Just In
- 13 min ago
கதர் ஆடையை கையில் எடுத்த கமல்.. புதிய ஃபேஷன் பிராண்ட் ‘KH’ .. போட்டியாளர்களுக்கு கதர் துணி பரிசு!
- 24 min ago
கமலையே திக்குமுக்காட வைத்த ஷெரின்.. மனசே இல்லாமல் வெளியே வந்த ரியோ.. பங்கம் செய்த பிக்பாஸ்!
- 1 hr ago
என்னா ஆக்ரோஷம்.. கவிதை சொன்ன கமல்.. சோம் தட்ட.. அண்ணாத்த ஆடுறார் பாட்டு பாடியும் அசத்தல்!
- 2 hrs ago
வாவ்.. ஒவ்வொருத்தருக்கும் ஒரு விருது.. செம ஆப்ட்.. யாருக்கு என்னென்ன விருதுன்னு பாருங்க!
Don't Miss!
- News
தமிழகத்தில் வீடு இல்லாத குடும்பமே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்... முதலமைச்சர் புதிய வாக்குறுதி..!
- Finance
48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. !
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Sports
வலிமையான அணிகள் மோதும் 62வது போட்டி... பரபர அனுபவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இப்படி ஒரு அண்ணன் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்.. பாலாவை நல்லா மோட்டிவேட் செஞ்ச ரமேஷ்!
சென்னை: ஷிவானி நாராயணனின் அம்மா செய்தது சரியா? தவறா? என சமூக வலைதளங்களில் விவாதங்கள் வெடித்துள்ளன
அவரை தொடர்ந்து, சூப்பர் கூலாக பாலாவின் அண்ணன் ரமேஷ் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து தனது தம்பியை சந்தோஷமாக உற்சாகப்படுத்தி விட்டு சென்றுள்ளார்.
இப்படியொரு அண்ணன் கிடைக்க நிச்சயமாகவே பாலா கொடுத்து வச்சிருக்கணும் என பாலாவின் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஷிவானி அம்மா
பிக் பாஸ் வீட்டிற்குள் பத்ர காளியாகவே மாறி ஒரு காட்டு காட்டி போயிருக்கிறார் ஷிவானியின் அம்மா. பெத்த பொண்ண இப்படியா ஒரு பப்ளிக்கான ஷோவில் அசிங்கப்படுத்துவாங்க என்று அவரை திட்டியும், சரியான கோபம் தான் என்று பாராட்டியும் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

பாலாவின் அண்ணன்
ஷிவானியின் அம்மாவை தொடர்ந்து பாலாவின் அண்ணன் ரமேஷ் அவரை பார்க்க பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார். ஷிவானியின் அம்மா திட்டி விட்டு சென்ற போது அப்படியொரு சோகத்தில் இருந்து அழுத பாலா அப்படியே அண்ணன் வந்ததும் தனது கவலைகளை மறந்து அவருடன் ஜாலியாக பேசியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

தம்பியை விட்டுக் கொடுக்கல
எந்த இடத்திலும் தனது தம்பி செய்தது தவறு என்றும், ஏன் அப்பா, அம்மா பத்திலாம் பேசின என்றும் ஒரு வார்த்தை கூட அதட்டி கேட்கவில்லை. நல்லா விளையாடுற, தொடர்ந்து உன் பழைய கேமை விளையாடு, இன்னும் சில வாரங்கள் தான் உள்ளன என நல்லாவே மோடிவேட் பண்ண ரமேஷ், எந்த இடத்திலும் தனது தம்பியை விட்டுக் கொடுக்கல.

காதல் பற்றி
ஷிவானியுடன் பழகுவது குறித்து லேசா பேச்சை ஆரம்பித்ததும், உனக்குத் தான் என்னை பத்தி தெரியுமே என பாலா அண்ணனை மடக்க, ஆம் நல்லா தெரியும், உனக்குத் தான் அதில் எல்லாம் ஆர்வம் இல்லையே, நீ எப்பவும் மற்றவர்களுடன் பழகுவது போல பழகி உன்னுடைய கேமை விட்டு விடாமல் விளையாடு என்றார்.

கட்டிப்பிடிக்காமல் கண்ணியமாக
பிக் பாஸ் வீட்டிற்குள் வர சான்ஸ் கிடைத்தது போகிற போக்கில் பெண் போட்டியாளர்களை கட்டிப்பிடித்து விட்டு செல்லலாம் என நினைக்காமல், மிகவும் கண்ணியமாக ஆண் போட்டியாளர்களை மட்டுமே ஹக் பண்ணி விட்டு பெண் போட்டியாளர்களுக்கு டாட்டா காட்டிவிட்டு, செம ஃபன்னாக அந்த வீட்டையே மாற்றி விட்டு ரமேஷ் கிளம்பினார்.

ஷிவானியுடன் பேசவில்லை
ஷிவானியிம் அம்மா கடைசி வரை பாலாவிடம் பேசாததை போலவே பாலாவின் அண்ணனும் ஷிவானியிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது தான் ஏன் என்றே புரியவில்லை. மற்ற ஹவுஸ்மேட்களிடம் நன்றாகவே சிரித்து பேசிவிட்டு, பாலா கலாய்த்ததையும் ரசித்து ஏற்றுக் கொண்டு செம ஸ்போர்ட்டிவாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.