ஒருத்தராச்சும் எனக்கு சப்போர்ட் பண்ணி பேசுனாங்களா.. ஷிவானியிடம் புலம்பி கண்ணீர் விடும் பாலா.. ஏன்?
சென்னை: இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது புரமோ தற்போது வெளியாகி உள்ளது.
எல்லோரையும் கதறவிடும் பாலாஜி முருகதாஸ், கமல் போட்டுக் காட்டிய குறும்படத்தால் ரொம்பவே வருத்தப்பட்டு ஃபீல் பண்ணி கண்ணீர் சிந்தும் காட்சிகள் புரமோவில் இடம்பெற்றுள்ளன.
ஷிவானியிடம் அழுது புலம்பும் பாலா, ஒருத்தராச்சும் எனக்கு சப்போர்ட் பண்ணி பேசுனாங்களா என்கிற கேள்வியும் எழுப்பி உள்ளார்.

கமல் போட்ட குறும்படம்
கடந்த வாரம் நடந்த கேப்டன் டாஸ்க்கில் ஜித்தன் ரமேஷ் கேப்டனாக தேர்வானார். ஆனால், அதனை ஏற்றுக் கொள்ளாமல், ஆரி அவருக்கு எதிராக சதி செய்து விட்டார் என பாலாஜி முருகதாஸ் பிரச்சனை பண்ணார். சனிக்கிழமை அன்று குறும்படம் போட்டுக் காட்டிய கமல், பாலாவை வச்சு வெளுத்து வாங்கி விட்டார்.

ஜோக் இல்லை
இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள மூன்றாவது புரமோவில் ஷிவானியுடன் அமர்ந்து பேசும் பாலா, குறும்படம் ஜோக் இல்லை.. நான் தான் கேட்டேன்.. கமல் சார் என்ன ரோஸ்ட் பண்ணும் போது பார்த்துட்டுத்தான இருந்தீங்க, எனக்கு மென்டல் பிளாக் இருக்குன்னு சொன்னப்போ என ஷிவானியிடம் அடுக்கடுக்காக கேள்விகளை அடுக்கி வருகிறார்.

அதிகபிரசங்கி மாதிரி
அந்த இடத்துல யாராவது சொன்னாங்களா, பாலா விளையாடின சைடு தெரியல என, அந்த இடத்துல எவ்ளோ அதிகபிரசங்கி மாதிரி தெரிஞ்சிருப்பேன்.. ஒருத்தராச்சும் சப்போர்ட் பண்ணி பேசுனாங்களா அந்த இடத்துல, அது என் மனசை எவ்ளோ குத்திட்டு இருக்கு என ஷிவானியும் பாலாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை என்கிற காண்டில் கொந்தளித்துள்ளார்.

மீள முடியல
சனிக்கிழமை நடந்த தரமான சம்பவத்தில் இருந்து தன்னால் மீண்டு வர முடியவில்லை என கண்கலங்கி பாலா அழுது ஷிவானியிடம் புலம்பும் இந்த மூன்றாவது புரமோ பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது. பாலா அழும் போது சோக பிஜிஎம்லாம் போட்டு எடிட்டர் அவரது வேலையைக் காட்டி உள்ளார்.

ஏன் திடீர்னு
ரோபோ டாஸ்க் போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் ஏன் திடீர்னு பாலா சனிக்கிழமை நடந்த விஷயத்தை கிளறுகிறார் என்கிற கேள்வி ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. இன்னைக்கு ரோபோவாக இருக்கும் பாலாவை அர்ச்சனா கேங் சனிக்கிழமை நடந்த ரோஸ்ட் விஷயத்தை பேசி அடித்து நொறுக்கி இருப்பார்கள் என்றே தெரிகிறது. நிகழ்ச்சிக்கு வெயிட்டிங்.

ரசிகர்கள் ஹேப்பி
பொதுவா ஒருத்தர் அழுதால் யாரும் சந்தோஷப்பட மாட்டார்கள்.. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில், பாலா அழுதால் திடீரென ரசிகர்களுக்கு எங்கிருந்து தான் அவ்வளவு சந்தோஷம் வருகிறது என்றே தெரியவில்லை. கமெண்ட் செக்ஷனில் பங்கமாக கலாய்த்தும் அவருக்கு அட்வைஸ் கொடுத்தும் வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











