Don't Miss!
- News புதுக்கோட்டையிலிருந்து ஷர்மிளா.. அதென்ன வித்தியாசமான "வாசனை"? குழம்பி நின்ற சென்னை சூளைமேடு போலீஸ்
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
யாரையாவது ஹர்ட் பண்ணியிருந்தா சாரி.. ஆனா திரும்பவும் ஹர்ட் பண்ணுவேன்.. பாலா பிறந்தநாள் கொண்டாட்டம்!
சென்னை: இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோ பாலாஜி முருகதாஸ் பிறந்தநாள் கொண்டாட்டமாக வந்துள்ளது.
நேற்றைய மூன்றாவது புரமோவை ஷோவில் இருந்து தூக்கிய நிலையில், இந்த புரமோவாவது நிகழ்ச்சியில் வருமா? என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
பாலாஜி முருகதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று இரவில் இருந்தே சமூக வலைதளத்தில் ஹாஷ்டேக் எல்லாம் உருவாக்கி பிக் பாஸ் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
கை நீளுதே பாலாஜிக்கு.. இது என்ன நியாயம்னு நீங்கதான் சொல்லணும் ஆண்டவரே.. நீதி கேட்கும் நெட்டிசன்ஸ்!
டி.ஆர்.பி கிங்
என்னதான் பயில்வான், டுபாக்கூர், கெட்டவன், தறுதலை, டம்மி பீஸ், சண்டைக் கோழி, பொய் சொல்றான் என பாலாவை பிக் பாஸ் ரசிகர்கள் திட்டினாலும், உண்மையில் பாலாங்கிற ஒரு கேரக்டர் இந்த சீசனில் இல்லை என்றால் நிச்சயம் ஷோ ரொம்பவே போர் அடித்து இருக்கும். ரூல்ஸ் மதிச்சி விளையாடுற இடத்தில ரூல்ஸ மீறுவதும் தனித்துவம் தான்.
ஹேப்பி பர்த்டே பயில்வான்
எல்லாரும் ஆரியாகவும், ரியோவாகவும், சோமாகவும் இருந்து விட்டால், பிக் பாஸ் நிகழ்ச்சியை ரசிகர்கள் ரசிக்க மாட்டார்கள். பாலா போன்ற கதாபாத்திரங்கள் தான் இந்த கேமை சூடாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்த்தி செல்கின்றன. இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் பாலாவுக்கு ரசிகர்கள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் கொண்டாட்டம்
பாலாஜி முருகதாஸின் பிறந்தநாளை ஹவுஸ்மேட்கள் கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடும் காட்சிகளை மூன்றாவது புரமோவில் காண்பித்துள்ளனர். மேலும், உருக்கமாக பேசி, கண்ணீர் சிந்தும் குறும்புக்கார பாலாஜிக்கு குறும்பா பாடலையும் பிக் பாஸ் எடிட்டர் புரமோவில் போட்டுள்ளார்.
வெயிட் லிஃப்டிங் கேக்
வொர்க்கவுட் ஃப்ரீக், மிஸ்டர் இன்டர்நேஷனலான பயில்வான் பாலாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்காக அனுப்பப்பட்ட ஸ்பெஷல் கேக்கில், வெயிட் லிஃப்டிங் டிசைன் கேக் மேல் வடிவமைக்கப்பட்டு செம க்யூட்டாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆஜீத் அந்த கேக்கை எடுத்து வரும் போதே, பாலா ரொம்பவே உருகி அழும் காட்சிகள் ரசிகர்களை ஈர்க்கிறது.
ஷிவானிக்கு கேக் ஊட்டிவிட்ட பாலா
ஷிவானி நாராயணன், அர்ச்சனா மற்றும் ஹவுஸ்மேட்களுக்கு பாலா கேக் ஊட்டி விடும் காட்சிகளும், பாலாவுக்கும் சக ஹவுஸ்மேட்கள் வாழ்த்துக்களையும், அன்பையும் தெரிவிக்கும் அழகான ஒரு காட்சியாக இந்த மூன்றாவது புரமோ வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
திரும்ப திரும்ப ஹர்ட் பண்ணுவேன்
யாரையாவது ஹர்ட் பண்ணியிருந்தா சாரி.. ஆனா திரும்ப திரும்ப ஹர்ட் பண்ணுவேன்.. ஏன்னா கேம் அந்த மாதிரி என தனது ஸ்டைலில் பாலா பேசுவதும் சூப்பர் தான். சண்டை போட்டு அடிச்சிக்க வைக்கத் தானே போட்டியாளர்களுக்கு உள்ளேயே நாமினேஷன் பண்றாங்க. நல்லா கேம் ஆடி மக்களே நாமினேட் பண்ணி வெளியே அனுப்பு விளையாட்டு பிக் பாஸ் இல்லையே!
-
நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?