Don't Miss!
- News
சகோதரி மறைவால் துடிதுடித்துப் போன துர்கா ஸ்டாலின்! ஆறுதல் சொல்லி தேற்றிய குடும்பத்தினர்!
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அவரு பாலா இல்லை.. ஆம்பள மீரா மிதுன்.. அசீமின் அப்படியொரு ரியாக்ஷன்.. வச்சு செய்யும் ரசிகர்கள்!
சென்னை: அசீம் சீசன் 4 பாலாஜி முருகதாஸ் போல நடந்து கொள்கிறார் என ஷிவின் சொன்னதும் அசீம் கொடுத்த படு மோசமான ரியாக்ஷன் பாலா ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது.
இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சி அப்படியே கடந்த பிக் பாஸ் சீசன் 4 போலவே நகர்வதாக புகார்கள் கிளம்பி உள்ளன.
ஆரி அர்ஜுனன் போல விக்ரமனும், பாலா போல அசீமும் ரம்யா பாண்டியன் போல ஷிவினும், ரியோ போல அமுதவாணனும் உள்ளதாக ஏகப்பட்ட ரசிகர்கள் இந்த சீசனையே ட்ரோல் செய்து வரும் நிலையில், பிக் பாஸும் அதை ஒரு முறை ஷிவினை வைத்தே கன்ஃபார்ம் செய்துள்ளார்.
அசீம் திருந்தவே இல்லை... அதிரடியாக வழங்கப்பட்ட ரெட் கார்டு... பிக் பாஸ் வீட்டில் ட்விஸ்ட்

அதே ஸ்க்ரிப்ட்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்கள் தான் மாறுகின்றனரே தவிர ஸ்க்ரிப்ட்டை அதன் இயக்குநர் கொஞ்சம் கூட சேஞ்ச் செய்யாமல் அப்படியே காப்பி பேஸ்ட் செய்து ஓட்டி வருகின்றார் என கலாய்த்து வருகின்றனர். கொடுக்கப்படும் டாஸ்க்குகள் கூட ஒவ்வொரு சீசனுக்கும் கொஞ்சம் கூட புதிதாக இல்லாமல் அதே ஸ்கூல் டாஸ்க், ராஜா ராணி டாஸ்க், டெவில் டாஸ்க், இந்த வாரம் அந்த மனித கடிகாரம் டாஸ்க் என பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

பாலா மாதிரி
இந்நிலையில், நேற்றைய சிகப்பு, மஞ்சள் மற்றும் பச்சை கார்டு விளையாட்டில் இந்த ஒரு போட்டியாளர் முந்தைய சீசன்களில் இருந்த ஒரு போட்டியாளர் மாதிரி விளையாடுறாரு என்கிற கார்டை ஷிவின் அசீமுக்கு வழங்கினார். யார் மாதிரி என பிக் பாஸ் கேட்டதும் பாலா என சீசன் 4 மற்றும் பிக் பாஸ் அல்டிமேட் டைட்டில் வின்னர் மாதிரி விளையாடுறாரு என ஷிவின் சொன்னார்.

பாலாவா
அதை கேட்ட அசீம் "பாலாவா" என ரொம்பவே கேவலமாக ஒரு ரியாக்ஷன் கொடுத்தது பாலாஜி முருகதாஸ் ரசிகர்களை ரொம்பவே கொதிப்பில் ஆழ்த்தி உள்ளது. பாலாஜி முருகதாஸ் மாதிரி எல்லாம் பிசிக்கலாகவோ, அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்க் பண்ணியோ ஒரு நாள் கூட அசீம் கேம் ஆடவில்லை. அவர் விளையாடுவது எல்லாமே வெறுப்பு அரசியல் கேம் தான் என திட்டித் தீர்த்து வருகின்றனர்.

ஆம்பள மீரா மிதுன்
தற்புகழ்ச்சி செய்து கொண்டு தானும் கேம் ஆடாமல் மற்றவர்களையும் கேம் ஆட விடாமல் ஒட்டுமொத்த ஷோவையே ஓட்டுகிறேன் என்கிற பெயரில் டிஆர்பியையே காலி செய்து வருகிறார் அசீம் என இவர் பாலா எல்லாம் கிடையாது, ஆம்பள மீரா மிதுன் என பாலா ஆர்மியினர் கிழித்துத் தொங்க விட்டு வருகின்றனர்.