அவங்க அப்பாவையே அடிச்ச ஆளு பாலா.. என்னையும் அடிச்சிடுவாரோன்னு பயந்தேன்.. வேல்முருகன் பகீர்!

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து பாலாஜி முருகதாஸை வெளியேற்ற வேண்டும் என்கிற குரல்கள் வலுத்து வரும் நிலையில், பாலா பற்றி ஷாக்கிங்கான விஷயத்தை வேல்முருகன் கூறியுள்ளார்.

Recommended Video

பாலாவிற்கு மட்டும் தனி சலுகைகள், கமல் காட்டம் | Bigg boss 4 Tamil

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட பின்னணி பாடகர் வேல்முருகன் கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

பாலாஜி முருகதாஸ் தனது அப்பாவையே அடித்துள்ளார் என்கிற அதிர்ச்சிகரமான விஷயத்தை சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் பகிர்ந்து பரபரப்பை கிளப்பி உள்ளார் வேல்முருகன்.

அம்மாவும் குடிப்பாங்க

அம்மாவும் குடிப்பாங்க

பிக் பாஸ் வீட்டில் தனது சொந்த கதை சோகக் கதையை சொன்ன பாலாஜி முருகதாஸ், தனது அப்பாவும் அம்மாவும் குடிகாரர்கள் என்றும், ஒரு புள்ளைய சரியா வளர்க்க தெரியலைன்னா ஏன் பெத்துக்குறீங்க என்றும் கேட்டு ரசிகர்கள் மத்தியில் சட்டென ஹீரோவானார்.

சாரும் சரக்கு பார்ட்டி தான்

சாரும் சரக்கு பார்ட்டி தான்

பாலாஜி முருகதாஸை பற்றி அலசி ஆராய தொடங்கிய நெட்டிசன்கள், பாலாஜி முருகதாஸின் பீர் குளியல், நடுக்கடலில் படகில் சரக்கு பாட்டிலுடன் ஜல்சா பண்ணிய டிக் டாக் வீடியோக்களை எல்லாம் தேடி எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு சாரும் சரக்கு பார்ட்டி தான் என அவரது முகத்திரையை கிழித்துத் தொங்கவிட்டனர்.

பிரைவேட் பார்ட்டி

பிரைவேட் பார்ட்டி

மேலும், நீச்சல் குளத்தில் இளம் பெண் ஒருவரை பளு தூக்குவது போல தூக்கி இறக்கி உல்லாசமாக இருக்கும் வீடியோவையும் ஷேர் செய்து, பெண்கள் விஷயத்தில் பாலா எந்த அளவுக்கு மன்மதன் என்பதையும் நெட்டிசன்கள் புட்டு புட்டு வைத்தனர். பாவம் ஷிவானி ஏமாறப் போறாங்க என்றும் கருத்துக்களும் குவிந்தன.

சொல்வதெல்லாம் பொய்

சொல்வதெல்லாம் பொய்

மேலும், பாலாஜி முருகதாஸ் முன்னுக்குப் பின் முரணாக பேசுகிறார் என்றும், அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சொல்வதெல்லாம் பொய் என்றும், அவங்க அம்மா பத்தி சொன்னது கூட பொய் என்றும், ஏகப்பட்ட தகவல்கள் பரவ ஆரம்பித்தன. மேலும், தனக்காக யாரும் வரவில்லை என்றும், தன்னை மேள தாளங்களுடன் தனது தாய் வரவேற்றார் என்றும் அவரே கூறியதை கேட்ட ரசிகர்கள் பாலாவை கண்டபடி திட்டத் தொடங்கினர்.

தூங்கும் போது அப்பாவை அடிச்சேன்

தூங்கும் போது அப்பாவை அடிச்சேன்

இந்நிலையில், கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப் பட்ட பாடகர் வேல்முருகன், பாலாஜி முருகதாஸை பற்றி ஷாக்கிங் தகவலை கூறியுள்ளார். அப்பா தன்னை அடித்தார் என்று மட்டுமே நிகழ்ச்சியில் கூறிய பாலாஜி, அதன் பின்னர், தன்னிடம் தனியாக, எங்கப்பா தூங்கும் போது அவரை அடிச்சிருக்கேன் என்றதும் எனக்கு தூக்கி வாரிப் போட்டது என்றார்.

என்னை அடிச்சிடுவாரோன்னு பயந்தேன்

என்னை அடிச்சிடுவாரோன்னு பயந்தேன்

மேலும், பிக் பாஸ் வீட்டை துடைப்பம் கொண்டு கூட்டும் டாஸ்க்கில் தூங்கிக் கொண்டிருந்த பாலா, அர்ச்சனா அக்கா மீது எகிறி வந்ததை பார்த்து பயந்துட்டேன். எங்கே நம்மளை ஒருவேளை அடிச்சிடுவாரோன்னு என வேல்முருகன் பேசியுள்ளது பரபரப்பை கிளப்பி இருக்கிறது. அவரது கேரக்டர் கொஞ்சம் கூட வந்த நாளில் இருந்தே சரியில்லை என்றும் கூறினார்.

எப்படித்தான் வச்சிருக்காங்களோ

எப்படித்தான் வச்சிருக்காங்களோ

இப்படிப்பட்ட மோசமான கேரக்டர் கொண்ட பாலாவை இன்னும் பிக் பாஸ் வீட்டில் எப்படித் தான் வச்சிருக்காங்களோ, இல்லை இது போன்ற ஆட்களைத் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி விரும்புகிறதா? என்றும் தெரியவில்லை என தனது பேட்டியில் ரொம்பவே மனம் நொந்து புலம்பி உள்ளார் வேல்முருகன்.

விரட்டி அடிக்க வேண்டும்

விரட்டி அடிக்க வேண்டும்

பெற்றோர்களை பற்றி பொய் கூறுவது, பெண்களை மதிக்காமல் கெட்ட வார்த்தைகளில் பேசுவது, சனம் ஷெட்டி ‘அட்ஜெஸ்ட்மென்ட்' விவகாரம் என ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கித் தவிக்கும் பாலாவுக்கு விஜய் டிவியும் கமல் சாரும் கருணை காட்டாமல் ரெட் கார்டு கொடுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து விரட்டி அடிக்க வேண்டும் என நெட்டிசன்கள் கொதித்தெழுந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X