அடக்கடவுளே.. பிக் பாஸ் பிரபலங்களுக்கு தொடரும் சோகம்.. பாலாஜி முருகதாஸ் அப்பாவும் இறந்துட்டாரு

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களான லாஸ்லியா, அனிதா சம்பத்தை தொடர்ந்து பாலாஜி முருகதாஸும் தனது அப்பாவை இழந்து தவித்து வருகிறார்.

பாலாஜி முருகதாஸின் அண்ணன் ரமேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்பாவின் இறப்பு குறித்து பதிவிட்டுள்ளார்.

இதுவும் கடந்து போகும் என பாலாஜி முருகதாஸ் ட்வீட் செய்ய அவரது ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் அளித்து வருகின்றனர்.

இரண்டாம் இடம்

இரண்டாம் இடம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏகப்பட்ட விமர்சனங்கள், விவாதங்கள், ரெட் கார்டு பிரச்சனைகள் எழுந்தபோதும், இறுதியில் ஆரிக்கு அடுத்த இடத்தில் 6 கோடிக்கும் அதிகமான ஓட்டுக்களை அள்ளி இரண்டாம் இடத்தை பிடித்தார் பாலாஜி முருகதாஸ். பிக் பாஸ் வெற்றியை கொண்டாட கோவாவில் ஜாலியாக டூர் சுற்றலாம் என நினைத்த அவருக்கு தற்போது மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.

அப்பா இறந்துட்டாரு

அப்பா இறந்துட்டாரு

பாலாஜி முருகதாஸின் அப்பா உடல்நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்துள்ளதாக பாலாவின் அண்ணன் ரமேஷ் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து பாலாஜி முருகதாஸுக்கு அவரது ரசிகர்கள் சக போட்டியாளர்கள் என பலரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். பாலாவின் அப்பா சமையல் கலைஞராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரன்னர் அப்பாகி வெளியே வந்த பாலாஜி முருகதாஸ் அந்த வெற்றியை முழுமையாக கொண்டாட முடியாமல் ஏகப்பட்ட சிக்கல்கள், புகார்கள் என பல விவகாரங்கள் அவரை சுற்றி வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது, தந்தையின் மரணம் மேலும் அவரை துயரில் ஆழ்த்தியுள்ளது. தனது ட்விட்டர் பக்கத்தில் This too shall pass என பதிவிட்டுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு பாலாவின் அம்மாவும் காலமானதாக தகவல்கள் வெளியாகின.

அப்பா அடித்தார்

அப்பா அடித்தார்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் பேசிய பாலாஜி முருகதாஸ் தனது அப்பா மற்றும் அம்மா குடிக்கு அடிமையானவர்கள் என்றும், தன்னை சரியாக வளர்க்கவில்லை என்றும், சரியா பிள்ளையை வளர்க்க தெரியாதவர்கள் ஏன் பிள்ளை பெத்துக்குறாங்க எனவும் கேள்வி எழுப்பினார். மேலும், தூங்கும் போது காஸ் ட்யூப்பால் தன்னை தனது அப்பா அடித்தார் என்றும் கூறியிருந்தார்.

தொடரும் சோகம்

தொடரும் சோகம்

கடந்த ஆண்டு இறுதியில் பிக் பாஸ் பிரபலமான நடிகை லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் கனடாவில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நிலையில் மாரடைப்பு காரணமாக காலமானார். சமீபத்தில் பிக் பாஸ் வீட்டிலிருந்து எவிக்ட் ஆன நிலையில் அனிதா சம்பத்தின் அப்பாவும் காலமானார். இந்நிலையில், அடுத்த சோகமாக பாலாவின் அப்பாவும் காலமாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரசிகர்கள் இரங்கல்

ரசிகர்கள் இரங்கல்

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் ஆரிக்கு அடுத்தபடியாக அதிகமான ரசிகர்கள் பாலாஜி முருகதாஸுக்குத் தான். பாலாவின் அப்பா உயிரிழந்த செய்தியை அறிந்ததும், ஏகப்பட்ட ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறியும், இரங்கல் தெரிவித்தும் அவரது ட்வீட்டுக்கு கீழே பதிவிட்டு வருகின்றனர். சக போட்டியாளர்களும் பாலாவுக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X