For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பாலாவுக்கு இதே பொழப்பா போச்சு.. முறைக்கிறது அப்புறம் மண்டியிடுறது.. வேற ஸ்க்ரிப்ட்டே இல்லையா பாஸ்?

  |

  சென்னை: டிக்கெட் டு ஃபினாலேவின் இறுதி டாஸ்க்கில், ஆரம்பத்திலேயே எல்லாவித ரூல்ஸையும் பிரேக் பண்ணிட்டு, அப்புறம் ஆரி கால தூக்கிட்டீங்கனு, அவரை சீண்டி அசிங்கப்பட்டார் பாலா.

  சென்னை: பாலாவுக்கு வேற வேலையே இல்லை.. கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்..!

  ஆரி பாலாவை புரவோக் பண்ணியதாக ஷிவானி சொன்னார். ஆனால், ஷோவை பார்த்த ரசிகர்களுக்கு, பாலா தான் ஆரியை புரவோக் பண்ணி அவுட்டாக்கினார் என்று தெரிகிறது.

  மீண்டும் ஆரிக்கு எதிராக கத்திய பாலா, சண்டை போட்டு விட்டு, மறுபடியும் ஆரியை கட்டித் தழுவி மன்னிப்பு கேட்பது பாலாவால் மட்டுமே முடியும்.

  மீண்டும் முட்டிக்கிச்சு.. புரவோக் ஆகாத பாலா.. இப்படி சண்டைப் போட்டு போய்ட்டாங்களே.. அன்சீன் புரமோ!

  கயிறை விட்றக்கூடாது

  கயிறை விட்றக்கூடாது

  டிக்கெட் டு ஃபினாலேவின் இறுதி சுற்றாக கயிறை விடாமல், காலை தூக்காமல், ஒரு கையை எடுக்காமல் விளையாட வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அனைத்து போட்டியாளர்களும் தங்களின் தனித்துவத்தை நிரூபிக்கும் விதமாக இந்த போட்டி அமைந்தது. ஷிவானி, ரம்யா, ரியோ, சோம், கேபி, ஆரி மற்றும் பாலா என அனைவரும் பங்கேற்றனர்.

  மன உளைச்சல்

  மன உளைச்சல்

  டிக்கெட் டு ஃபினாலேவை வெற்றி பெறணும்னு நினைத்த பாலாவுக்கு போதுமான புள்ளிகள் கிடைக்காமல் போனதே, மிகப்பெரிய மன உளைச்சலாக இருந்தது. சோமசேகர், ரியோ லீடிங்கில் இருப்பதை கண்டு மனதளவில் மிகப்பெரிய பொறாமைப்பட்டார் பாலா. பிசிக்கல் டாஸ்க் கொடுத்தால் ஜெயித்து விடலாம் என நினைத்தவருக்கு பெரிய பல்பு கிடைத்தது.

  முதலிலே அவுட்

  முதலிலே அவுட்

  பஸர் அடித்த சில நிமிடங்களிலேயே ஒரு கையை எடுத்து பாலா அவுட் ஆகிட்டார். ரியோ மற்றும் ஆரி அதனை குறிப்பிட்டனர். ஆனால், ரூல்ஸ் தெரியாமல் எடுத்தேன் என சொல்லி விட்டு தனது ஆட்டத்தை தொடர்ந்தார். பின்னர், ரியோவும் அவுட்டானார். ஆனால், யாரும் விலகாமல் பிக் பாஸிடம் கோரிக்கை வைத்தனர். எப்படியோ அவர் சொல்ல போவதில்லை என்பது தெரிந்தபோதும் தொடர்ந்தனர்.

  கால தூக்கிட்டீங்க ஆரி

  கால தூக்கிட்டீங்க ஆரி

  அடுத்து ஆரி தனது காலை நகர்த்தி வைக்க, கால தூக்கிட்டீங்க ஆரி என பாலா அவரிடம் வீண் வம்புக்கு சென்றார். அவர், இல்லை என மறுத்தார். கால நகர்த்தினேன், தூக்கல என்றார். தொடர்ந்து ஆரியை அவுட் என சொன்னதும், நீயும் தான் அவுட், ஃபினாலே வந்துட்டு, ரூல்ஸ் தெரியாமல் கை எடுத்தேன்னு சொல்ற என ஆரி எகிற, கடுப்பான பாலா கயிற்றை விட்டு விட்டு கீழே இறங்கினார்.

  ஆரி அப்செட்

  ஆரி அப்செட்

  புரவோக் ஆகாத பாலா, பாலா என ஹவுஸ்மேட்கள் அனைவரும் பாலாவுக்கு ஆதரவாக பேசிய நிலையில், ஆரி அவுட் என தொடர்ந்து பாலா புலம்ப, ஆரியும் கயிற்றை வேண்டுமென்றே விட்டு அவுட் ஆனார். உடனே ஏன் ஆரி என ரியோ, சோம் கேட்டனர். அவன் செஞ்சது தப்புன்னு சொன்னா, அப்புறம் நான் செஞ்சதும் தப்பு தான் என்று நகர்ந்தார்.

  ரத்தம், தக்காளி சட்னி

  ரத்தம், தக்காளி சட்னி

  மீண்டும் ஆரியிடம் கோபத்தை வெளிப்படுத்திய பாலா, என்னோட ஸ்போர்ட்ஸ்மேன் ஷிப்பை எப்படி நீங்க குறை சொல்லலாம். உங்களுக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா, என்ன மட்டும் ஏன் கேட்டீங்க, மத்தவங்களை ஏன் கேட்கல என்று பாலா கத்தியதும், நீ தான் தம்பி முதல்ல ஆரமிச்ச என பாலாவின் வாயை ஒரே வார்த்தையில் அடைத்தார் ஆரி.

  ஏமாற்றிய சோம்

  ஏமாற்றிய சோம்

  ஆரி பண்ணது பிடிக்காமல், ஏற்கனவே அவுட்டான ரியோ, கேபி எல்லாம் ஒருவர் பின் ஒருவராக கயிற்றை விட்டு வந்தனர். சோமசேகர், தனது கால்களை பெடஸ்டலை தாண்டி வைத்துக் கொண்டு ஷூ பெருசு, கால் உள்ள தான் இருக்கு என சின்னப்புள்ளத்தனமா பேசி வாதாடினார். வாதம் பெரிதாக சோமும் வெளியேற, ரியோ பயங்கரமாக தனது கோபத்தை வெளிப்படுத்தி கத்தினார்.

  மண்டியிட்ட பாலா

  மண்டியிட்ட பாலா

  ஆரியிடம் அப்படி கத்தி பேசிய பாலா, அடுத்த நொடியே சனிக்கிழமை எபிசோடில் கமல் திட்டுவாரே என்கிற பயம் வந்ததன் காரணமாக அப்படியே நல்லவனாக மாறி, வழக்கம் போல ஆரி முன்னாடி மண்டியிட்டு, தனது தவறை உணர்ந்து கொண்டு, அவரை கட்டியணைத்து கொஞ்சியதை பார்த்த ரசிகர்கள், இவனுக்கு வேற பொழப்பே இல்லையா என திட்டி வருகின்றனர்.

  English summary
  Balaji Murugadoss fight with Aari and say Sorry immediately in rope task. Bigg Boss Tamil 4 fans slammed Bala for his routine reaction.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X