என் தரப்பு நியாயத்தையும் கேளுங்க கமல்.. பச்சை பிள்ளையாய் மாறிய பயில்வான்.. பார்க்கவே பாவமா இருக்கு!

சென்னை: ஆரி, சனம் ஷெட்டி என தொடர்ந்து பாலாஜி முருகதாஸை டார்கெட் செய்ததும், சனிக்கிழமை எபிசோடில் பாலாஜியை கமல் வறுத்தெடுத்ததும் அவரை ரொம்பவே அப்செட் ஆக்கி உள்ளது.

எல்லோரும் என்ன தான் கார்னர் பண்றாங்க என சம்யுக்தாவிடம் சொன்னது போலவே, கமலிடம் நேற்று தனது முறையீடுகளையும் பச்சை குழந்தை மாதிரி முன் வைத்தார் பாலாஜி முருகதாஸ்.

அவருக்கு ரெட் கார்டு கொடுக்காமல் ஏமாற்றி விட்டார்களே என கோபத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு இந்த சீன் ரொம்பவே கடுப்பேற்றியது.

கோபத்தை ஆயுதமாக்கி

கோபத்தை ஆயுதமாக்கி

பாலாஜி முருகதாஸ் தான் சிறு வயது முதலே எப்படி வளர்ந்தேன் என்றும், தன்னை பராமரித்து பார்த்துக் கொள்ள ஆள் இல்லை என்றும் ஏற்கனவே அழுது புலம்பினார். எந்த ஒரு மனிதனும் 100 சதவீதம் கெட்டவனும் கிடையாது, 100 சதவீதம் நல்லவனும் கிடையாது. பாலாஜி தனது கோபத்தை ஆயுதமாக்கி இந்த கேமை விளையாடி வருகிறார்.

பாலாவின் குரூப்

பாலாவின் குரூப்

பிக் பாஸ் வீட்டில் அர்ச்சனா அக்காவுடன் சண்டை போட்டு வந்த பாலாஜி, நாமு ஒரு சின்னதா ஒரு குரூப்பை உருவாக்கி சில பேர்களை பப்பட்டாக வைத்துக் கொண்டால், தான் நிகழ்ச்சியில் கடைசி வரை நீடிக்க முடியும் என்கிற கேமை புரிந்து கொண்டு சம்யுக்தா, ஷிவானி, கேபி, ஆஜீத், சுசித்ரா உள்ளிட்டோர்களை சேர்த்துக் கொண்டு ஒரு புதிய குரூப்பை உருவாக்கி வைத்துள்ளார்.

நீ வேணா சண்டைக்கு வாடா

நீ வேணா சண்டைக்கு வாடா

இதை அறிந்து கொண்ட நடிகர் ஆரி, என்ன அந்த டீம்லயும் சேர்த்துக்கல, இந்த டீம்லயும் சேர்த்துக்கல என இரு குரூப்புக்கும் நடுவே தனி மரமாக இருந்து கோபத்திற்கு ஆளானார். பாலாஜியின் நரி தந்திரத்தை அறிந்து கொண்ட அவர், அவருடன் சண்டை போட, இருவருக்கும் இடையே பயங்கர வாய் சண்டை நடந்து வருகிறது. நேற்றைய நிகழ்ச்சியை பார்த்தால், கை கலப்பு ஏற்படுமோ? என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அல்வா தான்.

வறுத்தெடுத்த கமல்

வறுத்தெடுத்த கமல்

தறுதலை விவகாரம், சனம் ஷெட்டியுடன் சண்டை, ஆரியுடன் சண்டை என எல்லாத்துக்கும் சேர்த்து பாலாஜியின் சிரிப்பை கமல் சனிக்கிழமை நிகழ்ச்சியில் ஒட்டு மொத்தமாக நிறுத்தினார். மேலும், சண்டைக்கு போறதா இருந்தா, எம்.எம்.ஏ ஃபைட்டர் சோமசேகருடன் சண்டை போடுங்க என்றும் கொளுத்திப் போட்டுள்ளார்.

ப்ளீஸ் சார்

ப்ளீஸ் சார்

இதனால் ரொம்பவே கடுப்பாக இருந்த பாலாஜி கோபத்தின் உச்சிக்கே சென்று, பிக் பாஸ் வீட்டு செட்டிங் கட்டிலை தள்ளி விட்டு உடைத்தார். பின்னர், கமலிடம் சார் ப்ளீஸ் சார், என் தரப்பு நியாயத்தையும் கேளுங்க சார், என்னை ஃபிராடு, ஏமாத்துக்காரன், பொய் சொல்றான் என பிராண்ட் பண்றாங்க சார் என பச்சைக் குழந்தை மாதிரி புகார்களை அடுக்கினார்.

Recommended Video

பாலாவிற்கு மட்டும் தனி சலுகைகள், கமல் காட்டம் | Bigg boss 4 Tamil
பாலாவை அரவணைத்த ஆரி

பாலாவை அரவணைத்த ஆரி

பாலாஜியுடன் சண்டை போட்டு ஜெயிக்க முடியாது என்று தெரிந்து கொண்ட அர்ச்சனா அக்கா, அவரை மகனாக தத்தெடுத்தார். ஆனாலும், அவங்கள பாலாஜி முழுசா ஏத்துக்கல, அதே போலத்தான் இப்போ பாலாவை தம்பியாக ஆரி அரவணைத்துள்ளார். ஆரி பாலாஜியை தம்பியா பார்க்குறேன் என்றதும் பாலாஜிக்கே சிரிப்பு வந்துருக்கும். பாலாஜியை திருத்தணும் வேற அடம்பிடிக்கிறார். நீங்க யாரு என்ன திருத்த என்று தான் பதிலுக்கு அவர் சண்டை போடுவார். அழுது தான் கேப்டன் ஆனீங்க என அசிங்கப்படுத்தியும் ஆரி, பாலா அணியில் இணைய ஏதாவது காரணம் இருக்கும் என்று தான் தோன்றுகிறது.. பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X