என்னது பாலாஜி முருகதாஸ் வைல்டு கார்டு என்ட்ரியா? அவரே போட்ட ட்வீட்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் ரன்னர் அப் பாலாஜி முருகதாஸ் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரப் போகிறாரா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதற்கு காரணம் இது தொடர்பாக அவரே பதிவிட்டுள்ள அந்த ட்வீட் தான்.

போன சீசனில் அவுட் ஆஃப் பாக்ஸ் திங்க் செய்து மிகவும் சுவாரஸ்யமாக கொண்டு சென்றவர் பாலாஜி முருகதாஸ் தான். இந்த சீசனில் அவர் வைல்டு கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்தால் ஆட்டம் வேற லெவலில் இருக்கும்.

ரன்னர் அப்

ரன்னர் அப்

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் போட்டியாளர் பாலாஜி முருகதாஸ் கடந்த சீசனில் கடைசி வரை சிறப்பாக விளையாடி, சண்டை போட்டு, ரசிகர்கள் மனங்களை வென்று ரன்னர் அப் ஆனார். சமூக வலைதளங்களில் பாலாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இன்றளவும் உள்ளனர். தொடர்ந்து இந்த சீசனையும் பாலாஜி முருகதாஸ் பார்த்து வருகிறார்.

நல்லா இருக்கே

நல்லா இருக்கே

கடந்த சீசனில் கலந்து கொண்ட பல போட்டியாளர்கள் இந்த சீசன் குறித்த ட்வீட்களையும் கமெண்ட்டுகளையும் அதிகளவில் போடாத நிலையில், தொடர்ந்து பாலாஜி முருகதாஸ் நிகழ்ச்சி குறித்து ட்வீட் செய்து வருவது பிக் பாஸ் ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது.

வைல்டு கார்டு யாரு

வைல்டு கார்டு யாரு

கடந்த சீசனில் தீபாவளிக்கு முன்பாகவே வைல்டு கார்டு என்ட்ரி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், இந்த சீசனில் இன்னமும் அப்படி யாருமே வரவில்லையே? என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. வைல்டு கார்டு என்ட்ரியாக வரப் போவது யார் என்பது தொடர்பான சில வதந்திகளும் வலைதளங்களில் வெளியாகின. ஆனால், இதுவரை யாரும் அதிகாரப்பூர்வமாக உள்ளே நுழையவில்லை

ரீ என்ட்ரி

ரீ என்ட்ரி

இந்நிலையில், பாலாஜி முருகதாஸ் Re entry என டெவில் எமோஜி சிம்பளை போட்டு தற்போது பதிவிட்டுள்ள ட்வீட் பிக் பாஸ் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. பக்கா பிக் பாஸ் மெட்டிரீயலான பாலாஜி முருகதாஸ் இந்த சீசனில் மீண்டும் வீட்டுக்குள் நுழைந்தால் வேற லெவலில் இந்த சீசன் களைகட்டும் எனவும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

வாயில் பட்டாசு

வாயில் பட்டாசு

தீபாவளியை முன்னிட்டு வாயில் மத்தாப்பையும் கையில் சரவெடியையும் வைத்துக் கொண்டு போஸ் கொடுத்த புகைப்படத்தை பாலாஜி முருகதாஸ் ஷேர் செய்ய அதனை பார்த்த ரசிகர்கள் பார்த்து வெடிச்சிட போகுது பாஸ் கேர்ஃபுல்லாக வெடியுங்க என்றும் செம மாஸா இருக்கு பாலா என்றும் கமெண்டுகளை குவித்து வருகின்றனர்.

படம் பண்ணலையா

படம் பண்ணலையா

லிப்ரா தயாரிப்பாளர் ரவீந்திரன் தயாரிப்பில் புதிய படம் ஒன்றி பாலாஜி முருகதாஸ் நடிக்கப் போவதாக சமீபத்தில் அறிவித்து இருந்த நிலையில், இந்த ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் படம் பண்ணலையா பாலா? மறுபடியும் ஏன் பிக் பாஸ்? அதான் ரன்னர் அப் ஆகிட்டீங்களே என கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.

சும்மா சொன்னாரா

சும்மா சொன்னாரா

உண்மையாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜி முருகதாஸ் ரீ என்ட்ரி கொடுக்கப் போகிறாரா அல்லது சும்மா ரசிகர்களை கலாய்க்க அப்படியொரு ட்வீட் போட்டு இருக்கிறாரா? என்பது தெரியாமல் பிக் பாஸ் ரசிகர்கள் மற்றும் பாலாவின் ஆர்மியினர் புலம்பித் தவிக்க தனது ட்வீட்டை சைலன்ட்டாக டெலிட் செய்து விட்டார் பாலாஜி முருகதாஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X