்ணாம எஸ்கேப் ஆனது. அழுகினி ஆட்டம் ஆடி மணிக்கூண்டு டாஸ்க்கையே காலி பண்ணது என ஒரு லிஸ்ட் போட்டு பாலாவின் பின்னங் கழுத்திலே அடித்து ஜெயிலுக்கு அனுப்பினர்.


Click it and Unblock the Notifications











