அடுத்த பார்ட்டி ஆரம்பம் போல.. ஷிவானிக்கு இன்னாம்மா கேக் ஊட்டி விடுறாரு பாலா.. வைரலாகும் போட்டோ!

சென்னை: ஷிவானி நாராயணன் இன்று தனது 20வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

Recommended Video

அடுத்து சினிமா கதாநாயகி | BIGG BOSS SHIVANI EXCLUSIVE INTERVIEW | FILMIBEAT TAMIL

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் 19 வயதே ஆன இளம் போட்டியாளராக கலந்து கொண்டார் நடிகை ஷிவானி நாராயணன்.

ஷிவானி நாராயணன் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் வாழ்த்தி வரும் நிலையில், பாலாஜி முருகதாஸ் ஷிவானிக்கு கேக் ஊட்டிவிடும் போட்டோ ஒன்றும் வைரலாகி வருகிறது.

20 வயசாகிடுச்சு

20 வயசாகிடுச்சு

2001ம் ஆண்டு மே 5ம் தேதி பிறந்த நடிகை ஷிவானி நாராயணன் இன்று தனது 20வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். 16 வயதிலேயே சின்னத்திரை நடிகையாக மாறிய ஷிவானி நாராயணன் தனது 19 வயதில் பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டு சிங்கப்பெண்ணாக கலக்கினார்.

குவிகிறது வாழ்த்து

குவிகிறது வாழ்த்து

பிக் பாஸ் பிரபலம் ஷிவானி நாராயணன் பிறந்தநாளை முன்னிட்டு பிக் பாஸ் ரசிகர்கள் ஷிவானி நாராயணனுக்கு சிறப்பு பிறந்தநாள் காமன் டிபியை எல்லாம் வெளியிட்டு வாழ்த்தி வருகின்றனர். சீக்கிரமே ஷிவானி நாராயணனை வெள்ளித்திரையில் காண வேண்டும் என்றும் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

அர்ச்சனா வாழ்த்து

அர்ச்சனா வாழ்த்து

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் சக போட்டியாளரான விஜே அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷிவானி மற்றும் சோமசேகருடன் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து ஷிவானி நாராயணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கேக் ஊட்டும் பாலா

கேக் ஊட்டும் பாலா

ஷிவானி நாராயணன் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் பிக் பாஸ் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், பாலாஜி முருகதாஸ் ஷிவானி நாராயணனுக்கு கேக் ஊட்டும் பிரத்யேக புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படம் புதிய போட்டோவா அல்லது வேறு ஒரு பிறந்தநாள் விழாவில் ஷிவானிக்கு பாலா கேக் ஊட்டிய புகைப்படமா? என்பது தெரியவில்லை.

வைரல் வீடியோ

விஜய் டிவியின் பிக் பாஸ் ஜோடிகள் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஷிவானி நாராயணன் சமீபத்தில் பாலாஜி முருகதாஸ் உடன் இணைந்து ஜோடி போட்டு எடுத்த வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலான நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் இருவரும் ஜோடி போட்டு சுத்தி வருவது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

அடுத்த பார்ட்டி

அடுத்த பார்ட்டி

இந்த சீசன் பிக் பாஸ் பிரபலங்கள் அனைவருமே நிகழ்ச்சி முடிந்த பின்னரும் ஒரே குடும்பமாகவே உள்ளனர். சோமசேகர் பிறந்தநாள், ஷிவானி நாராயணனின் செல்ல நாய்க்குட்டி பிறந்தநாள், பாலாஜி முருகதாஸ் பிறந்தநாள் என ஏகப்பட்ட பார்ட்டிகளை பலரும் இணைந்து கொண்டாடி வரும் நிலையில், ஷிவானி நாராயணனின் இன்றைய பிறந்தநாள் விழாவிலும் ஏகப்பட்ட பிக் பாஸ் பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X