சனம் ஷெட்டிக்கு கொக்கி போட்ட பாலாஜி முருகதாஸ்.. மாட்டிக்கொண்ட ரேகா!

சென்னை : கடந்த சீசன்களை போல இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் முதல் போட்டியாளர் யார் என்பதை பற்றிய பரபரப்பு பலரிடமும் இல்லை.

Recommended Video

Balaji Vs Sanam • நீ என்னை Use பண்ற •Bigg Boss 4 Tamil

போட்டியாளர்கள் பலரும் ரியோ மற்றும் ஆரியை குறிவைத்து அவர்கள் தங்களது உண்மையான முகமூடியை இன்னும் கழட்டவில்லை என கூறியது அவர்களை கடுப்பேற்றி இருந்தது.

குறிப்பாக ரியோ இதில் ரொம்பவே அப்செட் ஆன நிலையில், சனம் ஷெட்டிக்கு பாலாஜி முருகதாஸ் போட்ட கொக்கி இந்த வாரம் நிறைவேறாமல் போய்விட்டது.

கொண்டாட்டமாக இருந்தது

கொண்டாட்டமாக இருந்தது

வழக்கமாகவே பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களிடம் சண்டை சச்சரவுகள் வருவது இயல்பே, ஆனால் தொடங்கிய முதல் நாளை சிலருக்கு முட்டிக் கொள்ள பிக் பாஸ் ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டமாக இருந்தது.

சனம் ஷெட்டி

சனம் ஷெட்டி

அனிதா சம்பத், சுரேஷ் சக்கரவர்த்தியை அடுத்து தீவிரமாக சண்டையிட்டு கொள்வது சனம் ஷெட்டி மற்றும் பாலாஜி முருகதாஸ் இடையே அடிக்கடி முட்டிக் கொண்டது. ஒரு கட்டத்தில் என்னிடம் தயவு செய்து பேச முயற்சிக்க வேண்டாம் என பாலாஜி நேரடியாக கூறிவிட்டார்.

ரணகளம் ஆக்கியது

ரணகளம் ஆக்கியது

இருவரும் ஏற்கனவே மாடலிங் துறையில் ஒன்றாக பணியாற்றினார்கள் என்ற போதும் தொழில் ரீதியாக பேசும்போது இவர்கள் இருவருக்கும் அவ்வப்போது முட்டிக்கொண்டு பிக் பாஸ் ஹவுஸை ரணகளம் ஆக்கியது.

எண்டு கார்டு போடாமல்

எண்டு கார்டு போடாமல்

இந்த பஞ்சாயத்து கமல்ஹாசன் வரை செல்ல ஒருவழியாக பிரச்சனை ஓய்ந்தது என நினைத்த ரசிகர்களுக்கு எண்டு கார்டு போடாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறார் பாலாஜி முருகதாஸ்.

அது பலிக்காமல் போக

அது பலிக்காமல் போக

இந்நிலையில் முதல் போட்டியாளராக சனம் ஷெட்டியை வெளியேற்ற வேண்டும் என கொக்கி போட்ட பாலாஜி முருகதாஸுக்கு அது பலிக்காமல் போக இப்பொழுது ரேகா வெளியேற்றப்பட்டுள்ளார்.

கண் கலங்கி நின்றனர்

கண் கலங்கி நின்றனர்

பிக் பாஸ் போட்டியாளர்கள் எதிர்பார்த்தார்களோ இல்லையோ, ரசிகர்கள் பெரிதும் கணித்த போட்டியாளர் ரேகா. ஆக ரசிகர்களின் கணிப்புப்படி ரேகா முதல் வாரத்திலேயே வெளியேற்றப்பட்ட நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்து வெளியேறும்போது ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் அவரைப் பார்த்து கண் கலங்கி நின்றனர்.

உண்டியலை பரிசாக

உண்டியலை பரிசாக

எப்பொழுதும் தானுண்டு தன் வேலையுண்டு என எந்த ஒரு பிரச்சினைக்கும் போகாமல் கவர்ச்சி உடைகளில் குத்தாட்டம் போட்டு அனைவரையும் மகிழ வைத்த ஷிவானி ரேகாவின் பிரிவை பார்த்து கதறி அழுதார். இந்நிலையில் ரேகா ஷிவானிக்கு அவர் வைத்திருந்த இருந்த உண்டியல் காசையும் பரிசாக கொடுத்துள்ளார்.

சனம் ஷெட்டி வெளியேற்றப்படுவார்

சனம் ஷெட்டி வெளியேற்றப்படுவார்

ரேகா வெளியேறுவதை நினைத்துப் போட்டியாளர்கள் பலரும் கண்களில் நீர் வழிய பிரியா விடை கொடுத்த நிலையில் பாலாஜி முருகதாஸ் மட்டும் ஜஸ்ட் மிஸ் ஆயிடுச்சு என சனம் ஷெட்டி இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என தான் போட்ட கணக்கு மிஸ் ஆனதை நினைத்து குமுறிக் கொண்டிருந்தது அவரது கண்களில் தெளிவாக தெரிந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X