செய்றதையும் செஞ்சிட்டு.. எப்படி பேசுறான் பாரு.. பாலாவை பார்த்து நக்கலடிக்கும் பிக் பாஸ் ரசிகர்கள்!
சென்னை: பிக் பாஸ் நான் வேண்டுமென்றே செய்யல பிக் பாஸ், தப்பா புரிஞ்சுக்கிட்டு செஞ்சிட்டேன் பிக் பாஸ் என பாலா மன்னிப்பு கேட்டதை பிக் பாஸ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.
திமிர் மற்றும் முரட்டுத்தனத்தால் பிக் பாஸ் டைட்டிலை தட்டிச் செல்லலாம் என பாலாஜி முருகதாஸ், தான் இஷ்டத்துக்கு ஒரு கேமை விளையாடி வருகிறார்.
பிக் பாஸ் படிச்சு படிச்சு டாஸ்க் பத்தி சொல்லியும் பாலா கேட்கவில்லை.

பாட்டிக்கு சங்கடம்
பாட்டி அர்ச்சனாவை சந்தோஷப்படுத்த வேண்டும் என்கிற டாஸ்க்கில், பாட்டியை சந்தோஷப்படுத்தாமல் பாலா முழுவதுமாக சங்கடமே படுத்தினார். அதனால் தான் அந்த டாஸ்க்கையே அவசர கதியில் பிக் பாஸ் நிறுத்தினார். மேலும், பாட்டி பாலாவை அழைத்து எவ்வளவோ அறிவுரை சொல்லியும் பாட்டி சரியில்ல என கெட்ட ஆட்டம் போட்டார்.

தூண்டி விட்ட சுசித்ரா
பாலாஜி நீ செய்றது எல்லாம் தான் சரி, மத்தவங்க பேச்சை கேட்டு நீ விளையாடாத என சுசித்ரா பாலாவை நல்லா தூண்டி விட்டுக் கொண்டே இருந்தார். சுச்சியை அப்படி அரவணைத்து பேச ஆரம்பித்ததும், ஷிவானிக்கு கோபம் பொத்துக்கிட்டு வந்து அந்த இடத்தில் இருந்து நகர ஆரம்பித்தார்.

மொத்தமும் போச்சு
பாலாவுக்கு ஹவுஸ்மேட்கள் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அதை கேட்காமல் இருந்தார். அதனால், அடுத்த வாரத்திற்கான லக்சரி பட்ஜெட் மொத்தமும் காலி ஆகி விட்டது. பாலாவின் கிறுக்குத்தனத்தால், 15 பேரின் சோற்றிலும் மண் விழுந்து விட்டது என அர்ச்சனா ரொம்பவே அப்செட் ஆகி விட்டார்.

மன்னிப்பு கேட்ட கேப்டன்
அர்ச்சனா அக்கா மன்னிப்பு கேட்டதை பார்த்த ஆரி, இந்த வார கேப்டன் என்கிற முறையில், தானாகவே எழுந்து யாரும் வேண்டுமென்று செய்யவில்லை. டாஸ்க்கை தங்கம் டாஸ்க் போல நினைத்து புரிந்து கொண்டனர். இனிமேல் இந்த தவறு நடக்காமல் அனைவரும் விளையாடுவோம் என ஆரி மன்னிப்பு கேட்டார்.

பழி போட்ட பாலா
தான் செய்தது தான் தவறு என ஒத்துக் கொள்ளாமல், டாஸ்க் சொல்லும் போது சரியா சொல்லலை, யாருமே ஒழுங்கா விளையாடல என மத்தவங்க மேலயே பழி போட்டுக் கொண்டிருந்த பாலா, தான் செய்தது தவறாக இருந்தால் மன்னித்து விடுங்கள் என்றும் பிக் பாஸ் பேச்சை மீறணும்னு ஏதும் பண்ணல என்றார்.

செய்றதையும் செஞ்சிப்புட்டு
மன்னிப்பு கேட்கும் போது கூட நக்கலாகவும், மத்தவங்க மேல பழி போட்டும் பேசிய பாலாவின் பேச்சை கேட்ட பிக் பாஸ் ரசிகர்கள், செய்றதை எல்லாம் செஞ்சிபுட்டு, எப்படி பேசுறான் பாருங்க என கண்டபடி திட்டித் தீர்த்து வருகின்றனர். முதல்ல பாலாவை எலிமினேட் பண்ணுங்க பிக் பாஸ் என்றும் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











